Published:Updated:

எமிஜாக்ஸனைத் தொடர்ந்து டிவி சீரியலில் ஸ்ருதிஹாசன்!

உ. சுதர்சன் காந்தி.

'டிரெட்ஸ்டோன்' எனும் அமெரிக்க டிவி சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார், ஸ்ருதிஹாசன்.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

சில வருடங்களாக நடிகை ஸ்ருதிஹாசனுக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையாமல் இருந்தது. அதனால், 'ஹலோ சகோ' என்கிற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்தார். இதற்கிடையில், இசையில் அதிக கவனம் செலுத்தி வந்தார். லண்டனில் இவர் நடத்திய இசைக் கச்சேரிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் 'லாபம்' படத்தில் நடித்து வருகிறார், ஸ்ருதிஹாசன். இந்நிலையில், 'டிரெட்ஸ்டோன்' எனும் அமெரிக்க டிவி சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான CIA வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராமை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. இந்தத் தொலைக்காட்சி தொடரில் நீரா படெல் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இக்கதாப்பாத்திரம் டெல்லியில் ஒரு ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்து கொண்டே மறைமுகமாக கொலையாளியாகவும் உலவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. டிம் கிரிங் என்பவரால் எழுதப்பட்ட இத்தொடரின் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது. முன்னதாக, எமி ஜாக்ஸன் 'சூப்பர் கேர்ல்' என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தது குறிப்பிடத்தக்கது.