Published:Updated:

தனுஷ்: "தென்னிந்திய நடிகர் என்று இனி அழைக்க வேண்டாம்!" ஏன் தெரியுமா?

தனுஷ்

"'தென்னிந்திய நடிகர்' என்று அழைப்பதில் அர்த்தமில்லை. நாங்கள் இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள்" என்று தனுஷ் பேசியிருக்கிறார்.

தனுஷ்: "தென்னிந்திய நடிகர் என்று இனி அழைக்க வேண்டாம்!" ஏன் தெரியுமா?

"'தென்னிந்திய நடிகர்' என்று அழைப்பதில் அர்த்தமில்லை. நாங்கள் இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள்" என்று தனுஷ் பேசியிருக்கிறார்.

Published:Updated:
தனுஷ்

`அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்', `எண்டு கேம்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர்கள் ரூஸோ ப்ரதர்ஸ் (ஆண்டனி & ஜோ) இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `The Gray Man'. முழுக்க முழுக்க ஆக்ஷன்-திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இப்படத்தில், தனுஷ் `அவிக் சான்' (Avik San) என்னும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் உலகின் சிறந்த அசாசின்களில் (Assassin) ஒருவராக நடித்திருக்கிறார். இப்படம் அமெரிக்காவில் ஜூலை 15 அன்று குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் வெளியானது. அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 22-ம் தேதி, உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.

இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் தன்னைத் தென்னிந்திய நடிகர் என்று அழைப்பது பிடிக்காது என்று கூறியிருக்கிறார். 'தி கிரே மேன்' புத்தகத்தில் 'அவிக் சான்' கதாப்பாத்திரத்தின் இனத்தை அதை எழுதிய மார்க் கிரேனி குறிப்பிட்டு இருக்க மாட்டார்.

தனுஷ் | The Gray Man
தனுஷ் | The Gray Man

ஆனால் இந்தப் படத்தில் 'தமிழ் நண்பர்' என்று கிறிஸ் எவென்ஸின் கதாபாத்திரத்தால் தனுஷ் அறிமுகம் செய்யப்படுவார். இது குறித்து பேசிய தனுஷ், "தமிழ் நண்பர் என்று குறிப்பிடுவது தேவையில்லை. படத்தின் சிறப்புக்காக அப்படி ஜோ ருஸ்ஸோ குறிப்பிட்டிருக்கிறார். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் இனி வரும் காலங்களில் இந்த இன அல்லது பிராந்திய அடையாளத்திற்கு கேமராவில் இடமில்லை" என்று கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் 'தென்னிந்திய நடிகர்' என்று குறிப்பிடுவதைப் பற்றி பேசிய தனுஷ், "எங்களைத் தென்னிந்திய நடிகர்கள் அல்லது வட இந்திய நடிகர்கள் என்று அழைக்காமல், இந்திய நடிகர்கள் என்று அழைத்தால் நான் பாராட்டுவேன்" என்றும் பேசியுள்ளார்.

மேலும் தென்னிந்தியர்களுக்கான படம் மற்றும் வட இந்தியர்களுக்கான படம் என்று இல்லாமல் தேசியத் திரைப்படங்கள் என்று அனைவருக்காகவும் திரைப்படங்களை உருவாக்கினால் அது மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

தனுஷ்
தனுஷ்

"நீங்கள் ஒரு நல்ல வேலையைச் செய்தால், உங்கள் வேலையைச் சரியாகச் செய்தால், நீங்கள் அனைவராலும் கவனிக்கப்படுவீர்கள். எனவே, இந்த நேரத்தில் என்னையும் வேறு யாரையும் 'தென்னிந்திய நடிகர்' என்று அழைப்பதில் அர்த்தமில்லை. நாங்கள் இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள்" என்று பேசியிருக்கிறார் தனுஷ்.