Published:Updated:

Oscars 2023 Updates: மேடையில் அரங்கேறிய `RRR' படத்தின் `நாட்டு நாட்டு' பாடல்; விருதினை வெல்லுமா?

Oscars 2023: மேடையில் அரங்கேறிய 'நாட்டு நாட்டு' பாடல்

'சிறந்த பாடல்' பிரிவுக்கான விருது விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், 'நாட்டு நாட்டு' பாடல் அதை நிச்சயம் வெல்லும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 95வது அகாடமி விருதுகள் நிகழ்வைப் பிரபல காமெடியன் ஜிம்மி கிம்மல் தொடங்கி வைத்தார்.
Oscars 2023  ; Documentry Feature Flim
Oscars 2023 ; Documentry Feature Flim

இந்த வருடம், மூன்று விருதுகளின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. சிறந்த ஆவணப்படம் பிரிவில் சௌனக் சென் இயக்கிய 'All that Breathes', சிறந்த ஆவணக்குறும்படம் பிரிவில் கார்த்திகி கோன்சால்விஸ் இயக்கிய 'The Elephant Whisperers' மற்றும் சிறந்த பாடல் பிரிவில் கீரவாணி இசையில் 'RRR' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதில் 'சிறந்த ஆவணப்படம்' பிரிவில், விருது வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியப் படைப்பான 'All that Breathes' விருதினைத் தவறவிட்டிருக்கிறது. அந்தப் பிரிவில் 'Navalny' என்ற படைப்பு வென்றிருக்கிறது.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்
Chris Pizzello

விழாவினைத் தொடங்கி வைத்த ஜிம்மி கிம்மல், மேடையில் யாரேனும் அதிக நேரம் பேசினால் அவர்களை 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆடியவாறே வரும் நடனக்குழுவினர், அப்படியே வெளியே அழைத்துச் சென்றுவிடுவர் என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

இந்த வருடம் கூடுதல் சிறப்பாக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ஆஸ்கர் விருதினை வழங்குபவர்களில் ஒருவராக இடம்பெற்றிருக்கிறார். ரெட் கார்பெட் நிகழ்வில் இடம்பெற்றிருந்த தீபிகா, கறுப்பு நிற உடையில் நடந்துவந்து அனைவரையும் கவர்ந்தார்.

ஆஸ்கர் மேடையில் விருதுகள் வழங்குவதற்கு இடையே பல்வேறு கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள், நடனங்கள் உள்ளிட்டவை அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், சிறந்த பாடல் பிரிவில் இடம்பெற்றிருக்கும் 'நாட்டு நாட்டு' பாடலை, பாடகர்கள் மற்றும் பல்வேறு நடனக்கலைஞர்கள் மேடையில் அரங்கேற்றினர்.

Oscars 2023: மேடையில் அரங்கேறிய  'நாட்டு நாட்டு' பாடல்
Oscars 2023: மேடையில் அரங்கேறிய 'நாட்டு நாட்டு' பாடல்

'நாட்டு நாட்டு' பாடல் குறித்த ஒரு சிறிய அறிமுகத்தை நடிகை தீபிகா படுகோன் வழங்கினார். அனைவரின் கரகோஷத்துடனும் ஆராவாரத்துடனும் மேடையில் அந்தப் பாடல் அரங்கேறியது.

'சிறந்த பாடல்' பிரிவுக்கான விருது விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், 'நாட்டு நாட்டு' பாடல் அதை நிச்சயம் வெல்லும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.