ஆஸ்கர் விருது விழாவைத் தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக்கின் கன்னத்தில் நடிகர் வில் ஸ்மித் அறைந்தது உலகம் பேசும் சர்ச்சை ஆகியிருக்கிறது. வில் ஸ்மித்தின் மனைவி ஜேடாவுக்கு அலோபீசியா என்ற நோய்த் தாக்கத்தால் முடி கொட்டத் தொடங்கியிருந்ததால் தலையை முழுக்க மொட்டை போட்டுக்கொண்டார். அதைக் குறிப்பிட்டு கிறிஸ் ராக் பேசியதால், அவர் கன்னத்தில் அறைந்தார் வில் ஸ்மித். “என் மனைவியின் பெயரை இழுக்காதே!” என ஆக்ரோஷமாகச் சொன்னார்.
பிறகு வில் ஸ்மித் வருத்தம் தெரிவித்ததும், இந்தச் சம்பவம் குறித்து ஆஸ்கர் விருதுக்குழு விசாரணை நடத்துவதும் எல்லோரும் அறிந்த செய்திகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆனால் அமெரிக்காவில் ஒரு கோஷ்டி, 'இந்தத் தாக்குதல் எல்லாமே முன்கூட்டியே ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது' என்கிறது. 'வெறுமனே ஆஸ்கர் விருது விழாவுக்குப் பரபரப்பு கூட்டுவதற்காக மட்டுமே இதைச் செய்யவில்லை. இதன் பின்னணியில் ஒரு மருந்து நிறுவனம் இருக்கிறது' என்கிறார்கள் அவர்கள். இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவை ஸ்பான்சர் செய்த நிறுவனங்களில் ஃபைசர் மருந்து நிறுவனமும் ஒன்று. 'அந்த நிறுவனம் அலோபீசியா நோய்க்கு ஒரு மருந்து உருவாக்கியுள்ளது. அந்த மருந்துக்கு இலவச விளம்பரம் தேடுவதற்காகவே அந்த நோயால் பாதிக்கப்பட்ட ஜேடாவை வம்புக்கு இழுப்பது போல நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு ஸ்கிரிப்ட் தயாரித்தார்கள். கிறிஸ் ராக், வில் ஸ்மித் என்று எல்லோருக்குமே இந்த ரகசியத் திட்டத்தில் பங்கு இருக்கிறது. நினைத்தது போலவே அந்த நோய் பற்றியும் அதற்கான மருந்து பற்றியும் இப்போது உலகெங்கும் விவாதங்கள் நடக்கின்றன' என்று சமூக வலைதளங்களில் பலரும் எழுதி வருகிறார்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஉண்மை என்ன?
ஆஸ்கர் விருது விழாவுக்கான ஸ்பான்சராக இருந்தது ஃபைசர் நிறுவனம் மட்டுமல்ல. ரோலக்ஸ், வெரிஸான், கிரிப்டோ.காம் என இன்னும் மூன்று நிறுவனங்களும் மெயின் ஸ்பான்சர்களாக இருந்தன. ஒரு ஸ்பான்சருக்காக மட்டும் இப்படி ஸ்கிரிப்டட் டிராமா ரெடி செய்திருந்தால், மற்ற ஸ்பான்சர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள்.
இன்னொரு விஷயம், அந்த மருந்து தொடர்பானது. Etrasimod என்ற அந்த மருந்தை அரேனா என்ற மருந்து நிறுவனம் உருவாக்கி வருகிறது. அந்த அரேனா நிறுவனத்தை இந்த மார்ச் மாதம்தான் ஃபைசர் நிறுவனம் வாங்கியது. Etrasimod என்பது வெறுமனே அலோபீசியா நோய்க்கு மட்டுமேயான மருந்தும் இல்லை. குரோன்ஸ் நோய், ஒரு வகை அல்சர் உள்ளிட்ட பல நோய்களுக்கும் தீர்வாக உருவாக்கப்படுவது. அலோபீசியாவுக்கும் அது தீர்வு தரும்.

இந்த எல்லா நோய்களுமே ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளவுக்கு மீறி வேலை செய்வதால் வருபவை. உதாரணமாக அலோபீசியாவை எடுத்துக்கொள்வோம். நம் கூந்தலின் மயிர்க்கால்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் கூந்தல் நன்கு வளரும். ஆனால், சிலரின் உடல் நோய் எதிர்ப்பு சக்தியானது, இந்த மயிர்க்கால்களை ஏதோ தீங்கு விளைவிக்கக்கூடிய அந்நியப் பொருள் போலக் கருதி அவற்றை அழிக்க ஆரம்பிக்கிறது. இதனால் தலையில் ஆங்காங்கே மயிர்க்கால்கள் அழிகின்றன. அதன் விளைவாக திட்டுத்திட்டாக முடி உதிர்கிறது. இப்படி நோய் எதிர்ப்பு சக்தி விபரீதமாகச் செயல்படுவதன் விளைவாகவே ஒருவகை அல்சர் வருகிறது, குரோன்ஸ் நோய் வருகிறது.
இந்த எல்லாவகை நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடுகளுக்கும் ஒற்றைத் தீர்வாக Etrasimod மருந்து உருவாக்கப்படுகிறது. அதை நீண்ட காலத்துக்குத் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்த மருந்தின் ஆராய்ச்சி இன்னமும் முழுமை பெறவில்லை. இப்போதுதான் அது மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது. பரிசோதனை முழுமை பெற்று முறைப்படி அது விற்பனைக்கு வர இன்னும் சில மாதங்களோ, ஏன், ஆண்டுகளோ கூட ஆகலாம். இன்னமும் தயாராகாத ஒரு மருந்துக்காக மருந்து நிறுவனம் ஒன்று ஆஸ்கர் மேடையில் நாடகம் நடத்தியது என்பது நம்பமுடியாத ஒரு விஷயம்.

எங்கே எது நடந்தாலும், அதன் பின்னால் ஒரு சதித் திட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவுவது இப்போது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக அமெரிக்காவில் தடுப்பூசிக்கு எதிரான சில அமைப்புகள் தீவிரமாகச் செயல்படுகின்றன. அவைதான் இந்த விவகாரத்தில் இப்படி வதந்தி கிளப்பியதாகச் சொல்லப்படுகிறது.
"சில மருந்து நிறுவனங்கள் தங்கள் விற்பனைக்காக எந்த எல்லைக்கும் போகக்கூடியவைதான். ஆனால், இன்னமும் தயாராகாத ஒரு மருந்துக்காக ஆஸ்கர் மேடையைப் பயன்படுத்தினார்கள் என்பது அபத்தமான வாதம்"என்பதே அமெரிக்க சுகாதார ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.