Election bannerElection banner
Published:Updated:

இறுதியில் வென்றது சித்தா, ஜெடாயா?!- எப்படியிருக்கிறது `ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்'?

Star Wars: The Rise of Skywalker
Star Wars: The Rise of Skywalker

எப்படியிருக்கிறது `ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்'?

முடிவுரை எத்தனை வலுவானதாக இருக்கிறதோ, கதையும் அத்தனை அர்த்தமுள்ளதாக மாறும். சுமார் 43 ஆண்டுகளாகச் சொல்லப்பட்டுவரும் நீண்ட நெடுங்கதையான `ஸ்டார் வார்ஸ்'ஸின் `தி ஸ்கைவாக்கர் சாகா' ஒரு வழியாக தன் முடிவுரையை எட்டியுள்ளது. ஆனால், இந்த 40 ஆண்டுக்கால காத்திருப்புக்கு `தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்' தகுதியான படம்தானா என்றால் கேள்விக்குறிதான்.

Star Wars: The Rise of Skywalker
Star Wars: The Rise of Skywalker

`ஸ்டார் வார்ஸ்' தொடரில் இருக்கும் எல்லாப் படங்களும் ஒரே நோக்கத்தைத்தான் முன் வைக்கின்றன. சர்வாதிகார அரசியலை அழித்து மக்களாட்சியை நிலை நிறுத்தவேண்டும். ஆனால், மக்களாட்சியை அவர்கள் நிறுவப்போவது ஏதோவொரு மாநிலத்திலோ, நாட்டிலோ, உலகத்திலோ அல்ல. மாறாக, ஒட்டுமொத்த கேலக்ஸிக்கும் ஒரே அரசாங்கம், அதுவும் மக்கள் நடத்தும் அரசாங்கம். இதுதான் `ஸ்டார் வார்ஸ்'ஸின் அடிப்படைக் கருத்தியல்.

அந்த வகையில், இதுவரை வெளியான பத்துப் படங்களுக்கும் முற்றுப்புள்ளியாக வெளியாகியுள்ள `தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்', தன் நோக்கத்திலிருந்து விலகவில்லை என்றே சொல்லலாம். ஆனால், படத்தின் முழு நீளமும் அந்த நோக்கத்தின் மீது கவனம் செலுத்தவில்லை. இதுவே இதன் திரைக்கதையில் இருக்கும் பெரும் சிக்கல்.

Star Wars: The Rise of Skywalker
Star Wars: The Rise of Skywalker
Vikatan

ஏழு கடல், ஏழு மலையைக் கடந்து சென்றால்தான் அந்தப் புதையல் கிடைக்கும் என்பது போல, டிரெஷர் ஹன்ட் வடிவத்தில் முதல் ஒரு மணி நேரத் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார்கள். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் படம், கதைக்குள்ளே செல்கிறது. 100 ஆண்டுகளாக, ஜனநாயகத்தைப் போற்றும் ஜெடாய் வம்சத்துக்கும் சர்வாதிகாரத்தைத் தூக்கிப் பிடிக்கும் சித் வம்சத்துக்கும் நடந்துவரும் போரானது, இறுதிக்கட்டத்தை எட்டும்போது சுவாரஸ்யம் சற்று குறைவாகவே தெரிந்தது. இதுவே படத்தின் தொய்வுக்கு மிக முக்கியக் காரணம்.

சில மாதங்களுக்கு முன் வெளியான `அவெஞ்சர்ஸ்: எண்டுகேம்' படமும் கிட்டத்தட்ட இதுபோன்ற ஒரு முடிவுரைதான். பத்து ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்ட யூனிவர்ஸ், அவெஞ்சர்ஸ். இந்தக் காத்திருப்புக்குத் தகுந்தாற்போல பல எமோஷன்கள், படத்தின் சரியான இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும். தன் தந்தையைச் சந்திக்கும் டோனி, தன் காதலியைச் சந்திக்கும் ஸ்டீவ், மகளிடம் 3000 டைம்ஸ் லவ் யூ சொல்வது, இறுதியில் `ஐ எம் ஐயர்ன் மேன்'... இது போன்ற குட்டிக் குட்டி எமோஷன்களைக் கடத்தி இறுதியில் மாபெறும் எமோஷனைக் கடத்தியிருப்பார்கள். இதுவே, அந்தப் படத்தின் வெற்றிக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று.

Star Wars: The Rise of Skywalker
Star Wars: The Rise of Skywalker

லூக் ஸ்கைவாக்கர், ஹான் சோலோ என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் கேமியோவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இதற்கு முன் வெளியான பத்துப் படங்களை நினைவூட்டும் வகையில் உணர்ச்சிகரமான காட்சிகளே படத்தில் இல்லை. இதைவிட்டால் கிளைமாக்ஸில் கதையின் வில்லன் பால்பட்டீனுடன் சண்டையிட்டு, சரிந்துகிடக்கும் கடைசி ஜெடாய் வீராங்கனையான ரேவுக்கு அவளுடைய முன்னோர்களின் குரல்கேட்கும். இந்த ஓர் இடத்தில் மட்டும் கொஞ்சம் சென்டிமென்டைத் தெளித்திருப்பார்கள்.

யோடா, ஆனக்கின், லூக், லேயா, ஓபி வான் கெனோபி என ஸ்டார் வார்ஸ் யூனிவர்ஸின் எல்லா முக்கிய ஜெ கதாபாத்திரங்களின் குரல்களும் அவளுக்குக் கேட்கும். இந்த அசரீரிகளை ஒரேயொரு காட்சிக்குள் அடைத்துவிட்டு படத்தின் பெரும்பான்மை ஓட்ட நேரத்தை வெறும் டிரெஷர் ஹண்டாகவே வடிவமைத்துவிட்டார்கள். இதனால், இரண்டாம் பாதியில் கொஞ்சம் அவசர அவசரமாக கதை சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டது அப்பட்டமாகத் தெரிகிறது.

Star Wars: The Rise of Skywalker
Star Wars: The Rise of Skywalker
Vikatan

மற்றபடி, கைலோ ரென்னுக்கும் ரேவுக்கும் இடையிலான உறவு, பகை என இரண்டையும் திரைக்கதையில் நல்ல டீடெயிலிங்கோடு எழுதியிருக்கிறார்கள். அவை காட்சிபடுத்தப்பட்ட விதமும் படத்தின் ஃப்ளேவரைக் கூட்டியிருக்கிறது. கிஜீமீ என்ற பிளானட்டில் நடக்கும் சில நிகழ்வுகளும் அவற்றைவைத்து அடுத்தடுத்து வரும் காட்சிகளும் ஸ்டார் வார்ஸ் டெம்ப்ளேட்டில் கச்சிதமாக எழுதப்பட்டுள்ளது படத்தின் ப்ளஸ்.

டார்த் வேடர் முதல் கைலோ ரென் வரை அனைத்து வில்லன்களையும் இருளின் பக்கம் அழைத்து வர முடிந்த பாலப்டைனால், ரேவையும் இருளுக்குள் கொண்டுவர முடிகிறதா என்பதையும், அதற்கான பின்னணியைப் படத்தின் மையப்பகுதியில் ஒட்டுமொத்த சீரிஸுக்குமே சேர்த்த ஒரு சஸ்பென்ஸாகவும் வைத்திருக்கிறார்கள்.

Star Wars: The Rise of Skywalker
Star Wars: The Rise of Skywalker
`வடசென்னை' அன்புவின் எழுச்சிபோல இது ஸ்கைவாக்கரின் எழுச்சி! #TheRiseofSkywalker #starwars

இந்த சர்ப்பரைஸ்தான் `தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்' படத்தை, இந்தத் தொடரின் சிறந்த முடிவாக நம்மை ஏற்றுக்கொள்ள வைக்கிறது. தேவையில்லாத அட்வெஞ்சர், எமோஷன் பற்றாக்குறை என்பதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், சர்ப்ரைஸ், உணர்வுப்போராட்டம் என இவை உங்களைத் திருப்திப்படுத்தும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு