Published:Updated:

Oscars 2023 Complete Winners List: 95வது ஆஸ்கர் விருதினை வென்ற திரைப்படங்கள் இவைதான்!

Oscar 2023

Oscars 2023: 95வது ஆஸ்கர் விருதினை இரண்டு இந்தியப் படைப்புகள் வென்றிருக்கின்றன. அவற்றைத் தாண்டி, பல்வேறு படங்கள் வென்றிருக்கின்றன, பல்வேறு கலைஞர்கள் சாதித்திருக்கின்றனர். விருதாளர்களின் முழுப் பட்டியல் இதோ!

Published:Updated:

Oscars 2023 Complete Winners List: 95வது ஆஸ்கர் விருதினை வென்ற திரைப்படங்கள் இவைதான்!

Oscars 2023: 95வது ஆஸ்கர் விருதினை இரண்டு இந்தியப் படைப்புகள் வென்றிருக்கின்றன. அவற்றைத் தாண்டி, பல்வேறு படங்கள் வென்றிருக்கின்றன, பல்வேறு கலைஞர்கள் சாதித்திருக்கின்றனர். விருதாளர்களின் முழுப் பட்டியல் இதோ!

Oscar 2023
அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் கோலகலமாகத் தொடங்கி நடைபெற்றது. இந்த 95வது அகாடமி விருதுகள் நிகழ்வைப் பிரபல டிவி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார்.

இந்த வருடம் கூடுதல் சிறப்பாக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ஆஸ்கர் விருதினை வழங்குபவர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார். இந்தியாவிலிருந்து `All that Breathes', `The Elephant Whisperers', `RRR' படத்தின் `நாட்டு நாட்டு' பாடல் ஆகியவை ஆஸ்கர் பரிந்துரையில் இடம்பெற்றிருந்தன. இதில் `The Elephant Whisperers' மற்றும் `RRR' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் இந்தியாவுக்காக ஆஸ்கர் விருதுகளை வென்று பெருமை சேர்த்துள்ளது.

இதுதவிர என்னனென்ன திரைப்படங்கள் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளன என்பதைப் பற்றிப் பார்ப்போம்!

சிறந்த ஆவணக்குறும்படம் - 'The Elephant Whisperers'

Oscars 2023: The Elephant Whisperers
Oscars 2023: The Elephant Whisperers
Chris Pizzello

கார்த்திகி கோன்சால்விஸ் இயக்கத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘The Elephant Whisperers’ தமிழ் ஆவணப்படம் சிறந்த ஆவணக்குறும்படம் எனும் பிரிவில் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது.

சிறந்த பாடல் - `RRR' படத்தின் `நாட்டு நாட்டு' பாடல்

Oscars 2023: 'நாட்டு நாட்டு' பாடல்
Oscars 2023: 'நாட்டு நாட்டு' பாடல்
Chris Pizzello

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடித்து, கீரவாணி (மரகதமணி) இசையமைத்திருந்த  'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது.

Best International Feature Film - 'All Quiet on the Western Front' (Germany)

Oscars 2023: All Quiet on the Western Front
Oscars 2023: All Quiet on the Western Front

எட்வர்ட் பெர்கர் இயக்கத்தில் பெலிக்ஸ் கம்மரர், ஆல்பிரெக்ட் ஷூச், ஆரோன் ஹில்மர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருந்த 'All Quiet on the Western Front' திரைப்படம் 'Best International Feature Film' ஆஸ்கர் விருதினை வென்றது.

Best Supporting Actor - Ke Huy Quan ('Everything Everywhere All at Once') 

Oscars 2023: Ke Huy Quan
Oscars 2023: Ke Huy Quan

டேனியல் குவான், டேனியல் ஷீனெர்ட் இயக்கத்தில் வெளியாகியிருந்த 'Everything Everywhere All at Once' திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்த அமெரிக்க நடிகரான 'Ke Huy Quan' சிறந்த துணை நடிகருக்கான விருதினைப் பெற்றார்.

Best Supporting Actress - Jamie Lee Curtis ('Everything Everywhere All at Once')

Jamie Lee Curtis
Jamie Lee Curtis

'Everything Everywhere All at Once' திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்த Jamie Lee Curtis சிறந்த துணை நடிகைக்கான விருதினைப் பெற்றார்.

Guillermo del Toro’s Pinocchio - Best Animated Feature Film 

Guillermo del Toro’s Pinocchio
Guillermo del Toro’s Pinocchio

Guillermo del Toro, மார்க் குஸ்டாஃப்சன் இயக்கத்தில் அலெக்ஸாண்ட்ரே டெஸ்ப்லாட் இசையில் வெளியான 'Guillermo del Toro’s Pinocchio' திரைப்படம் 'Best Animated Feature Film' விருதினை வென்றது.

Best Documentary Feature Film - 'Navalny'

Navalny
Navalny

டேனியல் ரோஹர் (Daniel Roher) இயக்கத்தில் வெளியான 'Navalny' ஆவணப்படம் 'Best Documentary Feature Film' விருதினை வென்றது.

Best Live Action Short - An Irish Goodbye

An Irish Goodbye
An Irish Goodbye

டாம் பெர்க்லி, ராஸ் ஒயிட் இயக்கத்தில் வெளியாகியிருந்த திரைப்படம் 'An Irish Goodbye'. இத்திரைப்படம் 'Best Live Action Short' விருதைப் பெற்றுள்ளது.

Best Cinematography - 'All Quiet on the Western Front' — James Friend

James Friend
James Friend

சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை 'All Quiet on the Western Front' திரைப்படத்திற்காக James Friend பெற்றுக் கொண்டார்.

Best Makeup and Hairstyling  - Adrien Morot, Judy Chin and Anne Marie Bradley (The Whale)

Judy Chin, Adrien Morot,  Anne Marie Bradley
Judy Chin, Adrien Morot, Anne Marie Bradley

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருது 'The Whale' திரைப்படத்திற்காக Judy Chin, Adrien Morot, Anne Marie Bradley ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Best Costume Design  - Ruth E. Carter (Black Panther: Wakanda Forever)

Ruth E. Carter
Ruth E. Carter

ரியான் கூக்லர் இயக்கத்தில் வெளியான 'Black Panther: Wakanda Forever' திரைப்படத்திற்குச் சிறப்பாக ஆடை வடிவமைப்பு செய்திருந்த Ruth E. Carter சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதினை வென்றார்.

Best Animated Short Film - The Boy, the Mole, the Fox and the Horse

The Boy, the Mole, the Fox and the Horse
The Boy, the Mole, the Fox and the Horse

பீட்டர் பேய்ன்டன், சார்லி மெக்கேசி இயக்கத்தில் உருவான அனிமேஷன் திரைப்படம் 'The Boy, the Mole, the Fox and the Horse'. இத்திரைப்படம் சிறந்த அனிமேட்டட் குறும்படத்திற்கான விருதினை வென்றுள்ளது. இதற்கான விருதினை சார்லி மெக்கேசி மற்றும் மத்தேயு பிராய்ட் பெற்றுக்கொண்டனர்.

Best Production Design - All Quiet on the Western Front

Ernestine Hipper and Christian M. Goldbeck
Ernestine Hipper and Christian M. Goldbeck

எட்வர்ட் பெர்கர் இயக்கத்தில் வெளியான 'All Quiet on the Western Front' திரைப்படத்திற்கு சிறந்தத் தயாரிப்பு வடிவமைப்பு (Best Production Design) விருது கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போர் குறித்த படத்திற்கு சிறப்பான முறையில் தயாரிப்பு வடிவமைப்பு செய்த Christian M. Goldbeck மற்றும் செட் டெக்கரேஷன் செய்த Ernestine Hipper இருவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

Best Original Score  - All Quiet on the Western Front

Volker Bertelmann
Volker Bertelmann

'All Quiet on the Western Front' திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் Volker Bertelmann'க்கு Best Original Score விருது வழங்கப்பட்டது.

Best Visual Effects - Avatar: The Way of Water

Joe Letteri, Richard Baneham, Eric Saindon and Daniel Barrett
Joe Letteri, Richard Baneham, Eric Saindon and Daniel Barrett

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகியிருந்த அவதார் திரைப்படத்தின் இரண்டாவது பாகமான 'Avatar: The Way of Water' திரைப்படம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான விருதினைப் வென்றுள்ளது. இதற்கான விருதினை விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞர்கள் Joe Letteri, Richard Baneham, Eric Saindon and Daniel Barrett பெற்றுக்கொண்டனர்.

Best Original Screenplay - Everything Everywhere All at Once

Daniel Scheinert and Daniel Kwan
Daniel Scheinert and Daniel Kwan

டேனியல் குவான், டேனியல் ஷீனெர்ட் இயக்கத்தில் உருவான Everything Everywhere All at Once திரைப்படம் சிறந்த திரைக்கதைக்கான (Best Original Screenplay) விருதினை வென்றுள்ளது. இதற்கான விருதினை இப்படத்தின் இயக்குநர்கள் டேனியல் குவான், டேனியல் ஷீனெர்ட் பெற்றுக்கொண்டனர்.

Best Adapted Screenplay - Women Talking

Sarah Polley
Sarah Polley

Best Adapted Screenplay (சிறந்த தழுவல் திரைக்கதை) விருது 'Women Talking' திரைப்படத்திற்காக Sarah Polleyக்கு வழங்கப்பட்டது.

Best Sound - Top Gun: Maverick

Mark Weingarten, James H. Mather, Al Nelson, Chris Burdon and Mark Taylor
Mark Weingarten, James H. Mather, Al Nelson, Chris Burdon and Mark Taylor

Best Sound-க்கான விருது 'Top Gun: Maverick' திரைப்படத்திற்காக Mark Weingarten, James H. Mather, Al Nelson, Chris Burdon and Mark Taylor ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Best Film Editing - Paul Rogers (Everything Everywhere All at Once)

Paul Rogers
Paul Rogers

சிறந்த படத்தொகுப்பிற்கான விருது 'Everything Everywhere All at Once' திரைப்படத்திற்காக பால் ரோஜர்ஸ்க்கு (Paul Rogers) வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த இயக்குநர் - Daniel Kwan, Daniel Scheinert (Everything Everywhere All at Once) 

Daniel Scheinert and Daniel Kwan
Daniel Scheinert and Daniel Kwan

சிறந்த நடிகருக்கான விருதை 'Everything Everywhere All at Once' திரைப்படத்தை இயக்கிய Daniel Scheinert மற்றும் Daniel Kwan வென்றனர்.

சிறந்த முன்னணி நடிகர் - Brendan Fraser (The Whale) 

Brendan Fraser
Brendan Fraser

சிறந்த நடிகருக்கான் விருதினை 'The Whale' திரைப்படத்தில் சிறப்பாக நடித்த Brendan Fraser வென்றார்.

சிறந்த முன்னணி நடிகை - Michelle Yeoh ('Everything Everywhere All at Once')

Michelle Yeoh
Michelle Yeoh

சிறந்த நடிகருக்கான் விருதினை 'Everything Everywhere All at Once' திரைப்படத்தில் நடித்த மலேசிய நடிகையான Michelle Yeoh வென்றார்.

சிறந்த திரைப்படம் - Everything Everywhere All at Once

டேனியல் குவான், டேனியல் ஷீனெர்ட் மற்றும் ஜொனாதன் வாங்
டேனியல் குவான், டேனியல் ஷீனெர்ட் மற்றும் ஜொனாதன் வாங்

டேனியல் குவான், டேனியல் ஷீனெர்ட் இயக்கத்தில் உருவான 'Everything Everywhere All at Once' திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை வென்றுள்ளது. இதற்கான விருதினை டேனியல் குவான், டேனியல் ஷீனெர்ட் மற்றும் ஜொனாதன் வாங், தயாரிப்பாளர்கள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

7 ஆஸ்கர் விருதுகளை வென்ற Everything Everywhere All at Once திரைப்படம்

Oscars 2023: Everything Everywhere All at Once  குழுவினர்
Oscars 2023: Everything Everywhere All at Once குழுவினர்

'Everything Everywhere All at Once' திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளைக் குவித்துள்ளது.

இந்த 95-வது ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்களில் உங்களின் ஃபேவரைட் எது என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.