Published:Updated:

"நாட்டு... நாட்டு... நடிகர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன்!" - `The Little Mermaid' இயக்குநர்

ராப் மார்ஷல், ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண்

இயக்குநர் ராப் மார்ஷல், ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்.

பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்களில் ஒருவர் ராப் மார்ஷல். ‘Pirates of the Caribbean’, ‘Into the Woods’, ‘Chicago’ போன்ற பல பிரபல திரைப்படங்களை இவர் இயக்கி இருக்கிறார். அவர் இயக்கிய  ‘The Little Mermaid ’ என்ற புகழ்பெற்ற அனிமேஷன் திரைப்படத்தை டிஸ்னி இந்தியா மே 26 ஆம் தேதி  ஆங்கிலத்தில் திரையரங்குகளில் வெளியிட இருக்கிறது.  

 ராப் மார்ஷல்
ராப் மார்ஷல்

சமீபத்தில் ராப் மார்ஷல் அளித்த பேட்டி ஒன்றில்,  `இந்திய நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் இருக்கிறதா?' என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு ராப் மார்ஷல்,  `ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணைக் குறிப்பிடும் விதமாக ‘நாட்டு நாட்டு’ நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்' என்று பதிலளித்திருக்கிறார்.

மேலும் இரண்டு நடிகர்களும் அற்புதமானவர்கள்  மற்றும் திறமையானவர்கள் என்று கூறிய அவர் குறிப்பாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் நடிப்பு மற்றும் அவர்களின் நடன திறமையைப் பாராட்டி பேசியிருக்கிறார் .