Published:Updated:

The Marvels: மூன்று பெண் சூப்பர்ஹீரோக்கள் இணையும் ஆக்‌ஷன் காமெடி - மார்வெல்லின் பிளான் ஜெயிக்குமா?

The Marvels

2019-ம் ஆண்டு வெளியாகி மார்வெல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'கேப்டன் மார்வெல்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் 'The Marvels' திரைப்படத்தின் டீசர் வெளியானது.

Published:Updated:

The Marvels: மூன்று பெண் சூப்பர்ஹீரோக்கள் இணையும் ஆக்‌ஷன் காமெடி - மார்வெல்லின் பிளான் ஜெயிக்குமா?

2019-ம் ஆண்டு வெளியாகி மார்வெல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'கேப்டன் மார்வெல்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் 'The Marvels' திரைப்படத்தின் டீசர் வெளியானது.

The Marvels
மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் MCU யுனிவர்ஸின் அடுத்த படமாக வெளியாகிறது `The Marvels'. நியா டகோஸ்டா வின் இயக்கத்தில் வெளிவரும் இப்படத்தில் ப்ரி லார்சன், டெயோனா பாரிஸ், இமான் வெல்லானி, சாமுவேல் எல். ஜாக்சன், ஜாவே ஆஷ்டன் மற்றும் பார்க் சியோ-ஜூன் ஆகியோர் நடித்துள்ளனர்.
The Marvels
The Marvels

தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. டீசரில் மார்வெல்லின் பழைய ஆக்‌ஷன் காமெடி பார்முலா வெளிப்படுவதால் மார்வெல் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர்.

இப்படம், 2019-ம் ஆண்டு வெளியாகி மார்வெல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'கேப்டன் மார்வெல்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நடிகை ப்ரி லார்சன் கேப்டன் மார்வெல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அது மட்டுமின்றி சமீபத்தில் ஓ.டி.டி-யில் வெளியான 'மிஸ்.மார்வெல்' வெப்சீரிஸில் இடம்பெற்றிருந்த 'கமலா கான்' பாத்திரமும், 'வாண்டாவிஷன்' தொடரில் இடம்பெற்றிருந்த 'மோனிகா ராம்போ' பாத்திரமும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களாக இடம்பெற்றுள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 10ம் தேதி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபமாக மார்வெல் திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், மூன்று முக்கிய பெண் சூப்பர்ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் இந்தப் படம் வெற்றி பெறவேண்டும் என்பதே மார்வெல் ரசிகர்களின் கனவாக இருக்கிறது.