Published:Updated:

Shang-Chi: அதே மார்வெல் ஃபார்முலா, ஆனால்... எப்படி இருக்கிறார் MCUவின் புதிய சூப்பர்ஹீரோ ஷாங்க் சி?

கார்த்தி
ர.சீனிவாசன்

Shang-Chi and the Legend of the Ten Rings: வழக்கம்போல் ஒரு புதிய ஹீரோவை மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மையக் கதைக்களத்துடன் இணைக்கும் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) 25-வது படம். நான்காவது கட்டத்தின் இரண்டாவது படம். புதியதொரு நாயகனை, ஒரு சூப்பர்ஹீரோவை மீண்டும் தன் திரையுலகுக்கு அழைத்து வந்திருக்கிறது மார்வெல். 'அயர்ன்மேன்' கதையின் நீட்சியாக அதன் சில சம்பவங்களையும், சில கதாபாத்திரங்களையும் இதில் கொண்டு வந்திருக்கிறார்கள். இப்படி நிறைய 'ஈஸ்டர் எக்ஸ்'. அதேபோல், வேறு சில திரைப்படங்களின் நாயகர்களுக்கான விட்ட கதையும் தொட்ட கதையும் இதில் வருகிறது.

Shang chi
Shang chi
marvel

அவெஞ்சர்ஸ்: எண்டு கேம் படத்துக்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகளில் ஷாங்க் சி, அவனின் தங்கை மற்றும் தோழி என மூவரின் கதையாக விரிகிறது இந்தப் படம். இதில் ஷாங் சியின் அப்பாவான வென்வு என்கிற தி மேண்டரின், டென் ரிங்ஸ் என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தைக் கொண்டு உலகையே தன் கட்டுக்குள் வைக்க பல ஆயிரம் வருடங்கள் யுத்தம் செய்கிறார். பல அற்புத சக்திகள் நிறைந்த ஒரு கிராமத்தை அவர் பிடிக்க நினைக்க, அவருக்கு எதிராக அவரின் மகனும் மகளுமே வந்து நிற்கிறார்கள். யுத்தத்தில் வெற்றி யார் பக்கம் சாய்ந்தது, இந்தக் குடும்பத்தின் பின்னணி என்ன? தன் வழக்கமான பாணியில் நக்கல், நையாண்டி, அதிரடி சண்டைக் காட்சிகள் எனக் கலந்து பதில் சொல்கிறது இந்தப் படம்.

ஷாங்க் சியாக சிமு லியூ. காமெடி காட்சிகளில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும், ஆக்‌ஷனும், எமோஷனலும் நன்றாகவே வருகிறது. ஷாங்க் சியின் சகோதரியாக ஷியாலிங்காக மெங்கர் ஜாங். ஆனால் , இவர்கள் இருவரையும் மீறி திரையை காமெடியில் நிரப்புவது ஷாங்க் சியின் தோழி கேட்டியாக வரும் அக்வாஃபினா (Awkwafina) தான். நீங்கள் ஆங்கிலத்தில் பார்த்தாலும் சரி, தமிழ் டப்பிங்கில் பார்த்தாலும் சரி காமெடி நடிகையும் பாடகியுமான அக்வாஃபினா கலக்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மார்வெல் படங்களுக்கான புதிய காமெடி கதாபாத்திரம் இவர்தான். Ant man படங்களில் வரும் மைக்கல் பெனா போல் இனி ஆசிய மார்வெல் படங்களுக்கு இவர். ஷாங்க் சியின் தந்தை வென்வூ என்னும் மேண்டரினாக டோனி லியூங். எமோஷனலோ, மிரட்டலோ இரண்டையும் சரியாகக் கொடுத்திருக்கிறார். (ஸ்பாய்லர் & சர்ப்ரைஸ்) 'அயர்ன்மேன்' படங்களில் விசித்திர என்ட்ரி கொடுத்த பென் கிங்க்ஸ்லீக்கு இதிலும் வேற லெவல் கதாபாத்திரம் ஒன்று உண்டு. அதேபோல் சில காட்சிகளே வந்தாலும், தன் அதிரடி சண்டை அனுபவங்களினால் மிரட்டியிருக்கிறார் மிச்சல்.

Wenwu / The Mandarin
Wenwu / The Mandarin
Marvel

ஸ்டன்ட் காட்சிகளில் வழக்கம்போல ஸ்கோர் செய்திருக்கிறார்கள். மார்வெல் தங்களின் ஒவ்வொரு படங்களுக்கும் போடும் உழைப்பு இதிலும் பிரதிபலிக்கிறது. மார்வெல்லின் ஃபாதேசத்தைப்வான எமோஷனல் காமெடி ஆக்‌ஷன்தான் இந்தப் படத்திலும் தொடர்கிறது. அதைச் சரியான விகிதத்தில் கலந்து மீண்டும் அசத்தியிருக்கிறார்கள். அதுவும் இந்த முறை ஆசியத் தற்காப்புக் கலைகள் படத்துக்கு பெரும்பலமாக வந்து அமைந்திருக்கின்றன. Shaolin Soccer, Crouching Tiger Hidden Dragon படங்களில் நாம் பார்த்த சண்டைக் காட்சிகளைப் போல இதிலும் பல சண்டைக் காட்சிகள். ஜெட்லி, ஜாக்கி சான் நினைவலைகளும் வந்துபோயின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே சமயம், புதிய உலகம், வித்தியாச மிருகங்கள், மாறுபட்ட கலாசாரம் என பேப்பரில் ஸ்ட்ராங்காக இருக்கும் விஷயங்கள் அனைத்தும் திரையில் முழுமையான ஒன்றாகப் பிரதிபலிக்கவில்லை. அவர்கள் காட்டும் மாய உலகின் கிராமம்கூட நான்கு தெருக்கள் மட்டுமே கொண்ட செட் போட்ட ஃபீலையே தருகின்றன. 'பிளாக் பேந்தர்' படத்தில் வகாண்டா தேசத்தைப் பிரமாண்டமாக காட்சிப்படுத்திய மார்வெல்லா இப்படிச் செய்தது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

Shang chi
Shang chi
marvel

நிகழ்காலக் கதை, ப்ளாஷ்பேக் பின்னணி என மாறி மாறி கதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பல இடங்களில் ப்ளாஷ்பேக் சென்டிமென்ட் காட்சிகள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கதை back story நோக்கி செல்ல ஆரம்பிக்கும் போதெல்லாம் திரைக்கதை படுத்துவிடுகிறது. விறுவிறு திரைக்கதைக்கு இத்தனை ஸ்பீட்பிரேக்கர்கள் அவசியமா?

`கசட தபற': 6 கதைகள், ஆனால் ஆந்தாலஜி இல்லை... சிம்புதேவனின் வித்தியாச முயற்சி ரசிக்கவைக்கிறதா?

ஆனால், வழக்கம்போல் ஒரு புதிய ஹீரோவை மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மையக் கதைக்களத்துடன் இணைக்கும் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்' படங்களின் முக்கிய பாத்திரமான வாங்க்கின் கேமியோ தியேட்டரில் அப்ளாஸ் பெறும். படம் முடிந்ததும் அப்படியே எழுந்து வந்துவிடாதீர்கள். இரண்டாம் போஸ்ட் கிரெடிட் லட்சியம். முதல் போஸ்ட் கிரெடிட் நிச்சயம். ஏனெனில் முதல் போஸ்ட் கிரெடிட்டில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு