Published:Updated:

பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் - ஹார்வே வெய்ன்ஸ்டீனுக்கு கொரோனா!

ஹார்வே வெய்ன்ஸ்டீன்
ஹார்வே வெய்ன்ஸ்டீன்

பாலியல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஹார்வே வெய்ன்ஸ்டீன் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸால் 35,060 பேர் பாதிக்கப்பட்டும், 457 பேர் இறந்தும் உள்ளனர். பல்வேறு நாட்டின் அரசியல் தலைவர்களையும் திரை நட்சத்திரங்களையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.

corona
corona

இந்த நிலையில், முன்னாள் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரும், பாலியல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றவருமான ஹார்வே வெய்ன்ஸ்டீன் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் மாகாணத்தின் தலைமைக் காவல் அதிகாரி மைக்கேல் பவர்ஸ் தெரிவித்துள்ளார்.

68 வயதான வெய்ன்ஸ்டீன், கடந்த மாதம் இரு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார். இந்த நிலையில், சிறைச்சாலைக்குச் செல்வதற்கு முன்னர் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள பெல்லூவ் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் நியூயார்க் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். பின்னர், சில காரணங்களுக்காக ரைக்கர்ஸ் நகர சிறைக்கு மாற்றப்பட்டார்.

வெய்ன்ஸ்டீன்
வெய்ன்ஸ்டீன்

இந்த நிலையில், வெய்ன்ஸ்டீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக அவரது வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. வெய்ன்ஸ்டீன் கொரோனா பாதிப்பு குறித்து ராய்ட்டர்ஸ் செய்தியாளரிடம் பேசிய சிறைச்சாலை காவலர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்று சிறைச்சாலையில் இருவருக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இது குறித்து செய்தியாளரிடம் பேசிய நியூயார்க் மாகாண தலைமைக் காவல் அதிகாரி பவர்ஸ், சிறைச்சாலையில் பல காவல் அதிகாரிகள் தனிமைப்படுத்துதலில் உள்ளதாகவும், முறையான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.

கொரோனா
கொரோனா

இந்நிலையில், வெய்ன்ஸ்டீன் திரைப்பட தயாரிப்பு உதவியாளர் மரியம் ஹேலி மற்றும் ஜெசிக்கா மேன் ஆகியோரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றம் சுமத்தப்பட்டு சிறைத் தண்டனைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2017ம் ஆண்டு இவர் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு