Published:Updated:

''அது நம்மள நோக்கித்தான் வருது...'' வீடியோ கேம் டு ஆக்ஷன் சினிமா... #MonsterHunter படம் எப்படி?

கார்த்தி
#MonsterHunter
#MonsterHunter

'அது நம்மள நோக்கித்தான் வருது', 'இன்னும் எதெல்லாம் நம்மள தாக்குமோ', 'ஆத்தி இது என்னது' போன்ற தமிழ் டப்பிங் வசனங்களை எழுதுவதற்காக சில படங்கள் ஹாலிவுட்டில் வெளியாகும். அந்த லிஸ்ட்டில் கட்டாயம் இடம்பெறும் 'மான்ஸ்டர் ஹன்ட்டர்'.

திடீர் புயலால் புது உலகத்துக்கு இழுத்துச் செல்லப்படுகிறது ராணுவ அதிகாரி மிலா ஜோவோவிச்சின் குழு. அங்கிருக்கும் மான்ஸ்டர்களை எப்படி மிலா துவம்சம் செய்கிறார் என்பதுதான் கடந்த வாரம் வெளியாகியிருக்கும் 'மான்ஸ்டர் ஹன்ட்டர்' படத்தின் ஒன்லைன்.

சத்தம் கேட்டால் எழும் ராட்சத உயிரினங்கள், டிராகன்கள் என வித்தியாசமானதொரு உலகம். ராணுவ அதிகாரி மிலா ஜோவோவிச்சும் அவரின் குழுவும் காணாமல் போன மற்ற வீரர்களைத் தேடிக்கொண்டு நம் உலகில் சுற்றிக்கொண்டிருக்க, ஒரு புயல், மின்னல், சூறாவளி அவர்களைப் புதிய உலகத்துக்கு இழுத்துச் சென்றுவிடுகிறது. சுதாரிப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட, அங்கிருக்கும் மனிதர்களுடன் எப்படி அவற்றை வீழ்த்தி, மீண்டும் நம் உலகுக்கு மிலா வருகிறார் என்பதுதான் மீதிக்கதை.

#MonsterHunter
#MonsterHunter

வழக்கம் போலவே இதுவும் சீரிஸ் என்பதால், அடுத்த பாகத்துக்கு பெரிய லீடு கொடுத்து முடித்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு கதையாமா என நீங்கள் சப்புக்கொட்டினால், இதுவொரு வீடியோ கேம். சரி, இதெல்லாம் ஒரு வீடியோ கேமா என நீங்கள் சப்புக்கொட்டினால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

ஓங்க் பாக் (காட்டுப் புலியும் கறுப்பு எலியும் போன்று தமிழ் டப்பிங் செய்யப்பட்டிருக்கலாம்) சீரிஸ் அதிரடி படங்களில் நடித்த தாய்லாந்து நடிகர் டோனி ஜா வேற்றுலகவாசியாக நடித்திருக்கிறார். அவருக்கு மிலா ஆங்கிலம் சொல்லித்தருவதும், அவர் ஆங்கிலம் கற்றுக்கொள்வதுமென 'மதுரை வீரன்தானே...' டைப் நகைச்சுவை காட்சிகள் படத்தில் ஆங்காங்கே வருகின்றன. கதை பெரிதாக இல்லை என்பதால், மான்ஸ்டரைக் கொல்வது, அடுத்து அதைவிட பெரிய மான்ஸ்டர் என கேம் மோடிலேயே பயணம் செய்கிறது மான்ஸ்டர் ஹன்ட்டர். ஆக்‌ஷன் படத்தில் கதை பார்க்கக்கூடாது என்பதால், அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. படத்தில் அவர் மொழி புரியாமல் பேசிய ஒரு வசனம், சீன மக்களைப் புண்படுத்துவதாக குற்றச்சாட்டு எழ, உலகம் முழுக்க வெளியான வெர்ஷனில், அந்தக் காட்சியை நீக்கிவிட்டார்கள்.

#MonsterHunter
#MonsterHunter
45 வயதான மிலா ஜோவோவிச்சின் சண்டைக் காட்சிகள் இந்தப் படத்திலும் தரம். டோனி ஜாவும், மிலாவும் மோதிக்கொள்ளும் காட்சி, மான்ஸ்டர் சாகசங்கள் என எல்லாமே அதகளம். டோனி ஜாவும் சிறப்பாக சம்பவங்கள் செய்திருக்கிறார்.
ஒரே ஒரு ஜோக்காவது சொல்லுங்களேன் யோகி பாபு! `ட்ரிப்' - ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

'அது நம்மள நோக்கித்தான் வருது', 'இன்னும் எதெல்லாம் நம்மள தாக்குமோ', 'ஆத்தி இது என்னது' போன்ற தமிழ் டப்பிங் வசனங்களை எழுதுவதற்காக சில படங்கள் ஹாலிவுட்டில் வெளியாகும். அந்த லிஸ்ட்டில் கட்டாயம் இடம்பெறும் மான்ஸ்டர் ஹன்ட்டர். சயின்ஸ் ஃபிக்ஷன், ஆக்‌ஷன், ஃபேன்டஸி ஜானர் படங்கள் என்றால் சால இஷ்டம் பால் ஆண்டர்சனுக்கு. அந்தப் படங்கள் விமர்சன ரீதியாக பல்பு வாங்கினாலும், எதைப்பற்றியும் கவலையில்லாமல், அடுத்தடுத்த படங்கள் எடுக்கக் கிளம்பிவிடுவார்.

#MonsterHunter
#MonsterHunter
Coco Van Oppens

உலகம் முழுக்க ரிலீஸ், வசூல் ஹிட் என்பதுதான் பால் ஆண்டர்சன் படங்களின் வெற்றி ரகசியம். மனைவி மிலா ஜோவோவிச்சுடன் இணைந்து 'ரெசிடென்ட் ஈவில்' படங்கள் எடுத்ததில் இருவருமே புகழ் வெளிச்சம் பெற்றார்கள். 'ரெசிடென்ட் ஈவில்' படத்தின் அனைத்து பாகங்களும் வெளியாகி, தற்போது மீண்டும் அதை வேறொரு குழுவை வைத்து ரீபூட் செய்ய இருக்கிறார்கள். அந்த நிலையில் இந்த ஜோடி 'மான்ஸ்டர் ஹன்ட்டர்' என்னும் வீடியோ கேம் சீரிஸைக் கையிலெடுத்திருக்கிறது.

பல காலங்கள் கழித்து, பெரிய ஸ்கீரினில் சண்டைக்காட்சிகள் நிறைந்த படத்தைக் காண மான்ஸ்டர் ஹன்ட்டரைத் தேர்வு செய்யலாம்.

அடுத்த கட்டுரைக்கு