Published:Updated:

பல்கலைக்கழகப் பேராசிரியராகும் இன்டர்ஸ்டெல்லார் நாயகன்!

மேத்யூ ஏற்கெனவே டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் திரைக்கதையைத் திரைக்கு மாற்றும் 'ஸ்கிரீன்ப்ளே டு ஸ்கிரீன்' என்ற பாடத்தை எடுத்துவந்தார்.

Matthew McConaughey
Matthew McConaughey

ஆஸ்கர் விருது வென்ற நடிகரும், கிறிஸ்டோபர் நோலனின் 'இன்டர்ஸ்டெல்லார்' ஹீரோவான மேத்யூ மேக்கானக்கே வருகிற விண்டர் செமஸ்டர் முதல் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் முழுநேரப் பேராசிரியராக இணையவுள்ளார்.

Matthew McConaughey
Matthew McConaughey

இதுகுறித்து டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "எங்கள் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் மூடி காலேஜ் ஆஃப் கம்யூனிகேஷனின் ரேடியோ-டெலிவிஷன்-ஃபிலிம் துறையில் பேராசிரியராக மேத்யூ பணிபுரியவிருக்கிறார்" எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

மேத்யூ ஏற்கெனவே டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் திரைக்கதையைத் திரைக்கு மாற்றும் 'ஸ்கிரீன்ப்ளே டு ஸ்கிரீன்' என்ற பாடத்தை எடுத்துவந்தார். ஆனால் இதற்கு முன்புவரை அந்தக் கல்லூரியின் இயக்குநர் ஸ்காட் ரைஸுடன் இணைந்து பாடங்களை நடத்தி வந்தார். தற்போது, அவர் மட்டுமே வரவிருக்கும் கல்வியாண்டில் அந்தப் பாடங்களைத் தனியாக கற்பிக்கவிருக்கிறார் எனப் பல்கலைக்கழத்தின் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Matthew McConaughey
Matthew McConaughey

இதைப் பற்றி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நான் திரைப்படக் கல்லூரியில் இருக்கும்போது இந்தப் பாடங்கள் எங்களுக்கு இருக்கக்கூடாதா எனப் பல முறை ஏங்கியிருக்கிறேன். தற்போது அந்தப் பாடத்துக்கு நானே பேராசிரியார் ஆகியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" எனக் கூறியுள்ளார்.

இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மேத்யூ, சில குறும்படங்களை இயக்கியுள்ளார். மேலும், சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்.