Published:Updated:

Dhanush: `எப்படி கிடைத்தது ஹாலிவுட் வாய்ப்பு?' - கேள்விக்கு பதிலளித்த தனுஷ்

தி க்ரே மேன்

'தி க்ரே மேன்' படத்தில் நடித்தது குறித்து தனுஷ் பதிலளித்திருக்கிறார்.

Dhanush: `எப்படி கிடைத்தது ஹாலிவுட் வாய்ப்பு?' - கேள்விக்கு பதிலளித்த தனுஷ்

'தி க்ரே மேன்' படத்தில் நடித்தது குறித்து தனுஷ் பதிலளித்திருக்கிறார்.

Published:Updated:
தி க்ரே மேன்
தமிழில் மட்டும் இல்லாமல் டோலிவுட், பாலிவுட் என நடித்துக் கொண்டிருந்த தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார்.

அவெஞ்சர்ஸின் Infinity War, End game, உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆன்டனி மற்றும் ஜோ ரூசோ இயக்கும் ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பது அனைவரும் அறிந்ததே. ஜூலை 10-ஆம் தேதி அன்று பிரத்தியேகமாக அமெரிக்காவில் ஊடகங்களுக்காக 'தி கிரே மேன்' திரையிடப்பட்டது. அப்போது தனுஷிடம் இந்த படம் நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி உங்களுக்கு கிடைத்தது என்று கேட்கப்பட்டது. அதற்கு தனுஷ் "நான் எப்படி இந்தப் படத்தில் நடித்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு நாள் காஸ்டிங் ஏஜென்சி ஹாலிவுட்டில் ப்ராஜெக்ட் இருப்பதாகச் சொன்னார்கள். என்ன படம் என்று கேட்டேன்.

தி க்ரே மேன்
தி க்ரே மேன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பின்பு அவர்கள் என்னிடம் படத்தைப் பற்றி சொன்னதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் ஓகே சொல்லிட்டேன். நான் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருந்தேன். மேலும் நான் எக்ஸ்ப்ளோர் பண்ணவும் நிறைய கற்றுக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பாக இருந்தது" என்று கூறினார்.

இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ் மற்றும் அனா டி அர்மாஸ் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். மார்க் கிரேனியின் 'தி கிரே மேன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும், இந்த படம் ஜூலை 22 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது.