டிஸ்னி மற்றும் பிக்சார் நிறுவனம் இணைந்து தயாரித்து 1995-ல் வெளியான 'டாய் ஸ்டோரி' என்னும் அனிமேஷன் படம் உலகம் முழுவதும் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் கார்ட்டூன் வடிவிலும் 3டி அனிமேஷன் திரைப்பட வடிவிலும் வெளியாகின.
குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற 'பஸ் லைட்இயர்' (Buzz Lightyear) என்ற கதாபாத்திரம் உலகமெங்கும் பிரபலமானது. அதன் பன்ச் வசனமான "To Infinity and Beyond!" ("முடிவிலி மற்றும் அதற்கு அப்பால்!") பலரின் வாழ்த்துச் செய்திகளிலும் தவறாமல் இடம்பெற்றது. தொடர்ந்து இக்கதாபாத்திரத்தை மையமாக வைத்து கார்ட்டூன் வடிவில் நிறைய சீரிஸ்கள் எடுப்பட்டன. தற்போது இதே கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு 'லைட்இயர்' என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. டிஸ்னி மற்றும் பிக்சார் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் ஜூன் 17ம் தேதி வெளியாகவுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில் இப்படத்தில் தன்பாலின முத்தக்காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், இது அரபு நாட்டின் நம்பிக்கைகளுக்கு எதிராக உள்ளது என்று கூறி சவுதி அரேபியா, எகிப்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் லெபனான் உள்ளிட்ட அரபு நாடுகளைச் சேர்ந்த 14 நாடுகள் இப்படத்திற்கு தடை விதித்துள்ளது.
இது பற்றி பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் கேலின் சுஸ்மான், படத்தின் காட்சிகள் எதுவும் நீக்கப்படாது என்றார்.
"அன்பான மற்றும் உத்வேகம் தரும் உறவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் 'பஸ்' கதாபாத்திரத்திற்கு என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. எனவே இது குறித்த காட்சிகள் எதுவும் நீக்கப்படாது" என்று அவர் கூறியுள்ளார்.