Published:Updated:

ஸ்பைடர்மேன், அவெஞ்சர்களுக்கு சவால்விடும் சீனாவின் `வெறித்தன' சூப்பர் ஹீரோ... யார் இந்த நேஷா? #Nezha

இந்தப் படத்தின் அடிப்படைக் கருத்தியல், 'சுற்றி எதிர்மறையான எண்ணங்களுடன் சமூகக் கட்டமைப்பு உன்னை அச்சுறுத்தினாலும், நீ நேர்மறையாக இரு என்பதுதான்'. கிட்டத்தட்ட 'ஜோக்கர்' படத்தின் தலைகீழ் வடிவம் எனலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தன்னால் இயலாத செயல் ஒன்றைத் திரையில் ஒருவர் செய்யும்போது, அதன் மீது எளிதில் ஈர்க்கப்படுவதால்தான் சூப்பர் ஹீரோ படங்களுக்கு எல்லா காலக்கட்டங்களிலும் வெற்றிபெறும் வல்லமை இருந்துகொண்டே இருக்கிறது. மனிதத் தன்மைக்கும் அப்பாற்பட்ட சக்திகள் கொண்ட சூப்பர் ஹீரோக்கள், புராணங்களிலிருந்து எடுத்து மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட சூப்பர் ஹீரோக்கள் என இங்கே எல்லா வகை ஹீரோக்களுக்குமே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதை வைத்து அதிகமாக திரைத்துறையில் வணிக ரீதியில் வெற்றியடைந்தது, மார்வெல், டி.சி போன்ற அமெரிக்க காமிக்ஸ் நிறுவனங்கள்.

Ne Zha - நேஷா
Ne Zha - நேஷா
`மார்வெல் எடுப்பதெல்லாம் படமே இல்லை!' - மார்ட்டின் ஸ்கார்சஸி ஆவேசம்

அதேவேளையில், உலகின் பிற பகுதிகளிலும் பல சூப்பர் ஹீரோ கதைகள் படமாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. 'கிரிஷ்' அதற்கு ஒரு பெரிய உதாரணம். என்றாலும், ஹாலிவுட்டில், குறிப்பாக டிஸ்னி தயாரிப்பில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்கள் அளவுக்கு, மற்ற மொழிகளில் உருவாகும் படங்களுக்குப் பெரிய வியாபாரம் இருந்ததில்லை. இப்போது டிஸ்னிக்கும் சவால் விடுமளவுக்கு உருவாகி வெளியாகியிருக்கும் படம்தான் சீனாவின் 'நேஷா'.

பதினாறாம் நூற்றாண்டில் வெளியான ஒரு மாண்டரின் மொழி நாவிலில் தோன்றிய கற்பனைக் கதாபாத்திரத்தின் கதையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படம் கடந்த ஜூலையில சீனாவிலும், ஆகஸ்டில் வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் வெளியாகி இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை பல வகை சூப்பர் ஹீரோ படங்களை சீன திரைத்துறை வெளியிட்டிருக்கின்றன. ஆனால் 'நேஷா'வுக்குக் கிடைத்திருக்கும் இந்த உலக அளவிலான வரவேற்போ, அதிலும் குறிப்பாக காமிக் கதாபாத்திரங்களுக்குப் பெயர்போன வட அமெரிக்காவில் கிடைத்திருக்கும் வரவேற்போ, அவற்றுக்குக் கிடைத்ததில்லை. இதுவரை இந்தப் படம் 750 மில்லியன் டாலர்கள் வரை வசூல் செய்துள்ளது. இது அண்மையில் வெளியான டி.சியின் 'ஜோக்கர்' படத்துக்கு நிகரான வசூல்.

Ne Zha - நேஷா
Ne Zha - நேஷா

இவை எல்லாவற்றுக்கும் காரணம், சூப்பர் ஹீரோ என்பதையும் கடந்து நேஷா படத்தில் பேசப்பட்ட உளவியல். பேரண்டிங் குறித்த படங்கள் முன்புபோல் இந்தக் காலத்தில் வெளியாவதில்லை என்ற குறை தற்கால திரைப்பட ரசிகர்கள் முவைக்கும் பெரும் குற்றச்சாட்டாக இருக்கிறது. உலகமயமாகி வரும் சமூகங்களில் குழந்தை வளர்ப்பு குறித்த படங்களுக்கான வணிகம் அத்தனை சிறப்பானதாக இருக்காது என்ற முன்முடிவில் அந்த வகைப் படங்களைத் தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வருவதில்லை என்கிறார்கள், அவர்கள். அந்த வகையில், இப்போது 'நேஷா' அந்த முன்முடிவைச் சுக்குநூறாக்கிவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு சூப்பர் ஹீரோ படத்துக்குள் பேரண்டிங்கைப் பற்றி இவ்வளவு ஆழமாகப் பேசமுடியுமா என்றால், முடியும் என்கிறது 'நேஷா'வின் திரைக்கதை. தன்னுடைய மூன்றாவது வயது வரும்போது, அந்தப் பிறந்தநாளன்று மின்னல் தாக்கி தன் குழந்தை இறந்துவிடும் எனத் தெரிந்ததும் அந்தக் குழந்தையின் அம்மாவும் அப்பாவும் அந்த மூன்றாண்டுகளில் அதை எப்படி வளர்க்கிறார்கள், அந்த மரணத்திலிருந்து அதை மீட்க எப்படிப்பட்ட தியாகம் செய்கிறார்கள் என்பதை முதன்மைக் கதையாகப் பேசுகிறது, நேஷா. அதற்குப் பின்னர்தான் நல்ல சக்தி, தீய சக்தி, மான்ஸ்டர், என வழக்கமான சூப்பர் ஹீரோ படங்களின் மற்ற அம்சங்களைக் கலக்கிறார்கள்.

Ne Zha - நேஷா
Ne Zha - நேஷா
உங்களுக்கு இது புரிய வாய்ப்பே இல்லை!

இந்தப் படத்தின் அடிப்படைக் கருத்தியல், 'சுற்றி எதிர்மறையான எண்ணங்களுடன் சமூகக் கட்டமைப்பு உன்னை அச்சுறுத்தினாலும், நீ நேர்மறையாக இரு என்பதுதான்'. கிட்டத்தட்ட 'ஜோக்கர்' படத்தின் தலைகீழ் வடிவம் எனலாம். ஜோக்கரில் சமூகத்தால் நேரும் அவமானங்கள் எப்படி ஒருவனை வில்லனாக்குகிறது என்பதைப் பேசியிருப்பார்கள். இதில், தன்னைத் தள்ளிவைக்கும், விரட்டியடிக்கும் சமூகத்தைக் காப்பாற்ற தன் உயிரையே தியாகம் செய்து ஒருவன் எப்படி சூப்பர் ஹீரோவாகிறான் என்பதை காட்டுகிறார்கள்.

இப்படி சூப்பர் ஹீரோ படங்களின் டெம்ப்ளேட்டுக்குள் அடங்காத ஒரு கதையை ஒரு முழுநீள சூப்பர் ஹீரோ படமாக்கியிருப்பதுதான் இதை எழுதி இயக்கிய ஜியாயோஸி செய்திருக்கும் மிகப்பெரிய திரைக்கதை பரிசோதனை. அந்த பரிசோதனை வெற்றியும் பெற்றுள்ளது. மேலும், படத்தின் அடுத்த இரண்டு பாகங்களுக்கான வேலைகளிலும் அவர் இறங்கிவிட்டாராம்.

இப்போது இந்தப் படத்தின் சீனா, அமெரிக்கா வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவில் எப்போது வெளியாகும் என இந்தியாவின் மார்வெல் மற்றும் டி.சி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர். அதன் தயாரிப்பு நிறுவனத்துக்கும் அதே எதிர்ப்பார்ப்புதான் இருக்கிறது. இந்தியா போன்ற திரை ரசிகர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் வெளியிடப்பட்டால் இந்த 700 மில்லியன் டாலர் கண்டிப்பாக 1 பில்லியனாக உயர வாய்ப்பிருக்கிறது. அப்படி ஆகுமாயின், சீனாவின் முதல் பில்லியன் டாலர் படம் என்ற சாதனையை இது உருவாக்கிவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு