Published:Updated:

'டைட்டானிக்' படம் பண்ணத் தயங்கிய டி காப்ரியோ! - பெளல் ரட் உடைத்த ரகசியம்

டி காப்ரியோ-வின் திரைப்பயணத்தில், ‘டைட்டானிக்’ அவருக்கான தனி இடத்தைப் பெற்றுக்கொடுத்தது.

Leonardo DiCaprio
Leonardo DiCaprio

டைட்டானிக் படம், ஓர் அழகான காதல் காவியம். லியோனார்டோ டி காப்ரியோவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்த படம். லியோனார்டோ டி காப்ரியோ ஹாலிவுட்டில் காதல் மன்னாகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியவர். இப்போது ஆக்‌ஷன், த்ரில்லர், சயின்ஸ் ஃபிக்ஷன் என அவர் தொடாத ஜானர்களே கிடையாது. டி காப்ரியோ திரைப்பயணத்தில் ‘டைட்டானிக்’அவருக்கான தனி இடத்தைப் பெற்றுக்கொடுத்தது. காதலை மையப்படுத்தி எத்தனை படங்கள் வந்தாலும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ‘டைட்டானிக்’ தான் பெரும்பாலான காதலர்களுக்கு ஆல்-டைம் ஃபேவரைட். அந்த பிரமாண்ட கப்பலில் கதையின் நாயகன் ஜாக், நாயகி ரோஸ் நிற்கும் புகைப்படம் காதலர்களின் மனதில் இப்போதும் நிழலாடும். டி காப்ரியோவுக்கு பெண் ரசிகர்கள் ஏராளம். ஆரம்பத்தில் டி காப்ரியோ, டைட்டானிக் ஜாக்-காகத்தான் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் அறியப்பட்டார்.

Leonardo DiCaprio
Leonardo DiCaprio

இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு டி காப்ரியோவுக்கு யோசனையாக இருந்துள்ளது. அப்போது, ஆண்ட் மேன் கதாநாயகன் பெளல் ரட்-டிடம் ( Paul Rudd ) இதுகுறித்துக் கேட்டுள்ளார். இதில் நீ கண்டிப்பாக நடிக்க வேண்டும் என பெளல் கூறியுள்ளார். டி-காப்ரியோ ரோமியோ + ஜூலியட் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் டைட்டானிக் கதை அவரிடம் சொல்லப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பெளல் ரட் தற்போது கூறியுள்ளார்.

இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய பெளல் ரட், “ எனக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருப்பதாக நினைக்கவில்லை. சில தருணங்களில் பழைய நினைவுகளை அசைபோடும்போது சுவாரஸ்யமான சில உரையாடல்கள், சில அழகிய தருணங்கள் நினைவுக்கு வரும். ஒரு படத்தின் ஷூட்டிங் முடிந்து நானும் லியோவும் ஒரு காரில் திரும்பிக்கொண்டிருந்தோம் . அப்போது லியோ என்னிடம், ‘ ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது மிகப்பெரிய படம் . அது ஒரு ஸ்டூடியோ திரைப்படம். பெயர் டைட்டானிக்' என்றார்.

Paul Rudd
Paul Rudd

நான் உடனே அவரிடம் 'அற்புதம்' என்று கூறினேன். மேலும், 'டைட்டானிக் குறித்து எனக்கு நிறைய தெரியும் எனது அப்பா என்னிடம் இதுகுறித்து நிறைய பேசியுள்ளார்' என்றேன். இதைக் கேட்ட டி காப்ரியோ, 'எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை' என்றார். 'இதை நீ கண்டிப்பாகச் செய்ய வேண்டும்' எனக் கூறினேன். இதுகுறித்து இப்போது நான் எதுவும் சொல்ல நினைக்கவில்லை. பழைய நினைவுகளை அசைபோடுவது சுவாரஸ்யமானது. லியோ அந்தப் படத்தை செய்தார்” என பெளல் கூறியுள்ளார்.