Published:Updated:

`இது மக்கள் பிரச்னை!' - அமேசான் காட்டுத் தீயை அணைக்க நிதி கொடுத்த ஹாலிவுட் பிரபலம்

தார்மிக் லீ

ஹாலிவுட்டின் முக்கியமான நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ. இவர் சமூகப் பிரச்னைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். சென்னையில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்ட சமயத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து போஸ்ட் ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

Leonardo Dicaprio
Leonardo Dicaprio

குவின்டின் டாரன்டினோ இயக்கிய `Once upon a time in Hollywood' சமீபத்தில்தான் வெளியானது. பிராட் பிட்டுடன் இணைந்து லியனார்டோ டிகாப்ரியோவும் இப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் நடிப்பது மட்டுமன்றி சமூகப் பிரச்னைகளுக்கு இவர் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். சென்னையில் தீராப் பிரச்னையாக இருப்பது தண்ணீர்த் தட்டுப்பாடு. அதற்கு வருத்தம் தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றைப் பகிர்ந்திருந்தார் லியனார்டோ டிகாப்ரியோ. இதையடுத்து, வெளிநாடுகளிலிருந்து பல்வேறு பத்திரிகையாளர்கள், சென்னை தண்ணீர்ப் பிரச்னையைப் பற்றி விரிவாகத் தங்களது மீடியா பக்கங்களில் எழுதியிருந்தனர்.

View this post on Instagram

#Regram #RG @earthalliance #EarthAlliance, launched in July by @LeonardoDiCaprio, Laurene Powell Jobs, and Brian Sheth, has formed an emergency Amazon Forest Fund with a commitment of $5 million dollars to focus critical resources for indigenous communities and other local partners working to protect the life-sustaining biodiversity of the Amazon against the surge of fires currently burning across the region. Join Us. 100 percent of your donation will go to partners who are working on the ground to protect the Amazon. Earth Alliance is committed to helping protect the natural world. We are deeply concerned about the ongoing crisis in the Amazon, which highlights the delicate balance of climate, biodiversity, and the wellbeing of indigenous peoples. To learn more or to donate, please visit ealliance.org/amazonfund (see link in bio) Photos: @chamiltonjames, @danielbeltraphoto 2017

A post shared by Leonardo DiCaprio (@leonardodicaprio) on

இதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாக உலகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் விஷயம், அமேசானில் ஏற்பட்டிருந்த காட்டுத்தீ. இதற்குப் பின் பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்துவந்தாலும் பல முக்கியமான பிரபலங்கள் தங்களது தரப்பு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில், லியனார்டோ டிகாப்ரியோவும் ஒருவர்.

இவர் கருத்து சொல்வதையும் தாண்டி அதற்கு நிவாரணமாகத் தன்னுடைய `எர்த் அலயன்ஸ்' தொண்டு நிறுவனம் மூலம் 5 மில்லியன் டாலர் நிதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி, ` அமேசான் விவகாரத்தில் ஊடகங்கள் தங்களுடைய கவனத்தைச் செலுத்தி இதனை மக்கள் பிரச்னையாக மாற்றும்வகையில் கொண்டு செல்ல வேண்டும்' எனவும் வேண்டுகோள் வைத்திருக்கிறார் லியனார்டோ டிகாப்ரியோ.