Published:Updated:

25 ஆண்டுகள் நிறைவு ; 'தி ஷாஷங் ரிடம்ப்ஷன்' மீண்டும் ரிலீஸ்!

ஹாலிவுட்டின் எவர்க்ரீன் 'ப்ரிஸன் எஸ்கேப் டிராமா' ஜானர் படமான 'தி ஷாஷங்க் ரிடம்ப்ஷன்' படத்தை அதன் 25 ஆண்டு நிறைவையொட்டி மீண்டும் திரையிடுகின்றனர்.

A still from 'the Shawshank Redemption'
A still from 'the Shawshank Redemption'

1994-ம் ஆண்டு ஹாலிவுட்டுக்கு ஓர் முக்கிய ஆண்டு என்றே சொல்லலாம். 'ஜுராஸிக் பார்க்', 'தி லயன் கிங்', 'பல்ப் ஃபிக்‌ஷன்', 'தி ஷாஷங்க் ரிடம்ப்ஷன்', 'ஃபாரஸ்டு கம்ப்', 'தி ஜங்கிள் புக்', 'ஸ்பீடு', 'தி மாஸ்க்' மற்றும் 'பேபிஸ் டே அவுட்' என எல்லா ஜானரிலும் ஒரு க்ளாசிக் படம் என வெளியானது.

A still from 'the Shawshank Redemption'
A still from 'the Shawshank Redemption'

அதனால், 1994-ன் வெள்ளிவிழா ஆண்டான 2019, இந்த எல்லா படங்களுக்குமே ஸ்பெஷலாகிவிட்டது. அதிலும், குறிப்பாக 'தி லயன் கிங்' இந்த ஆண்டு முழு லைவ் ஆக்‌ஷன் வடிவில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. அதேபோல் 'ஜுராஸிக் பார்க்' 25 ஆண்டு நிறைவு செய்ததையடுத்து அதன் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், மீண்டும் அப்படத்தை உலகம் முழுக்க வெளியிட்டுக் கொண்டாடினார்.

இந்த வரிசையில், ஹாலிவுட்டின் எவர்க்ரீன் ப்ரிஸன்-ப்ரேக் ட்ராமாவான 'தி ஷாஷங்க் ரிடம்ப்ஷன்' திரைப்படத்தை அதன் 25 ஆண்டு நிறைவையொட்டி மீண்டும் வெளியிடுகிறார்கள். மார்க்கன் ஃப்ரீமேன், டிம் ராபின்ஸ் இணைந்து நடித்த இந்தப் படம், 'ரீட்டா ஹேவர்த் அண்டு ஷாஷங்க் ரிடம்ப்ஷன்' என்ற ஸ்டீஃபன் கிங்கின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டு, செப்டம்பர் 22, 1994-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதனால், வருகிற செப்டம்பர் 22, 24, 25 என மூன்று நாள்களுக்கு அந்தப் படத்தை சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் வெளியிட ஃபாத்தாம் ஈவென்ட்ஸ் மற்றும் டி.சி.எம் என்ற நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.