Published:Updated:

வெள்ளித்திரையில் 'வளர்ந்த' டோரா! - அணிவகுக்கும் அசத்தல் படங்கள்

டோரா என்றதும் மழலை மொழி பேசும் குட்டிப் பெண்தான் நினைவுக்கு வரும். இந்த டோரா கொஞ்சம் வளர்ந்த பெண். டோராவின் பயணங்களைப் பற்றிய ஹாலிவுட் திரைப்படம்

டோரா
டோரா

அன்றைய (1990-களில்) சுட்டிகளை வாயைப் பிளக்கவைத்த சிறார் திரைப்படங்களை, புதிய தொழில்நுட்பத்தில் கொடுத்து, இன்றைய சுட்டிகளை குஷிப்படுத்துவதுதான் இப்போதைய டிரெண்ட். 'அலாவுதீன்', 'தி லயன் கிங்', 'போக்கிமான்: டிடெக்டிவ் பிகாச்சூ' என ஒவ்வொன்றும் வளர்ந்துவிட்டவர்களுக்கும் நாஸ்டால்ஜியா அனுபவமாக அமைந்தது. இதே பாணியில், அடுத்தடுத்து வரப்போகும் திரைப்படங்களை உங்க டைரியில் குறிச்சு வெச்சுக்கங்க...

டோரா அண்டு தி லாஸ்ட் சிட்டி ஆப் கோல்டு (Dora and the Lost City of Gold)

வெள்ளித்திரையில் 'வளர்ந்த' டோரா! - அணிவகுக்கும் அசத்தல் படங்கள்

டோராவையும் புஜ்ஜியையும் ரசிக்காத தமிழ்நாட்டு குழந்தைகள் மிகக் குறைவு. 20 ஆண்டுகளாகப் பல்வேறு சேனல்களில் டோராவின் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஹிட் லிஸ்ட்டில் உள்ளது. தொலைக்காட்சியில் பயணம் செய்துகொண்டிருந்த டோரா, இப்போது சினிமா வழியே பயணம் செய்ய தயாராகிவிட்டாள். டோரா என்றதும் மழலை மொழி பேசும் குட்டிப் பெண்தான் நினைவுக்கு வரும். இந்த டோரா கொஞ்சம் வளர்ந்த பெண். டோராவின் பயணங்களைப் பற்றிய ஹாலிவுட் திரைப்படம், இன்னும் சில வாரங்களில் வெளிவரவுள்ளது.

சோனிக்: தி ஹெட்ஜ்ஹாக் (Sonic The Hedgehog)

'செகா' என்ற நிறுவனம் வெளியிட்ட வீடியோ கேம், 'சோனிக்: தி ஹெட்ஜ்ஹாக்.' அன்றைய குழந்தைகளிடம் மிகப்பெரிய ஹிட்டானது இந்த வீடியோ கேம். அப்போதே கதையாக மாற்றப்பட்டு, கார்ட்டூன் வடிவத்தில் வெளியானது.

வெள்ளித்திரையில் 'வளர்ந்த' டோரா! - அணிவகுக்கும் அசத்தல் படங்கள்

'ஹெட்ஜ்ஹாக்' என்பவை, முள்ளம்பன்றி வகையைச் சார்ந்தவை. 'சோனிக்' என்ற ஹெட்ஜ்ஹாக்கின் சூப்பர்பவர், அதன் அதீத வேகம். அதைப் பிடிக்க அரசு முயல்கிறது. சூப்பர் வில்லனான டாக்டர் ரோபாட்னிக், அரசுக்கு உதவ வருகிறார். அந்த ஊரின் காவல்துறை அதிகாரியை நண்பனாக்கிக்கொள்ளும் சோனிக், எதிரிகளிடமிருந்து எப்படித் தப்பிக்கிறது என்பதான் கதை.

தி ஆடம்ஸ் ஃபேமிலி (The Addams Family)

நியூயார்க் நகரத்தின் கல்லறைத் தோட்டத்துக்கு அருகில் பேய்களைப் போல வாழும் குடும்பத்தின் கதை. ஹாரர் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப் படைப்பு, திரைப்படமாகவும் அனிமேஷன் தொடராகவும் வெளிவந்தது. தற்போது, இது அனிமேஷன் திரைப்படமாக வெளிவரவுள்ளது.

வெள்ளித்திரையில் 'வளர்ந்த' டோரா! - அணிவகுக்கும் அசத்தல் படங்கள்

> இந்தக் கட்டுரையின் முழுமையான வடிவத்தை சுட்டி விகடன் இதழில் வாசிக்கலாம். ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/