Published:Updated:

Robert De Niro: 79 வயதில் 7வது குழந்தைக்குத் தந்தையான பிரபல ஹாலிவுட் நடிகர்!

Robert De Niro

நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ராபர்ட் டி நிரோ சமீபத்தில் அவருக்கு ஏழாவது குழந்தை பிறந்திருப்பது குறித்து அறிவித்திருக்கிறார்.

Published:Updated:

Robert De Niro: 79 வயதில் 7வது குழந்தைக்குத் தந்தையான பிரபல ஹாலிவுட் நடிகர்!

நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ராபர்ட் டி நிரோ சமீபத்தில் அவருக்கு ஏழாவது குழந்தை பிறந்திருப்பது குறித்து அறிவித்திருக்கிறார்.

Robert De Niro
'தி ஐரிஷ்மேன்', 'தி காட்பாதர் பார்ட் II’, 'ரேஜிங் புல்,' 'டாக்ஸி டிரைவர்' போன்ற பலப் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துப்  பலராலும் பாராட்டபட்டவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ.

நடிப்பிற்காக இரண்டு முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார். தற்போது 79 வயதாகும் இவர் ‘அபவுட் மை ஃபாதர்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மே 26 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் விளம்பரப் பணிகளில் ராபர்ட் டி நிரோ ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அவர்  சமீபத்தில் அவருக்கு ஏழாவது குழந்தை பிறந்திருப்பது குறித்து அறிவித்திருக்கிறார்.

Robert De Niro
Robert De Niro

இதுதொடர்பாக பேசிய அவர், “ குழந்தைகள் பிறப்பதை சட்டம் வகுத்து கட்டுப்படுத்த முடியாது. அது எனக்கு மட்டுமின்றி எந்த பெற்றோருக்கும் பிடிக்காது. எனக்கு ஏழாவது குழந்தை சமீபத்தில் தான் பிறந்தது. ஏழு குழந்தைகளுக்கு தந்தையான போதிலும் மேலும் குழந்தை பெற்றுக் கொள்வதை நான் விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த பேட்டியில் குழந்தையின் பெயர் குறித்தோ, குழந்தையின் தாய் குறித்தோ அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

ராபர்ட் டி நிரோ, டியான்னே அபோட் என்பவரை  1976 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ட்ரேனா, ரஃபேல் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஆனால் 1988 ஆம் ஆண்டே பிரிந்துவிட்டனர்.  அதன்பின் மாடல் டூக்கி ஸ்மித் என்பவரை ராபர்ட் டி நிரோ திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த ஜோடிக்கு இரட்டை மகன்களான ஜூலியன் மற்றும் ஆரோன் பிறந்தனர். அதன் பின் நீரோ கிரேஸ் ஹைடவருடன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த ஜோடிக்கு எலியட், ஹெலன் கிரேஸ் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மொத்தம் 6 பிள்ளைகள் உள்ள நிலையில் தற்போது 79  வயதில் ராபர்ட் டி நிரோவுக்கு 7வது குழந்தை பிறந்திருக்கிறது.