Published:Updated:

`ரிசர்வாயர் டாக்ஸ்' முதல் `தி ஹேட்ஃபுல் எய்ட்’ வரை... டாரன்டினோவின் திரைமொழி!

Quentin Tarantino

'பல்ப் ஃபிக்ஷன்' வெளியீட்டிற்குப் பின்னரே, 'டாரன்டினோவின் மேக்கிங் ஸ்டைல்' என்ற ஒரு பாணி உருவானது. அது மட்டுமல்லாமல், ஹாலிவுட்டில் வகைப்படுத்தப்பட்ட ஜானர்களின் விளக்கங்களுக்கு மாற்றுவடிவமும் புது எல்லைகளும் நடைமுறைக்கு வந்தன.

`ரிசர்வாயர் டாக்ஸ்' முதல் `தி ஹேட்ஃபுல் எய்ட்’ வரை... டாரன்டினோவின் திரைமொழி!

'பல்ப் ஃபிக்ஷன்' வெளியீட்டிற்குப் பின்னரே, 'டாரன்டினோவின் மேக்கிங் ஸ்டைல்' என்ற ஒரு பாணி உருவானது. அது மட்டுமல்லாமல், ஹாலிவுட்டில் வகைப்படுத்தப்பட்ட ஜானர்களின் விளக்கங்களுக்கு மாற்றுவடிவமும் புது எல்லைகளும் நடைமுறைக்கு வந்தன.

Published:Updated:
Quentin Tarantino

ஒருபுறம் உலக சினிமா ரசிகர்கள், மறுமுனையில் ஹாலிவுட் சினிமா ரசிகர்கள். மாறி மாறி இப்படி ஓர் இயக்குநரைப் புகழ்ந்து தள்ளுகிறார்களே... மொத்தம் 9 படங்களை மட்டுமே இதுவரை இயக்கியுள்ள இந்த டாரன்டினோ யார்? விரைவில் திரைக்கு வரவிருக்கும் அவரது 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்' படத்தைக் காண்பதற்கு முன்னதாக இதைப் படித்துவிட்டுச் செல்லுங்கள்.

Quentin Tarantino
Quentin Tarantino

குவென்டின் டாரன்டினோ, இந்தப் பெயருக்கே உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. தன் திரைப்படங்களில், தனித்துவமான திரைமொழி , திரைக்கதை அமைப்பு, கதாபாத்திரங்களின் உரையாடலமைப்பு, கதைப்போக்கு, கதைக்களம் என அனைத்திலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி, தன்னுடைய பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு படத்திலும் ஒருவிதமான அனுபவத்தை தருபவர், டாரன்டினோ.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனது முதல் படமான 'ரிசர்வொயர் டாக்ஸ்'ஸின் வழியே எல்லோராலும் அறியப்படுவதற்கு முன்பே, ஹாலிவுட்டில் சில படங்களில் துணை தயாரிப்பாளராகவும், துணை கதாசிரியராகவும் பணிப்புரிந்தது மட்டுமல்லாமல், ஓரிரு படங்களில் நடித்தும் இருந்தார், டாரன்டினோ. தான் கதை எழுதிய 'ட்ரூ ரொமான்ஸ்' படத்தில் தனக்குக் கிடைத்த தொடர்புகளையும் வருமானத்தையும் பயன்படுத்தி, 'ரிசர்வாயர் டாக்ஸ்'ஸை இயக்கி வெளியிட்டார். அந்தப் படம், அனைவராலும் பாராட்டப்பட்டது.

அதன்பிறகு, அவருக்கு 'ஸ்பீடு' மற்றும் 'மென் இன் பிளாக்' போன்ற மிக அதிக பொருள்செலவில் உருவாகும் படங்களில் கதைவிவாதம், திரைக்கதையமைப்பு போன்ற பணிக்காக வாய்ப்புகள் வந்தன. அவை அனைத்தையும் உதறித்தள்ளி, தனது 'பல்ப் ஃபிக்ஷன்' படத்திற்கான கதை விவாதத்தைத் தொடங்கினார் டாரன்டினோ. அப்படத்தின் நாண்-லீனியர் திரைக்கதை இன்று வரை ரசிக்கப்பட்டுகிறது.

'பல்ப் ஃபிக்ஷன்' வெளியீட்டிற்குப் பின்னரே, 'டாரன்டினோவின் மேக்கிங் ஸ்டைல்' என்ற ஒரு பாணி உருவானது. அது மட்டுமல்லாமல், ஹாலிவுட்டில் வகைப்படுத்தப்பட்ட ஜானர்களின் விளக்கங்களுக்கு மாற்றுவடிவமும் புது எல்லைகளும் நடைமுறைக்கு வந்தன. டாரன்டினோ, "பொதுவாகவே நான் எந்த ஜானரை எழுத எடுத்துகொண்டாலும் அந்த ஜானரில் இதுவரை சொல்லப்பட்ட எக்ஸ்ட்ரீம்களை உடைக்கவும் மாற்றியமைக்கவுமே விரும்புவேன்", என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். 'பல்ப் ஃபிக்ஷனு'க்குப் பின் 1999ல், 'நியூ லைன் சினிமா' நிறுவனம் டாரன்டினோவை காமிக் கதாபாத்திரமான 'அயர்ன் மேன்'-ஐ வைத்து ஒரு திரைக்கதை எழுதிப் படம் இயக்க ஒப்பந்தம் செய்திருந்தனர். என்றாலும், பின்னர் அது கைவிடப்பட்டது.

Reservoir Dogs
Reservoir Dogs

டாரன்டினோ, தன் திரைப்படங்களில் கதாபாத்திரங்களின் கான்வர்சேஷன் வழியாகவே கதையின் போக்கை பார்வையாளர்களுக்கு சொல்லக்கூடியவர். அவருடைய அனைத்துப் படங்களிலும் எட்டு முதல் பத்து நிமிடங்களுக்குக் குறையாத கான்வர்சேஷன் பகுதிகள் நிச்சயமாக இருக்கும். ஏனெனில், கதைப்போக்கு மற்றும் அதன் திருப்பங்களின் சின்னச்சின்ன எலமென்ட்டுகளை வசனங்களில் வைத்தே கதை சொல்வார். அவருடைய வசனங்கள், பார்வையாளர்களின்மீது ஆதிக்கம்கொண்டிருக்கும். சீரியஸான காட்சியமைப்பில் சிரிக்க வைப்பதும், சிரித்துக்கொண்டிருக்கும்போது அழவைப்பதுமென பார்வையாளர்களைத் தன் வசனங்களின் வழியே கட்டிப்போட்டிருப்பார். 'ரிசர்வாயர் டாக்ஸ்'ஸின் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சியிலும் சரி , 'கில் பில்' படத்தில் 'ப்ரைடு - பில்' இரு கதாபாத்திரங்களின் உரையாடலிலும் சரி , 'இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்'ஸின் பேஸ்மென்ட் பார் காட்சியிலும் சரி, தன் ஸ்டைல் வசனக்காட்சிகளால் ஆச்சர்யப்படுத்தியிருப்பார், டாரன்டினோ.

டாரன்டினோவின் மிகவும் அசரவைக்கும் விஷயம் , அவரின் 'கான்ஃப்லிக்டிங்க் டோன்' என்னும் 'முரண்பட்ட காட்சியமைப்பு'. அதைத் திரைக்கதையில் பயன்படுத்தும் விதமே ஒரு புதுமை எனலாம். 'முரண்பட்ட காட்சியமைப்பு' என்பது, காட்சியின் விஷுவலில் காட்டப்படுவதற்குப் பொருந்தாத பின்னணி இசையை அந்த விஷுவலோடு இணைப்பது. இம்மாதிரியான காட்சிகள், பார்வையாளர்களிடத்தில் பின்னணி இசையின் மூலம் ஒரு மனநிலையை உருவாக்கி, உடனே அந்த இசைக்கு முரண்பட்ட விஷூவலமைப்பின்மூலம் உருவாக்கிய மனநிலையை உடனே தகர்த்து, வேறொரு மனநிலைக்கு நகர்த்தும். அந்தக் காட்சி, பார்வையாளர்களின் மனதில் அழுந்த பதியும் என்பது அறிவியல். டாரன்டினோவிற்கு இந்த விஷயத்தில் 'கிங்க் ஆஃப் கான்ஃப்லிக்டிங்க் டோன்' என்றே சொல்லலாம், ஏனென்றால், அதை அவர் மிகவும் சரளமாகச் செய்துவிடுவார்.

Django Unchained
Django Unchained

அவருடைய 'தி ஹேட்ஃபுல் எய்ட்' படத்தில் மேஜர் மார்க்குவிஸ், ஜெனரல் ஸ்மித்தர் கதாபாத்திரத்தைக் கொல்லும் காட்சியில், 'மொசார்ட்'டின் க்ளாஸிக் வகை இசையையும் 'ரிசர்வாயர் டாக்ஸ்'ஸில் மிஸ்டர் ப்லாண்ட், போலீஸைத் தாக்கும் காட்சியில் 'ஸ்டக் இன் தி மிடில்' என்ற மெலோடி வகை பாடலையும், இது போல 'இன்க்லொரியஸ் பாஸ்டர்ட்ஸ்', 'டெத் ப்ரூஃப்', 'ஜாங்கோ அன்ச்செயிண்டு' என வரிசையாக எல்லா படங்களிலும் கையாண்டிருப்பார்.

டாரன்டினோ, எந்த இடத்திலும் தன்னுடைய கருத்துகளை சொல்லத் தயங்கியதே இல்லை. பல நேர்காணல்களில், "எனக்கு உண்மையைச் சொல்ல உரிமையுண்டு, என் கதைகளிலும் நான் அதையே செய்கிறேன்" என்று தன்னுடைய 'ஜாக்கி ப்ரவுன்' படத்திற்கு எழுந்த கேள்விகளுக்கு விடையளித்தார். 'ஜாக்கி ப்ரவுன்' திரைப்படம், கறுப்பின மக்களை நெகட்டிவ் கதாபாத்திரங்களாகவே பயன்படுத்திக்கொண்டிருந்த 'ப்ளாக்ஸ்ப்லாய்டேஷன்' (Blaxploitation) வழக்கத்தைத் தவிர்த்து, அவர்களுக்கு மரியாதை செய்தது, டாரன்டினோவின் பங்களிப்பு.

டாரன்டினோவுக்கு வரலாறு மிகவும் பிடிக்கும் என்பதால்தான் அவரின் அனேக படங்களில் வரலாற்றைச் சார்ந்த கதையும் கதைக்களமும் இருந்தன. "வன்முறை பார்ப்பதற்கு வேடிக்கையானது" என்று சொல்லும் டாரன்டினோ, தன் திரைப்படங்களில் ரத்தம் தெரிக்கத்தெரிக்க இருக்கும் வன்முறை காட்சிகளைத் தவறாமல் கையாண்டிருப்பார். இவர், 'பெஸ்ட் ஒரிஜினல் ஸ்க்ரீன்ப்ளே'விற்கான ஆஸ்கர் விருதை இருமுறை வென்றுள்ளார். 'குவென்டின் டாரன்டினோ ஃபிலிம் ஃபெஸ்டிவல்' என்று இவர் பெயரில், ஆஸ்டின் ஃபிலிம் சொஸைட்டி வருடத்திற்கு இருமுறை விழா நடத்திவருகின்றனர்.

"நான் 10 படங்கள்தான் எடுப்பேன் , 10 என்கிற வரையரையே என்னுடைய பொறுப்புணர்வை அதிகரிக்கும்" என்ற டாரன்டினோவின் ஒன்பதாவது படமான டிக்காப்ரியோ மற்றும் பிராட் பிட் ஆகியோரின் நடிப்பில், 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்' விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ளது.