Published:Updated:

"மார்வெல், DC படங்களின் கதாபாத்திரங்கள் சரியாக இல்லை!"- ஜேம்ஸ் கேமரூன் கறார் விமர்சனம்

ஜேம்ஸ் கேமரூன்

நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், மார்வெல் மற்றும் DC திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் சரியாக வடிவமைக்கப்படவில்லை என்று விமர்சித்துள்ளார்.

"மார்வெல், DC படங்களின் கதாபாத்திரங்கள் சரியாக இல்லை!"- ஜேம்ஸ் கேமரூன் கறார் விமர்சனம்

நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், மார்வெல் மற்றும் DC திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் சரியாக வடிவமைக்கப்படவில்லை என்று விமர்சித்துள்ளார்.

Published:Updated:
ஜேம்ஸ் கேமரூன்

2009-ஆம் ஆண்டு 1000 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட 'Sci-Fiction' திரைப்படம் 'அவதார்'. பிரபல ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் 'அவதார் - தி வே ஆஃப் வாட்டர்' 3டி தொழில்நுட்பத்துடன் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வரும் டிசம்பர் மாதம் 16-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்ட படக்குழுவினர் படத்தின் புரொமோஷன் வேலைகளில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் மார்வெல் மற்றும் DC திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் சரியாக இல்லை என்பது போல் விமர்சித்துள்ளார்.

அவதார், மார்வெல், DC படங்கள்
அவதார், மார்வெல், DC படங்கள்

இது பற்றிப் பேசிய அவர், "அவதார் படத்தின் முதல் பாகத்தில் முன்னணி கதாபாத்திரங்களாகக் காதல் ஜோடியாக நடித்திருந்த ஜோ (Zoe), சாம் (Sam) இருவரும் தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கும் கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் இரண்டாம் பாகத்தில் பெற்றோராக நடித்துள்ளனர். முதல் பாகத்தில் தங்கள் உயிர்களைப் பற்றிக் கவலைப்படாமல் நிறையச் சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் தற்போது அவர்கள் பெற்றோராக நடித்துள்ளதால் அப்படிச் செய்ய முடியாது. அந்த கதாபாத்திரங்கள் முதிர்ச்சியடைந்து, தங்கள் சொந்த பிழைப்புக்கு அப்பாற்பட்டு குடும்பம், தங்கள் சமுதாயம் என்ற பொறுப்பு இருப்பதை உணர்ந்தால் என்ன நடக்கும் என்பதுதான் கதையின் முக்கிய கருவாக இருக்கிறது.

ஜேம்ஸ் கேமரூன்
ஜேம்ஸ் கேமரூன்

திரைப்படங்களில் உறவுகளின் முக்கியத்துவத்தை நான் பெரிதாகப் பார்க்கிறேன். மார்வெல் மற்றும் DC திரைப்படங்களின் கதாபாத்திரங்களைப் பார்த்தால் அதில் யாருக்கு எவ்வளவு வயதானாலும் பரவாயில்லை என்று கல்லூரியில் இருப்பதைப் போலவே செயல்படுகிறார்கள். அதிலுள்ள கதாபாத்திரங்களுக்கு உறவுகள் இருக்கின்றன. ஆனால் அவை உண்மையாக இல்லை. அவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக எதுவும் செய்வதில்லை. அந்த கதாபாத்திரங்கள் குடும்பங்கள், உறவுகளை உணர்வதில்லை. இது எப்படி லட்சியங்களையும் ஊக்கத்தையும் அன்பையும் தருவதாக இருக்கும். இது திரைப்படங்களை உருவாக்குவதற்கான சிறந்த வழி அல்ல என்று நான் நினைக்கிறேன்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.