வெளியாகிறது ஜாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக்... இந்தியாவில் எதில் பார்க்கலாம்?

தற்போது, இந்தியாவில் ஜாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக் எந்தெந்தத் தளங்களில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
பல வருடங்களுக்குப் பிறகு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஜாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக் (Zack Snyder's Justice League) வெளியாகவிருக்கிறது. கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதியே ஸ்னைடர் தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஜஸ்டிஸ் லீக் மார்ச் 18 அன்று உலகம் முழுவதும் ஒரே நாளில் வெளியாகும் எனக் குறிப்பிட்டிருந்தார். எந்தெந்த தளங்களில் வெளியாகும் எனப் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் அவரது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார். தற்போது, இந்தியாவில் எந்தெந்தத் தளங்களில் படம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
'ஜாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக்' கட் பற்றிய பின்கதையை இங்கே படிக்கலாம்...
அமெரிக்காவில் சந்தா அடிப்படையிலான HBO max-ல் ஜாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக் வெளியாகும் என ட்விட்டரில் டி.சி. காமிக்ஸின் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிலும் சந்தா அடிப்படையிலான சேவைகளின் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்த நிலையில் இந்தியாவில் வீடியோ-ஆன்-டிமாண்ட் (Video-On-Demand) அடிப்படையிலான சேவைகளில் ஜஸ்டிஸ் லீக் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் ஆப்பிள் டிவி (Apple TV), புக் மை ஷோ ஸ்ட்ரீம் (Book my show Stream), கூகுள் ப்ளே (Google play), ஹங்காமா ப்ளே (Hungama play), டாடா ஸ்கை (Tata sky) மற்றும் யூடியூப் (Youtube) ஆகிய தளங்களில் ஜாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
டி.சி. ரசிகர்கள் செம ஹேப்பி!