Published:Updated:

" 'கேம் ஆஃப் த்ரோன்'ஸை மிஸ் பண்றீங்களா, இந்தத் தொடர்களைப் பாருங்க!"

அயர்ன் த்ரோன் வரை அனைத்தையும் மிஸ் செய்யும் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ரசிகரா நீங்கள்?! உங்கள் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பசிக்குப் பின்வரும் இந்தத் தொடர்கள் தீனி போடலாம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரின் கடைசி சீஸன் சமீபத்தில் நிறைவுபெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யவில்லை என்றாலும், பலருக்கும் தொடர் முடிந்துவிட்டதே இனி என்ன செய்வது என்ற உணர்வே ஏற்பட்டிருக்கிறது. டிராகன் தொடங்கி அயர்ன் த்ரோன் வரை அனைத்தையும் மிஸ் செய்யும் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ரசிகரா நீங்கள்?! உங்கள் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பசிக்குப் பின்வரும் இந்தத் தொடர்கள் தீனி போடலாம்.

2
Vikings

வைக்கிங்ஸ்

9-ஆம் நூற்றாண்டு தொடங்கி இரண்டு நூற்றாண்டுகள் ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தியது, வைக்கிங் இனம். ரக்னர் லோத்ப்ரோக் என்னும் வைக்கிங் தலைவரின் கதையாகத் தொடங்கும் இந்தப் புனையப்பட்ட வரலாற்றுத் தொடரில் இதுவரை 70 எபிசோடுகள் வெளியாகியிருக்கின்றன. இதன் கடைசி சீஸன் விரைவில் வெளிவரவிருக்கிறது. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' போர்க்களக் காட்சிகளை மிஸ் செய்பவர்களுக்கு 'வைக்கிங்ஸ்' ஒரு விஷூவல் ட்ரீட்.

3
The Crown

தி கிரௌன்

தற்போதைய இங்கிலாந்து ராணியாக இருக்கும் எலிசபெத் II வாழ்க்கையைப் பதிவுசெய்யும் தொடர் இது. இங்கிலாந்தின் அரச குடும்ப வழக்கங்களை அப்படியே கண்முன் நிறுத்துகிறது, 'தி கிரௌன்'. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரிஸ் போல பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடரின் மூன்றாவது சீஸன் இந்த வருடம் வெளியாகவுள்ளது.

4
West World

வெஸ்ட்வேர்ல்ட்

'ஜுராசிக் பார்க்' கதையை உருவாக்கிய மைகேல் க்ரைடனின் மற்றொரு படைப்பான 'வெஸ்ட்வேர்ல்ட்' படத்தைத் தழுவி உருக்கப்பட்ட தொடர் இது. கிறிஸ்டோபர் நோலனின் சகோதரரான ஜோனதன் நோலனும், அவரது மனைவி லிசா ஜாயும் இந்தத் தொடரை உருவாக்கினார். 'ஜுராசிக் பார்க்'கில் டைனோசர்களுக்குப் பதிலாக மனித உருவிலான ரோபோக்கள் மக்களின் கேளிக்கைக்காக இருந்தால் எப்படி இருக்கும், அதுதான் 'வெஸ்ட்வேர்ல்ட்' கதை. 'கேம் ஆஃப் த்ரோன்'ஸிற்குப் பிறகு இந்தத் தொடரைத்தான் பெருமளவில் நம்பியிருக்கிறது HBO.

5
The Last Kingdom

தி லாஸ்ட் கிங்டம்

'தி சக்ஸன் ஸ்டோரீஸ்' நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் தொடர் இது. அப்போதைய இங்கிலாந்திலிருந்து எதிரிகள் வைக்கிங்ஸால் சிறுவயதிலேயே கடத்தப்படும் உட்ரேட் என்னும் போராளி மீண்டும் தன் தாய் மண்ணிற்குப் போர் புரியத் திரும்பும்போது, யார் பக்கம் நிற்பார் என்பதுதான் கதை. இதன் நான்காவது சீஸன் விரைவில் வெளிவரவுள்ளது.தி ரோம்

6
The Rome

தி ரோம்

இந்தத் தொடர்தான் 'கேம் ஆஃப் த்ரோன்'ஸின் முன்னோடி. இந்த வரலாற்றுத் தொடர் கொண்டுதான் இன்று நாம் 'கேம் ஆஃப் த்ரோன்'ஸில் பார்க்கும் பல அம்சங்கள் சோதனை செய்து பார்த்தது, HBO. இரண்டு போர் வீரர்களின் கதையைக் கொண்டு ஜூலியஸ் சீசர் காலத்திலான ரோமாபுரியில் நடக்கும் முக்கியப் போர்கள் மற்றும் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியிருக்கும் இந்தத் தொடர்.

7
Black Sails

பிளாக் செய்ல்ஸ்

கடற்கொள்ளையர்களின் பொற்காலமாகக் கருதப்படும் 17-ஆம் நூற்றாண்டில் நடப்பதாக அமைந்திருக்கும் இந்தக் கதை. 'கேம் ஆஃப் த்ரோன்'ஸைவிடவும் உண்மைக்கு நெருக்கமாக இருந்தாலும், இந்தத் தொடர் நிச்சயம் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ரசிகர்களுக்குத் தீனிபோடும்.

8
Outlander

அவுட்லேண்டர்

இதே பெயரில் வெளிவந்த நாவலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடர், இரண்டாம் உலகப்போர் காலத்தில் வாழும் ஒரு செவிலி 1743-ஆம் ஆண்டுக்குக் கடத்தப்படுகிறார். அங்கு இருக்கும் ஒரு போர் வீரருடன் காதல் கொள்கிறார். பின்பு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்த வித்தியாசமான காதல் கதையில் போர்களுக்கும் பஞ்சம் இருக்காது.

9
The Tudors

தி டுடோர்ஸ்

16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹென்றி VIII என்ற அரசரின் கதைதான் 'தி டுடோர்ஸ்'. இவர் தனது எதிரிகளை எப்படி எதிர்கொண்டார், ஆண் வாரிசுக்காக ஆறு திருமணங்கள் செய்துகொண்ட இவரது காதல் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இந்தத் தொடரில் பதிவு செய்திருக்கிறார்கள்.

10
Spartacus

ஸ்பார்டகாஸ்

நான்கு சீஸன்களாக வெளிவந்த இந்தத் தொடர் 'ஸ்பார்டகாஸ்' என்னும் கிளாடியேட்டர் கதையைச் சொல்கிறது. அன்றைய ரோமாபுரியிலிருந்த கிளாடியேட்டர் மற்றும் அடிமைக் கலாசாரத்தைக் காட்சிப்படுத்தியிருக்கும் இதில், வன்முறை, துரோகம், காதல், காமம் என எல்லாமே 'ஓவர்டோஸ்'தான்.

11
The 100

தி 100

வருங்காலத்தில் நடப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்தக் கதையில், அணுசக்தியினால் உலகமே அழிந்திருக்கும். மீதமிருக்கும் சிலபேர் பூமியைச் சுற்றிவரும் ஒரு விண்கலத்தில் பல வருடங்களாக வாழ்ந்துகொண்டிருப்பர். இதிலிருந்து 100 பேர் பூமியானது மீண்டும் வாழத் தகுதியாக இருக்கிறதா எனப் பார்வையிட பூமிக்கு அனுப்பிவைக்கப்படுவர். பின்பு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

12

இதுவரை சொன்ன அனைத்து சீரிஸ்களும் ஏதாவது ஒன்று, இரண்டு விஷயங்களில்தான் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' போன்று இருக்கும். ஆனால், அதில் இருக்கும் அனைத்து அம்சங்களும் ஒரே தொடரில் வேண்டும் என்று நினைத்தால், மீண்டும் 'கேம் ஆஃப் த்ரோன்'ஸை முதல் சீஸனிலிருந்து பார்த்தால்தான் உண்டு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு