அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், டாம் பிலிப்ஸ் இயக்கிய ஜோக்கர், சாம் மெண்டிஸ் இயக்கிய 1917, டிகாப்ரியோ மற்றும் பிராட் பிட் இணைந்து நடித்த ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி உள்ளிட்ட படங்கள் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருந்தன.

குறிப்பாக சாம் மெண்டிஸ் இயக்கிய 1917 படம், சிறந்த இயக்குநர், சிறந்த படம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைக் குவிக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கணித்திருந்தனர். ஆனால், அவர்களின் கணிப்பைப் பொய்யாக்கி பாங்க் ஜூன் ஹோ இயக்கிய தென்கொரியத் திரைப்படமான பாராசைட் சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை, சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என 4 விருதுகளைக் குவித்திருக்கிறது.
அதேபோல், ஜோக்கர் திரைப்படத்துக்காக வாக்கீன் பீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார். அவர், 4-வது முறையாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.
ஆஸ்கர் விருது வென்றவர்கள் - முழுப் பட்டியல்
சிறந்த படம் - பாராசைட் (Parasite)
சிறந்த இயக்குநர் - பாங்க் ஜூன் ஹோ (Parasite)
சிறந்த நடிகை - ரெனி ஜெல்வெகர் (Judy)
சிறந்த நடிகர் - வாக்கீன் பீனிக்ஸ் (Joker)

சிறந்த துணை நடிகை - லாரன் டெர்ன் (Marriage Story)
சிறந்த துணை நடிகர் - பிராட் பிட் (Once Upon A Time... In Hollywood)
சிறந்த திரைக்கதை - பாங்க் ஜூன் ஹோ மற்றும் ஹான் ஜின் (பாராசைட்)
சிறந்த தழுவல் திரைக்கதை - டைகா வைட்டி ( Jojo Rabbit)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - Toy Story 4
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் - Parasite (தென்கொரியா)
சிறந்த ஆவணப்படம் - American Factory
சிறந்த ஆவண குறும்படம் - Learning To Skateboard In A Warzone (If You're a Girl)
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் - The Neighbors' Window
சிறந்த அனிமேஷன் குறும்படம் - Hair Love
சிறந்த பின்னணி இசை - Joker
சிறந்த பாடல் - - (I'm Gonna) Love Me Again from Rocketman
சிறந்த ஒலி தொகுப்பு - Ford v Ferrari
சிறந்த ஒலிக்கலவை - 1917
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - Once Upon A Time In Hollywood
சிறந்த ஒளிப்பதிவு - 1917
சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் - Bombshell
சிறந்த ஆடை வடிவமைப்பு - Little Women
சிறந்த படத்தொகுப்பு - Ford v Ferrari
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - 1917