Published:Updated:

'கடைசிப் படம்... எல்லாவற்றுக்கும் ஒரு முடிவுரை!' - டாரன்டினோ உருக்கம்

Quentin Tarantino

தன் திரைப் பயணத்தில் மொத்தமாக 10 படங்கள்தாம் இயக்க வேண்டும் என்ற முடிவுடன் இயக்கும் டரண்டினோவின் ஒன்பதாவது படம் 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்'.

'கடைசிப் படம்... எல்லாவற்றுக்கும் ஒரு முடிவுரை!' - டாரன்டினோ உருக்கம்

தன் திரைப் பயணத்தில் மொத்தமாக 10 படங்கள்தாம் இயக்க வேண்டும் என்ற முடிவுடன் இயக்கும் டரண்டினோவின் ஒன்பதாவது படம் 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்'.

Published:Updated:
Quentin Tarantino

தன்னுடைய பத்தாவதும், கடைசியுமான படம் ஒரு முடிவுரையாக இருக்கும் எனக் கூறியுள்ளார் ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர் குவின்டின் டாரன்டினோ.

Tarantino with Brad Pitt and Leonardo Dicaprio
Tarantino with Brad Pitt and Leonardo Dicaprio

தன் திரைப்பயணத்தில் மொத்தமாகப் பத்து படங்கள்தாம் இயக்க வேண்டும் என்ற முடிவுடன் இயக்கும் டாரன்டினோவின் ஒன்பதாவது படம் 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்'. அடுத்தவாரம் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக அவர் ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது அந்த நாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியொன்றில், "நான் இதுவரை ஒன்பது படங்கள் இயக்கிவிட்டேன். அடுத்து இயக்கப்போகும் பத்தாவது படம்தான் எனக்குக் கடைசிப் படமாக இருக்கப்போகிறது. என்னுடைய எல்லாப் படங்களும் சேர்ந்து ஒரே கதையைச் சொல்கின்றன என்றால், இந்தப் படம் அந்தக் கதையின் முடிவுரையாக இருக்கும். என் படங்கள் எல்லாம் அடுத்தடுத்து இணைந்து இருக்கு ஒரு ரயிலின் வெவ்வேறு பெட்டிகளைப் போலத்தான். ஒட்டுமொத்த திரைப் பயணத்தின் முடிவுரையாக இருக்கும். எல்லாப் படங்களுக்கும் சேர்த்து ஒரே க்ளைமாக்ஸாக இது இருக்கப்போகிறது" எனக் கூறினார டாரன்டினோ.

அதைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருக்கும் அவருடைய ரசிகர்களைச் சந்தித்துவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பினார் டாரன்டினோ.