Published:Updated:

'பாண்ட் 24' அடேல்... ' பாண்ட் 25' 'ஷேப் ஆஃப் யூ' எட் ஷீரன் ?

தார்மிக் லீ

'பாண்ட்' படங்களுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இங்குண்டு. 1962-ல் இருந்து 'ஜேம்ஸ் பாண்ட்' படங்களின் வெவ்வேறு பாகங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் ப்ராஸ்னனைத் தொடர்ந்து, டேனியல் கிரெய்க் தற்போது பாண்டாக நடித்துவருகிறார்.

Daniel Craig - Ed Sheeran
Daniel Craig - Ed Sheeran

தலைப்பிடாத 'பாண்ட் 25' படத்தின் டைட்டில் பாடலை, 'ஷேப் ஆஃப் யூ' புகழ் எட் ஷீரன் பாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது.

Daniel Craig
Daniel Craig

பியர்ஸ் ப்ராஸ்னனைத் தொடர்ந்து டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாகத் தற்போது நடித்துவருகிறார். 'கேஸினோ ராயல்', 'குவான்டம் ஆஃப் சோலேஸ்', 'ஸ்கை ஃபால்', 'ஸ்பெக்டர்' என இதுவரை 4 பாண்ட் படங்களில் நடித்திருக்கிறார், டேனியல். பாண்ட் பட வரிசையில் இதுவரை, 24 பாகங்கள் வெளியாகி இருக்கின்றன. இது, 25-வது பாண்ட் படம் என்பதாலும் டேனியல் கிரெய்குக்கு 5-வது மற்றும் கடைசி படம் என்பதாலும் பிரமாண்டமான முறையில் ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது.

இதைத் தொடர்ந்து, தலைப்பு வைக்கப்படாத நிலையில் தற்காலிகமாக 'பாண்ட் 25' என்று இப்படத்திற்கு தலைப்பிடப்பட்டிருக்கிறது. 'ஸ்கை ஃபால்' (பாண்ட் 23) படத்தில் புகழ்பெற்ற பாடகியான அடேல், அதன் டைட்டில் பாடலைப் பாடினார். மேலும், அப்படத்திற்கு அந்தப் பாடல் ஆஸ்கர் விருதையும் பெற்றுக் கொடுத்தது. ஆனால், 'பாண்ட் 24' படமான 'ஸ்பெக்டர்'-ல் அவர் பாடவில்லை. இதைத் தொடர்ந்து, மீண்டும் அடேலையே 'பாண்ட் 25' படத்தில் பாட வைப்பதற்குத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், டேனியல் எட் ஷீரனைப் பரிந்துரை செய்திருக்கிறாராம். கேரி ஃபுக்குனாகா இயக்கும் இப்படம், வரும் ஏப்ரல் 8, 2020 அன்று வெளியாகிறது.