Published:Updated:

`தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றவே இந்த முடிவு!' - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிராட் பிட்

Brad Pitt

இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகவிருக்கும் 'ஆட் அஸ்ட்ரா' எனும் படத்தில் நாயகனாக நடிக்கிறார், பிராட் பிட். இதுவே அவர் நடிக்கும் கடைசிப் படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

`தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றவே இந்த முடிவு!' - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிராட் பிட்

இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகவிருக்கும் 'ஆட் அஸ்ட்ரா' எனும் படத்தில் நாயகனாக நடிக்கிறார், பிராட் பிட். இதுவே அவர் நடிக்கும் கடைசிப் படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Published:Updated:
Brad Pitt

ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிராட் பிட், நடிப்பதிலிருந்து ஓய்வெடுக்கப்போவதாக தற்போது அறிவித்துள்ளார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மீதும், தனிப்பட்ட வாழ்க்கை மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியிருக்கிறார் பிராட்.

A scene from Once Upon a Time in Hollywood
A scene from Once Upon a Time in Hollywood

'ஃபைட் க்ளப்', 'Mr & Mrs. ஸ்மித்' 'ஓஷன்ஸ்' படத்தொடர் எனப் பல ஹிட் படங்களில் நடித்துக் கலக்கியவர், பிராட் பிட். கடந்த மாதம் வெளியான, இயக்குநர் குவின்டின் டரன்டீனோவின் 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்' படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகவிருக்கும் 'ஆட் அஸ்ட்ரா' படத்திலும் நாயகனாக நடிக்கிறார் பிராட். இதுவே, அவர் நடிக்கும் கடைசிப் படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், பிராட் தனது தயாரிப்பு நிறுவனமான 'பிளான் பி' பேனரில் அடுத்த சில ஆண்டுகளுக்கு படங்கள் தயாரித்து வெளியிடலாம் என முடிவெடுத்திருப்பதாகவும் தெரிகிறது. வேண்டுமென்றால், இந்தப் படங்களில் கெளரவத் தோற்றத்தில் அவர் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

Brad Pitt in a sculpturing session
Brad Pitt in a sculpturing session

இதுகுறித்து அமெரிக்க நாளிதழிடம் பேசிய பிராட், "நிறைய நடித்துவிட்டேன். இனி தயாரிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரம் என நினைக்கிறேன். மேலும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஆர்வத்துக்கும் என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. சிற்பக்கலையிலும் புவி வடிவமைப்பிலும் எனக்கு நிறைய ஆர்வமிருக்கிறது. அதனால், அவற்றை கற்றுக்கொள்ளலாமென முடிவெடுத்துள்ளேன்" என்கிறார்.