Published:Updated:

காலத்துக்குள் காலத்துக்குள் காலத்துக்குள் காலம்!

டார்க்
பிரீமியம் ஸ்டோரி
News
டார்க்

வெப் சீரிஸ் அதன் எல்லைகளை உடைத்து ஹாலிவுட் படங்களுக்கு நிகராகச் செல்ல ஆரம்பித்துவிட்டன என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக இருக்கின்றன ‘டார்க்’கின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும்.

விண்டன் நகரின் அந்த முக்கோணச் சாலைகள் சந்திப்பு, அந்த நகரின் முகப்பாகக் காட்டப்படும் அணுமின் நிலையத்தின் இரண்டு பெரிய புகைபோக்கிகள், கேட்பாரற்றுக் கிடக்கும் குகை, அதனுள் புதைந்திருக்கும் ரகசியங்கள்...

இவை அனைத்தும் இதுவரை இந்த உலகம் அறிந்து வைத்திருக்கும் அறிவியலையே புரட்டிப்போடும் ஆற்றல் வாய்ந்தவை. இந்த நொடி வரை நம்மை ஆண்டு வரும் காலத்தை நாம் ஆளமுடிந்தால்? அதை நம் வசதிக்கேற்ப வளைக்க முடிந்தால்? பின், நாம்தானே கடவுள்? நெட்ஃப்ளிக்ஸின் முதல் ஜெர்மன் வெப் சிரீஸான ‘டார்க்’, இந்த ‘நேர’ விளையாட்டில் (டைம் டிராவல்) இதுவரை நாம் பார்த்திராத, புரிந்துகொள்ளக் கடினமான, புரிந்தால் பிரமிப்பூட்டும் கதை ஒன்றைச் சொல்கிறது. ‘ப்ரிடெஸ்டினேசன்’, ‘ப்ரைமர்’, நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லார்’ போன்ற படங்களின் வரிசையில் முக்கியமான இடத்தில் வந்து அமர்ந்திருக்கிறது ‘டார்க்.’

‘டார்க்’ தொடரின் டைம் டிராவல் லாஜிக் மற்றும் மேஜிக்கைப் புரிந்துகொள்ள ‘Bootstrap Paradox’ பற்றி அறிந்துகொள்வது அவசியம். காலப்பயணத்தைத் தொடக்கம், முடிவு என்று இரண்டுமே இல்லாமல் சுற்றும் சக்கரமாக வைத்துக்கொண்டு அதனுள் டைம் டிராவல் செய்து விளையாடியிருக்கிறார்கள். அதுவும் கிட்டத் தட்ட அனைத்துக் கதாபாத்தி ரங்களுமே டைம் டிராவல் செய்கின்றன. கான்வால்ட், நீல்சன், டாப்லர், டீடமேன் என நான்கு குடும்பங்களின் நான்கு தலைமுறையின் கதைகள் எப்படி டைம் டிராவலால் பின்னிப்பிணைந்து இருக்கின்றன என்ற சுவாரஸ்யம் ஒருபுறம் என்றால், அவர்களின் ரகசியங்கள், உடைக்கும் மரபுகள், அது கேள்வி கேட்கும் இலக்கணங்கள் என அறிவியல் கதையினுள் தத்துவார்த்தங்கள் இன்னொரு புறம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
வெப் சீரிஸ்
வெப் சீரிஸ்

2019-ம் ஆண்டு. ஜோனாஸ் கான்வால்ட்டின் தந்தை மைக்கேல் கான்வால்ட், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். பின்னொரு நாளில் ஜோனாஸ் தன் நண்பர்களுடன் குகை ஒன்றின் அருகே செல்ல, அவன் காதலி மார்த்தா நீல்சனின் தம்பி மிக்கேல் நீல்சன் காணாமல்போகிறான். ஒரு வழியாகப் போராட்டத்துக்குப் பிறகு குகையினுள் புகுந்து வெளியே வருகிறான் மிக்கேல். அவன் வெளியே வந்த வருடம் 1986. மீண்டும் நிகழ்காலத்துக்குத் திரும்ப முடியாத சிறுவன் மிக்கேலை அங்கே ஜோனாஸின் பாட்டி தத்தெடுத்து வளர்க்கிறார். அந்த மிக்கேல்தான் பின்னாளில் மைக்கேலாகி ஜோனாஸின் தந்தையும் ஆகிறார். அதாவது ஜோனாஸின் காதலியின் தம்பிதான் உண்மையில் ஜோனாஸின் அப்பா! ஒருவேளை மிக்கேல் அன்று காணாமல்போய் 1986-க்குச் செல்லாமல் இருந்திந்தால், 2019-ல் ஜோனாஸ் என்ற ஒருவன் இருந்திருக்கவே மாட்டான். சிக்கலான டைம் டிராவல், இப்படியொரு குழப்பமான உறவை உருவாக்குகிறது. இப்படி நான்கு குடும்பத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கும் ஒரு முடிச்சை வைத்திருக்கிறார்கள். அதுவும் ஒரு தலைமுறையை மட்டும் இணைக்காமல் நான்கு தலைமுறைகளின் அத்தனை பேரையும் காலப்பயணத்தின் மூலம் பல்வேறு உறவுச் சிக்கலில் தள்ளியிருக்கிறார்கள்.

காலத்துக்குள் காலத்துக்குள் காலத்துக்குள் காலம்!

வெறும் டைம் டிராவல் வித்தை மட்டும்தானா என்றால், இயற்பியலின் குவாண்டம் பின்னலை (Quantum Entanglement), சுரோடிங்கரின் பூனை (Schrdinger’s cat), கடவுள் துகள் (God Particle), இணைப் பிரபஞ்சங்கள் போன்ற விஷயங்கள், முன்னோடி சயின்ஸ் ஃபிக்ஷன் எழுத்தாளரான H.G.வெல்ஸ்ஸின் ரெஃபரன்ஸ், பைபிளின் ஆதாம் - ஏவாள் கதை எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது திரைக்கதை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெப் சீரிஸ் அதன் எல்லைகளை உடைத்து ஹாலிவுட் படங்களுக்கு நிகராகச் செல்ல ஆரம்பித்துவிட்டன என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக இருக்கின்றன ‘டார்க்’கின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும்.

ஆனால், என்னதான் சுலபமாக விளக்க முயன்றாலும், உன்னிப்பாகக் கவனித்தாலும் பல இடங்களில் நிறுத்தி யோசிக்க வைக்கிறது ‘டார்க்’. நான்கு குடும்பங்கள் என்றாலும் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், டைம்லைன்கள் எனப் பல இடங்கள் குழப்பியடிக்கின்றன. அறிவியலில் ஆரம்பித்து பின்பு ஆதாம் ஏவாள் கதையாக ஆன்மிக அரசியல் செய்ததும் சற்றே உறுத்தல். ஹாயாக செல்போனை நோண்டியவாறே பார்க்கும் ஜாலி கேலி தொடரல்ல என்றாலும், ‘டைம் டிராவல்’ கான்செப்ட்டில் சமகாலத்தில் வந்த சிறந்த படைப்பு ‘டார்க்’ என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.