Published:Updated:

`பேபி டிரைவர்' 2-ம் பாகம் ஆன் தி வே ; ஆனா டைட்டில் வேற!

Baby Driver
Baby Driver

2017-ல் வெளியான படம் 'பேபி டிரைவர்'. ஏன்சல் எல்கார்ட் நடிப்பில் எட்கர் ரைட் இயக்கத்தில் வெளியான இப்படம், ரசிகர்களிடைய நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் அப்படத்தின் ஸ்க்ரிப்ட், ஏன்சல் எல்கார்ட்டைத் தேடி வந்திருப்பதாகவும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Ansel Elgort
Ansel Elgort
Baby Driver

2012-ல் வெளியான 'The fault in our stars' எனும் நாவலைத் தழுவி அதே டைட்டிலில் 2014-ல் படமாக வெளிவந்தது. வசூல் ரீதியாக மாபெறும் ஹிட்டடித்த இப்படம், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பினைப் பெற்றது. அதுமட்டுமன்றி அதில் கதாநாயகனாக நடித்த ஏன்சல் எட்கார்டின் நடிப்பும் ஹாலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. அதன் பிறகு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். அந்த வரிசையில் 2017-ல் வெளிவந்த படம்தான், 'பேபி டிரைவர்'. நடிப்பில் தன்னுடைய வேறொரு பரிமாணத்தை அப்படத்தின் மூலம் காட்டியிருந்தார், ஏன்சல்.

கிரைம் ஹெய்ஸ்ட் டிராமா ஜானரில் வெளியான இப்படம், பட்ஜெட்டைவிட பல கோடி வசூலைக் குவித்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான எழுத்துப் பணிகள் ஆரம்பித்துவிட்டன. இது குறித்து பேசிய நாயகன் ஏன்சல் எல்கார்ட், ` பேபி டிரைவர் 2-ம் பாகத்தின் ஸ்க்ரிப்ட்டை இயக்குநர் என்னிடம் கொடுத்தார். விரைவில் படத்துக்கான வேலைகள் தொடங்கிவிடும் என நம்புகிறேன். ஆனா, இந்தப் படம் 'பேபி டிரைவர்'ங்கிற டைட்டில்ல இருக்காது. இதுக்கு மேல இயக்குநர்தான் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடணும்' எனப் பேசியிருந்தார். ஆக, `பேபி டிரைவர்' ரசிகர்களுக்கு அதன் இரண்டாம் பாகம் ஆன் தி வே!

அடுத்த கட்டுரைக்கு