2022-ஆஸ்கர் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு, அகாடமி விருதுகளைத் தவிர பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கும் பல விருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிறந்த திரைப்படம், நடிகர் மற்றும் பிற பிரிவுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களை ஊக்குவிக்கும் வகையில் 'ஸ்வாக் பேக் (swag bag)' என்ற பரிசுப் பைகள் தரப்படுகின்றன. இதில் வயதை குறைத்துக் காட்டக்கூடிய மேக்அப் பொருட்கள், சாக்லேட்கள், பிஸ்கட்கள், அழகு சம்பந்தமான இலவச சிகிக்சைத் திட்டங்கள் மற்றும் அவர்களின் வீட்டை புதுப்பிப்பதற்கான இலவச சேவைகளுக்கான கூப்பன்கள் என சுமார் ரூ.76 லட்சம் ($100K) மதிப்புள்ள பல பரிசு பொருட்கள் அடக்கியுள்ளன.

அதுமட்டுமல்லாமல் அரிட்டி தங்கம் கலந்த ஆலிவ் எண்ணெய் (gold-infused olive oil), உடல் மேம்பாடுகளுக்கான ஆர்ட் லிபோ(Art Lipo body enhancementsArt), C60 பர்பிள் பவர் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் (C60 Purple Power), சாய் பரிசு தொகுப்புகள் (chai gift sets), நிலக்கரி மற்றும் கேனரியால் செய்யப்பட்ட ஆடம்பர மர மெழுகுவர்த்திகள் (Coal and Canary luxury wood wick candles), கொம்விடா UMF 10+ தேன் (Comvita UMF 10+ Manuka Honey), தனிப்பட்ட பயிற்சி வழங்குவதற்கான திட்டம் (personal training), இயற்கை முகபுள்ளி நீக்கி (natural spot remove) என பல்வேறு பரிசு பொருட்கள் இதில் அடங்கியுள்ளன. எனவே இந்த ஆண்டு ஆஸ்கரில் வெற்றிபெற்றவர்களுக்கு மட்டுமில்லாமல் தேர்வுசெய்யப்பட்ட அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.