Election bannerElection banner
Published:Updated:

`கிளியோபாட்ராவுக்கு வெள்ளையின ஹீரோயின் ஏன்?' - கேல் கடோட் படத்திற்கு ஹாலிவுட்டில் எதிர்ப்பு

கேல் கடோட்
கேல் கடோட்

கிளியோபாட்ராவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் 'வொண்டர் உமன்' படத்தின் நாயகியான கேல் கடோட் நடிப்பதற்கு ஹாலிவுட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது. இன்னொரு பக்கம், எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ராவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் 'வொண்டர் உமன்' படத்தின் நாயகியான கேல் கடோட் நடிப்பதற்கு ஹாலிவுட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கிளியோபாட்ரா வெள்ளையாக இருக்கமாட்டார்

ஆஸ்திரேலியன் அகாடமி ஆஃப் சயின்ஸை சேர்ந்த ஹில்கி துயர் போன்ற பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், 'கறுப்பழகி கிளியோபாட்ரா வெள்ளையாக இருக்கமாட்டார்' என்று அதிர்ச்சியை தெரிவிக்கிறார்கள். 'கிளியோபாட்ராவின் அப்பா மெசிடோனியன் கிரீக், சிரியா அல்லது பெர்சியா நாட்டை சேர்ந்தவர், கிளியோபாட்ராவின் அம்மா மெம்பிஸ் பாதிரியார் குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் கிளியோபாட்ரா 50% எகிப்திய வழித்தோன்றல்' என்கிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.

ஹாலிவுட், கிளியோபாட்ராவை வெள்ளை நிறத்தில் இருப்பவராக சித்தரிப்பதன் மூலம், வரலாற்றிற்கு வெள்ளையடிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கிளியோபாட்ராவாக இதற்கு முன் நடித்துள்ள நடிகைகளான எலிசபத் டெய்லர், ஹில்டிகார்ட் நெய்ல், குலௌடி கால்பர்ட் ஆகியோர் மூலம் கிளியோபாட்ரா ஒரு வெள்ளை பேரழகியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது, ஆஸ்கேன்ஸாய் ஜூயிஸ் பாரம்பர்யத்தை சேர்ந்த கேல் கடோட் எகிப்தியன் பேரழகியாக நடிப்பது, வெள்ளை அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப் பழக்கத்தின் தொடர்ச்சியாக உள்ளது என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.

கிளியோபாட்ரா திரைப்படம்
கிளியோபாட்ரா திரைப்படம்

'சமீபத்தில் வெளியான 'அலாவுதின்' படத்தில் ஜாஸ்மினாக ஆங்கில மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நவாமி ஸ்காட் நடித்துள்ளது ஒரு நல்ல மாற்றம். என்றாலும், ஹாலிவுட்டில் வெள்ளை இனத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, ஆப்பிரிக்க நாட்டு வரலாற்று கதைகளையும் வெள்ளை நடிகர்களையே கொண்டு படமாக்குவது, ஹாலிவுட் கறுப்பினத்தவர்களை ஒதுக்குவதற்கு சமமாகும்' என்று பலதரப்பட்ட மக்களும் கண்டனங்களை பதிவு செய்கின்றனர்.

படத்திற்கு ஏற்ற நடிகைகளை தேர்வு செய்யாமல், ஹாலிவுட் வெள்ளையினத்தவர்களுக்கும், வெள்ளை நிறத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க முற்படக்கூடாது என்பதே அனைவரின் கருத்து.

கிளியோபட்ரா என்றாலே கறுப்பழகிதானே? உண்மையை திரையில் திரிக்கலாமா?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு