Published:Updated:

Spider-Man Across The Spider-verse: வருகிறார் இந்திய ஸ்பைடர்மேன் பவித்ர பிரபாகர் - என்ன ஸ்பெஷல்?

Spider-Man Across The Spider-verse

'ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்' திரைப்படம் இந்தியாவில் மட்டும் 10 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகிறது!

Published:Updated:

Spider-Man Across The Spider-verse: வருகிறார் இந்திய ஸ்பைடர்மேன் பவித்ர பிரபாகர் - என்ன ஸ்பெஷல்?

'ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்' திரைப்படம் இந்தியாவில் மட்டும் 10 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகிறது!

Spider-Man Across The Spider-verse
ஜோகிம் டாஸ் சாண்டோஸ், கெம்ப் பவர்ஸ், ஜஸ்டின் கே. தாம்சன் ஆகியோர் இயக்கத்தில் ஷமேக் மூர், ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட், ஆஸ்கர் ஐசக் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம் `ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்' (Spider-Man Across The Spider-verse). இத்திரைப்படம் வரும் ஜூன் 2ம் தேதி வெளியாகவிருக்கிறது.

நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் 'ஸ்பைடர்மேன்' திரைப்படங்களுக்குத் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்பதால் இப்படத்தை நாடு முழுவதும் பிரமாண்டமாகப் பல்வேறு மொழிகளில் வெளியிட சோனி பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இப்படம் ஆங்கிலம் தவிர, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய 10 மொழிகளில் வெளியாகிறது.

ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்
ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்

இது பற்றிக் கூறியுள்ள சோனி பிக்சர்ஸ் ரிலீசிங் இன்டர்நேஷனல் (SPRI) இந்தியா துறையின் பொது மேலாளரும் தலைவருமான ஷோனி பஞ்சிகரன், "ஸ்பைடர்மேன் இந்தியாவில் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஹீரோ. ஸ்பைடர்மேனின் எல்லாப் படங்களும் இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. இறுதியாக வந்த ஸ்பைடர் மேன் திரைப்படம், 'நோ வே ஹோம்’, ஸ்பைடர்மேனின் ரசிகர்களைத் தீவிர ரசிகர்களாக மாற்றியது. எனவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோவைச் சொந்த மொழியில் கண்டு அனுபவிக்க விரும்புவார்கள்.

அந்த வகையில் 'ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் திரைப்படத்தை 10 மொழிகளில் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்தியா, ஸ்பைடர்மேனை விரும்புகிறது, 'இந்திய ஸ்பைடர்மேன் பவித்ர பிரபாகர்' உட்படப் பல இந்தியக் கூறுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தப் படம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்படத்தை விரும்புவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்றார்.

பல்வேறு பிரபஞ்சங்களின் விதவிதமான ஸ்பைடர்மேன்களை உள்ளடக்கிய கதை இது என்பதால், இந்திய ஸ்பைடர்மேனான பவித்ர பிரபாகரின் காட்சிகளும் இதில் இடம்பெறும். இது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.