Published:Updated:

Oscars96: 96வது ஆஸ்கர் விருது விழா படங்கள் சமர்ப்பிக்கும் தேதி, விழா நாள் எப்போது?வெளியான அறிவிப்பு!

2024 ஆஸ்கர்

2023ம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருது விழா கொண்டாட்டத்தின் அலை ஓய்வதற்குள் 2024 ஆண்டு நடைபெறும் 96வது ஆஸ்கர் விழாவிற்கான தேதிகளை அறிவித்துள்ளது ஆஸ்கர் அகாடமி.

Published:Updated:

Oscars96: 96வது ஆஸ்கர் விருது விழா படங்கள் சமர்ப்பிக்கும் தேதி, விழா நாள் எப்போது?வெளியான அறிவிப்பு!

2023ம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருது விழா கொண்டாட்டத்தின் அலை ஓய்வதற்குள் 2024 ஆண்டு நடைபெறும் 96வது ஆஸ்கர் விழாவிற்கான தேதிகளை அறிவித்துள்ளது ஆஸ்கர் அகாடமி.

2024 ஆஸ்கர்
அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விழா கடந்த மார்ச் 13ம் தேதி கோலகலமாக நடைபெற்று முடிந்தது.

இதில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட `The Elephant Whisperers' சிறந்த ஆவணப்படதிற்கான விருதினையும், சிறந்த பாடலுக்கான விருதினை `RRR' படத்தின் `நாட்டு நாட்டு' பாடலும் வென்றிருந்தது. உலகம் முழுவதும் பல திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வென்றிருந்தது. இந்த விருது விழாவை திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்திருந்தினர்.

இந்நிலையில் இந்த கொண்டாட்டத்தின் அலை ஓய்வதற்குள் 2024 ஆண்டு நடைபெறும் 96வது ஆஸ்கர் விழாவிற்கான தேதிகளை அறிவித்துள்ளது ஆஸ்கர் அகாடமி. அந்த அறிவிப்பின்படி 96வது ஆஸ்கர் விழா அடுத்த ஆண்டு (2024) மார்ச் 10ம் தேதி நடைபெறுகிறது.

இவைதவிர அறிவிக்கப்பட்ட தேதிகள்:

*பொது நுழைவு வகைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு: புதன்கிழமை, நவம்பர் 15, 2023.

*கவர்னர்ஸ் விருதுகள்: சனிக்கிழமை, நவம்பர் 18, 2023.

*முதற்கட்ட வாக்குப்பதிவு: வியாழன், டிசம்பர் 18, 2023.

*ஆஸ்கர் ஷார்ட்லிஸ்ட் அறிவிப்பு: வியாழன், டிசம்பர் 21, 2023

*ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகள் அறிவிப்பு: செவ்வாய், ஜனவரி 23, 2024.

*ஆஸ்கர் விருதுகளுகான இறுதி வாக்களிப்பு: வியாழன், பிப்ரவரி 22, 2024.

*96வது ஆஸ்கர் விருதுகள்: ஞாயிறு, மார்ச் 10, 2024.

முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட இந்த 96வது அகாடமி விருதுகளுக்கான இந்த தேதிகள் தேவைக்கேற்றபடி மாற்றப்படலாம் என்றும் ஆஸ்கர் அகாடமி அறிவித்துள்ளது.