ஜோக்கராக நடித்த வகீன் ஃபீனிக்ஸுக்கு (Joaquin Phoenix), இந்த ஆண்டு கோல்டன் குளோபின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்திருக்கிறது. 2020-யை விருதுடன் தொடங்கியிருக்கிறார், ஃபினிக்ஸ்.
கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கான கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா நேற்று (ஜனவரி 5, இந்திய நேரப்படி, இன்று ஜனவரி 6) தேதி நடைபெற்றது. `ஜோக்கர்', `ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்', `ஃபோர்டு vs ஃபெராரி', `மேரேஜ் ஸ்டோரி' உள்ளிட்ட ஹாலிவுட் படங்கள் இந்த ஆண்டு விருதுகளை அள்ளிக் குவித்திருக்கின்றன.
Also Read

குறிப்பாக நெட்ஃபிளிக்ஸில் வெளியான படங்கள் மற்றும் தொடர்கள் என எல்லாம் சேர்த்து 34 நாமிநேஷன்களைப் பெற்றுள்ளன. அதிலும் நெட்ஃப்ளிக்ஸ்லில் ஸ்கார்லெட் ஜோஹான்சன் நடிப்பில் வெளியான `மேரேஜ் ஸ்டோரி' திரைப்படம், அதிகபட்சமாக ஆறு நாமினேஷன்களையும், திரை இயக்க ஜாம்பவானான மார்ட்டின் ஸ்காரச்ஸியின் `ஐரிஷ்மேன்' ஐந்து நாமினேஷன்களையும் பெற்றுள்ளன. இந்த இரண்டு படங்களுமே திரையரங்குகளில் விருது சம்பிரதாயத்துக்காக மட்டும் சில காட்சிகள் திரையிடப்பட்டு, பின்னர் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது.
நெட்ஃப்ளிக்ஸில் வெளியான இந்த இரண்டு படங்களுடன் சேர்ந்து, `ஜோக்கர்', `டூ போப்ஸ்' ஆகிய படங்களும் நாமிநேட்டாகியிருந்தாலும், சிறந்த படத்துக்கான விருது `1917'க்கு வழங்கப்பட்டது. அதேபோல சிறந்த படம் - காமெடி அல்லது மியூசிக்கல் பிரிவில் குவின்டின் டாரன்டினோவின் `ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்' படத்துக்கு வழங்கப்பட்டது.

Also Read
மேலும், கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுக்கப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொரிய மொழிப் படமான `பாரசைட்'டுக்குச் சிறந்த அயல் மொழிப் படத்துக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த தொலைக்காட்சித் தொடராக ஹெச்.பி.ஓவில் ஒளிபரப்பான `செர்னோபில்' தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் வகீன் ஃபீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற, இன்னொரு பக்கம் ஹில்டூர் குவானடோட்டிரும், `ஜோக்கர்' படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதினைப் பெற்றார். `ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்' படத்தில் நடித்த ப்ராட் பிட் சிறந்த குணச்சித்திர நடிகர் - காமெடி அல்லது மியூசிக்கல் படத்துக்கான விருதைத் தட்டிச் சென்றார். சிறந்த படத்துக்கான விருதை வென்ற `1917' படத்தின் இயக்குநர் சாம் மென்டிஸ், சிறந்த இயக்குநருக்கான விருதையும் வென்றார். தன் வாழ்நாள் முழுக்க சினிமாவுக்காக அர்ப்பணித்த கலைஞருக்கு வழங்கப்படும் விழாவின் மிகப்பெரிய விருதான செஸில் பி டிமில்லே விருது, இந்த முறை `தி டாவின்சி கோடு', `ஃபாரஸ்ட் கம்ப்' உள்ளிட்ட படங்களில் நடித்த, டாம் ஹாங்க்ஸுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த திரைப்படம் (ட்ராமா) - `1917'
சிறந்த திரைப்படம் (காமெடி அல்லது மியூசிக்கல்) - `ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்'
சிறந்த திரைப்படம் (அனிமேஷன்) - `மிஸ்ஸிங் லிங்க்'
சிறந்த திரைப்படம் (அயல்மொழி) - `பாரசைட்' (கொரியன்)
சிறந்த திரைக்கதை - `குவின்டின் டாரன்டினோ, `ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்'
சிறந்த நடிகர் - வகீன் ஃபீனிக்ஸ், `ஜோக்கர்'
சிறந்த நடிகை - ரேனே ஸெல்வெகர், `ஜூடி'
சிறந்த நடிகர் (காமெடி அல்லது மியூசிக்கல் திரைப்படம்) - டாரான் எக்கர்ட்டன், `ராக்கெட்மேன்'
சிறந்த நடிகை (காமெடி அல்லது மியூசிக்கல் திரைப்படம்) - ஆக்வாஃபீனா, `தி ஃபேர்வெல்'
சிறந்த குணச்சித்திர நடிகர் - ப்ராட் பிட், `ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்'
சிறந்த குணச்சித்திர நடிகை - லாரா டேர்ன், `மேரேஜ் ஸ்டோரி'
சிறந்த இசை (பாடல்) - எல்டன் ஜான் மற்றும் பெர்னி டாவ்பின், `ராக்கெட்மேன்'
சிறந்த இசை (பின்னணி) - ஹில்டூர் குவானடோட்டிரும், `ஜோக்கர்'
சிறந்த தொடர் - `செர்னோபில்'
சிறந்த தொடர் (தொலைக்காட்சி) - `சக்சஷன்'
சிறந்த தொடர் (மியூசிக்கல் அல்லது காமெடி) - `ஃப்ளீபேக்'
சிறந்த நடிகர் (தொடர்) - ரஸ்ஸல் க்ரோ, `தி லவுடஸ்ட் வாய்ஸ்'
சிறந்த நடிகர் (மியூசிக்கல் அல்லது காமெடி தொடர்) - ராமி யூசஃப், `ராமி'
சிறந்த நடிகர் (தொலைக்காட்சி) - ப்ரையன் காக்ஸ், `சக்சஷன்'
சிறந்த நடிகை (தொடர்) - ஒலிவியா கோல்மேன், `தி க்ரவுன்'
சிறந்த நடிகை (காமெடி அல்லது மியூசிக்கல் தொடர்) - ஃபீப் வாலர் ப்ரிட்ஜ், `ஃப்ளீபேக்'
சிறந்த குணச்சித்திர நடிகர் (தொடர்) - ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்டு, `செர்னோபில்'
சிறந்த குணச்சித்திர நடிகை (தொடர்) - பட்ரீஷியா ஆர்க்குவிட், `தி ஆக்ட்'
மிஷேல் வில்லியம்ஸ், ஃபாஸ்ஸே/வெரான்
சிறந்த இயக்குநர் - சாம் மென்டிஸ், `1917'
தி செஸில் பி டிமில்லே வாழ்நாள் சாதனையாளர் விருது - டாம் ஹாங்ஸ்
கரோல் ப்ரூனெட் வாழ்நாள் சாதனையாளர் விருது (தொடர்) - எல்லன் டிஜெனேரஸ்