Published:Updated:

Oscars 2023: "இந்தியாவுக்காக..!"- சிறந்த ஆவணக்குறும்படம் விருது வென்ற `The Elephant Whisperers'!

The Elephant Whisperers ( Chris Pizzello )

தமிழ் ஆவணப்படமான 'The Elephant Whisperers' சிறந்த ஆவணக்குறும்படம் எனும் பிரிவில் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது.

Published:Updated:

Oscars 2023: "இந்தியாவுக்காக..!"- சிறந்த ஆவணக்குறும்படம் விருது வென்ற `The Elephant Whisperers'!

தமிழ் ஆவணப்படமான 'The Elephant Whisperers' சிறந்த ஆவணக்குறும்படம் எனும் பிரிவில் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது.

The Elephant Whisperers ( Chris Pizzello )
அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 95வது அகாடமி விருதுகள் நிகழ்வைப் பிரபல டிவி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் தொடங்கி வைத்தார்.
Oscars 2023: The Elephant Whisperers
Oscars 2023: The Elephant Whisperers
The Elephant Whisperers
The Elephant Whisperers
Chris Pizzello

இந்த வருடம், மூன்று விருதுகளின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. சிறந்த ஆவணப்படம் பிரிவில் சௌனக் சென் இயக்கிய 'All that Breathes', சிறந்த ஆவணக்குறும்படம் பிரிவில் கார்த்திகி கோன்சால்விஸ் இயக்கிய 'The Elephant Whisperers' மற்றும் சிறந்த பாடல் பிரிவில் கீரவாணி இசையில் 'RRR' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதில் 'சிறந்த ஆவணப்படம்' பிரிவில், விருது வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியப் படைப்பான 'All that Breathes' விருதினைத் தவறவிட்டிருக்கிறது. அந்தப் பிரிவில் 'Navalny' என்ற படைப்பு வென்றிருக்கிறது.

இந்நிலையில் சிறந்த ஆவணக்குறும்படம் பிரிவுக்கான விருது அறிவிக்கப்பட்டது. இதில் கார்த்திகி கோன்சால்விஸ் இயக்கிய 'The Elephant Whisperers' படம் ஆஸ்கர் விருதினை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. தாயை இழந்த இரண்டு யானைக்கன்றுகளைப் பெற்றோரைப்போலப் பராமரித்து வளர்த்த தென்னிந்தியாவின் முதல் தம்பதியைப் பற்றிய உண்மைச் சம்பவம்தான், இயக்குநர் கார்த்திகி கோன்சால்விஸ் இயக்கத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘The Elephant Whisperers’ தமிழ் ஆவணப்படம்.

The Elephant Whisperers
The Elephant Whisperers
Chris Pizzello
The Elephant Whisperers
The Elephant Whisperers
Chris Pizzello

இயக்குநர் கார்த்திகி கோன்சால்விஸ், விருதினைப் பெற்றுக்கொண்டு மேடையில் பேசுகையில், "நமக்கும் இயற்கைக்கும் இடையேயான புனித பந்தம் குறித்துப் பேச இன்று இந்த மேடையில் நிற்கிறேன். பழங்குடி சமுதாயத்தின் மரியாதை, மற்ற உயிரினங்கள் மேல் அவர்கள் காட்டும் பரிவு, அனைத்து உயிர்களையும் ஒன்றிணைத்த இணக்கமான வாழ்வு போன்றவற்றுக்கு இந்த விருது. எங்கள் படத்தினை அங்கீகரித்ததற்கும் பழங்குடி மக்களை முன்னிலைப்படுத்தியதற்கும் அகாடமிக்கு என் நன்றிகள். இந்த விருதினை என் தாய்நாடான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.