Published:Updated:

`டார்ஸான்' தொடரில் நடித்த ஜோ லாரா விமான விபத்தில் உயிரிழந்தார்!

ஜே லாரா
News
ஜே லாரா

விமானத்தில் பயணம் செய்தவர்கள் பற்றி எந்தவொரு தடயமும் கிடைக்காத நிலையில், இன்று காலை விமானத்தில் பயணம் செய்தவர்கள் இறந்ததாக எண்ணி தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டது.

பிரபலமான 'டார்ஸான்: தி எபிக் அட்வென்சர்ஸ்' தொடரில் நடித்த ஜோ லாரா கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை (மே 29) ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் லாரா உட்பட ஏழு பயணிகளுடன் ஸ்மிர்னா ரூதர்ஃபோர்டு கவுண்டி விமான நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்குப் ஃப்ளோரிடாவின், பால்ம் பீச் விமான நிலையத்திற்குப் புறப்பட்ட சிறிய ஜெட் விமானம், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நாஷ்வில்லி (Nashville) நகரின் அருகில் உள்ள பெர்ஸி பிரிஸ்ட் (Percy Priest) ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஜே லாரா மற்றும் அவர் மனைவி க்வென் லாரா
ஜே லாரா மற்றும் அவர் மனைவி க்வென் லாரா

விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து Rutherford county fire rescue குழுவினர் சனிக்கிழமையிலிருந்தே மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து அரை மைல் தொலைவிற்குத் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. இரண்டு நாட்கள் நடைபெற்ற தேடுதலில், விமானத்தில் பயணம் செய்தவர்கள் பற்றி எந்தவொரு தடயமும் கிடைக்காத நிலையில், இன்று காலை விமானத்தில் பயணம் செய்தவர்கள் இறந்ததாக எண்ணி தேடுதல் பணிகள் நிறுத்தப்படுவதாக, தேடுதல் பணிகளை முன்னின்று நடத்திய கேப்டன் ஜோஷூவா சாண்டர்ஸ் (Joshua Sanders) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஜோ லாராவின் மறைவையடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz