Published:Updated:

Ben Affleck - Jennifer Lopez திருமணம்: 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்த காதல் ஜோடி!

Ben Affleck - Jennifer Lopez

பென் அஃப்லெக், நடிகை ஆனா டி ஆர்ம்ஸுடன் டேட்டிங்கில் இருந்தார். ஆனால், அந்த உறவும் திருமணம் நோக்கி நகரவில்லை. அதைத் தொடர்ந்து ஜெனிஃபர் லோபஸ் மற்றும் பென் அஃப்லெக் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர் என்று பேசப்பட்டு வந்தது.

Ben Affleck - Jennifer Lopez திருமணம்: 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்த காதல் ஜோடி!

பென் அஃப்லெக், நடிகை ஆனா டி ஆர்ம்ஸுடன் டேட்டிங்கில் இருந்தார். ஆனால், அந்த உறவும் திருமணம் நோக்கி நகரவில்லை. அதைத் தொடர்ந்து ஜெனிஃபர் லோபஸ் மற்றும் பென் அஃப்லெக் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர் என்று பேசப்பட்டு வந்தது.

Published:Updated:
Ben Affleck - Jennifer Lopez
ஹாலிவுட்டின் பிரபல நடிகரான பென் அஃப்லெக்கும் பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸும் லாஸ் வேகாஸில் கடந்த சனிக்கிழமை அன்று திருமணம் செய்து கொண்டனர். நீதிமன்ற பதிவுகளின்படி, பென் அஃப்லெக் - ஜெனிபர் லோபஸ் ஜோடி என்வி கிளார்க் கவுன்ட்டியில் திருமண உரிமத்தைப் பெற்றனர்.

இவர்கள் இருவரும் முதன் முதலில் 2002-ல் 'Gigli' என்ற சர்ச்சையான திரைப்படத்தின் செட்டில்தான் சந்தித்துக் கொண்டனர். Gigli, Jersey Girl ஆகிய படங்களில் ஒன்றாக நடித்துக் காதலித்த இவர்கள் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதன் பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக இருவரும் பிரிந்தனர். ஜெனிபர் லோபஸ் அதே ஆண்டு மார்க் ஆண்டனியை மணந்தார். இதற்கிடையில், பென் அஃப்லெக் 2005 இல் ஜெனிஃபர் கார்னரை மணந்தார். இருவரும் வெவ்வேறு திருமணங்களைச் செய்துகொண்டனர். ஆனால் இருவரும் சில வருடங்களில் தாங்கள் திருமணம் செய்து கொண்டவர்களைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்தனர்.

பென் அஃப்லெக், ஜெனிபர் லோபஸ்
பென் அஃப்லெக், ஜெனிபர் லோபஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பின்னர் பென் அஃப்லெக், புகழ்பெற்ற நடிகையான ஆனா டி ஆர்ம்ஸுடன் டேட்டிங்கில் இருந்தார். ஆனால், அந்த உறவும் திருமணம் நோக்கி நகரவில்லை. அதைத் தொடர்ந்து ஜெனிஃபர் லோபஸ் மற்றும் பென் அஃப்லெக் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர் என்று பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. 52 வயதான ஜெனிபர் லோபஸ் மற்றும் 49 வயதான பென் அஃப்லெக், கடந்த ஏப்ரல் மாதம் தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவித்தனர். தற்பொழுது லோபஸ் அவர்களின் திருமணத்தை ஞாயிற்றுக்கிழமை தனது ரசிகர்களுக்கான செய்தி மடலில் “We did it” என்று அறிவித்திருக்கிறார். லாஸ் வேகாஸில் நடைபெற்ற இவர்களது திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வாழ்த்துகள் பென் - ஜெனி (Bennifer)!