Published:Updated:

Squid Game: வருகிறது இரண்டாவது சீசன்; உறுதிப்படுத்தியது Netflix!

Squid Game

கொரிய சிரீஸான Squid Game செப்டம்பர் 2021-ல் வெளியாகியது. வெளியான முதல் நான்கு வாரங்களுக்குள் 1.65 பில்லியன் மணிநேரங்களைத் தாண்டி இந்த சிரீஸ் பார்க்கப்பட்டது.

Squid Game: வருகிறது இரண்டாவது சீசன்; உறுதிப்படுத்தியது Netflix!

கொரிய சிரீஸான Squid Game செப்டம்பர் 2021-ல் வெளியாகியது. வெளியான முதல் நான்கு வாரங்களுக்குள் 1.65 பில்லியன் மணிநேரங்களைத் தாண்டி இந்த சிரீஸ் பார்க்கப்பட்டது.

Published:Updated:
Squid Game

ரெட் லைட்... கிரீன் லைட்...

நினைவில் இருக்கிறதா... நாம சின்ன வயசுல விளையாடிய விளையாட்டுகளில் வெற்றி பெற்றால் கோடிக்கணக்கில் பணம். தோற்றால் மரணம். கதிகலங்க வைக்கும் இந்த ரூலோடு உள்ளே வருகிற 100 பேரில் ஒருவராக தன் மகளுக்காக களத்தில் இறங்கும் ஹீரோ என்னவானான் என்பதே ஸ்க்விட் கேமின் கதை.

நெட்பிலிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் ஹிட்டடித்த Squid Game சிரீஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் இரண்டாவது சீஸன் எடுக்கப்படுமா என்கிற கேள்விக்கு இப்போது பதிலளித்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.

Squid Game இரண்டாவது சீஸன் உருவாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து, ட்விட்டரில் குட்டி டீசரையும் பகிர்ந்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.

கொரிய சிரீஸான Squid Game செப்டம்பர் 2021-ல் வெளியாகியது. வெளியான முதல் நான்கு வாரங்களுக்குள் 1.65 பில்லியன் மணிநேரங்களைத் தாண்டி இந்த சிரீஸ் பார்க்கப்பட்டது. நெட்பிலிக்ஸ் வரலாற்றிலேயே இந்த ஷோவின் வெற்றி, ஒரு மைல்கல்.

Squid Game
Squid Game

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்ததெந்த கதாபாத்திரம் இரண்டாவது சீஸனில் இருப்பார்கள் என்பதை இயக்குநரும் தயாரிப்பாளருமான Hwang Dong-Hyuk தெரிவித்திருக்கிறார்.

முதன்மை கதாபாத்திரமும் முதல் Squid Game-ன் வெற்றியாளருமான Seong Gi-hun மற்றும் கேமை நடத்தும் முகமூடி மனிதன் இருவரும் இந்தத் தொடரில் இருப்பார்கள்.

"முதல் சீசன் உயிர் பெறுவதற்கு 12 ஆண்டுகள் ஆனது. ஆனால் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி பிரபலமாவதற்கு வெறும் 12 நாட்களே போதுமாக இருந்தது. இந்தத் தொடரின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக எங்கள் ஷோவைப் பார்த்து கொண்டாடியதற்கு பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் " என்கிறார் Hwang Dong-Hyuk.

இரண்டாவது சீசனுக்கு ரெடியா மக்களே! முதல் சீசனில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism