Published:Updated:

`வெனம்-2 ப்ரீ-புரொடக்‌ஷன் வேலைகள் தொடக்கம்!' - 2020-ல் ரிலீஸ்

'வெனம்' படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்குவதற்கான வேலைகளில் தீவிரம் காட்டிவருகிறது படத்தின் தயாரிப்பு நிறுவனமான கொலம்பியா பிக்சர்ஸ்.

Venom-2
Venom-2

சூப்பர் ஹீரோக்களை ஆன்டி-ஹீரோக்களாக வைத்து பல படங்கள் இங்கே வந்துள்ளன. அதிலிருந்து மாறுபட்டு, ஒரு சூப்பர் வில்லனை ஹீரோவாக வைத்து வெளியான படம்தான் 'வெனம்.' டாம் ஹார்டி தன்னுடைய வழக்கத்திலிருந்து மாறி ஒரு ஏலியனின் சக்திகளைத் தாங்கி ஊரைக் காப்பாற்றும் ஒரு சூப்பர் வில்லனான 'வெனம்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம் சுமாரான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியில் மாபெறும் வெற்றியடைந்தது.

Andy Serkis
Andy Serkis

'வெனம்' படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்குவதற்கான வேலைகளில் தீவிரம் காட்டிவருகிறது படத்தின் தயாரிப்பு நிறுவனமான கொலம்பியா பிக்சர்ஸ். அது உருவாக்கி வரும் 'சோனி'ஸ் மார்வெல் யூனிவெர்ஸ்'ஸின் மூன்றாவது படமான 'வெனம்-2'வின் இயக்குநராக ஆன்டி செர்கிஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான செர்கிஸ் அண்மையில், கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார். தொடந்து அவர் 'வெனம்-2'வுக்கான தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்து படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகளைத் தொடங்கிவிட்டார். இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி, அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது கொலம்பியா பிக்சர்ஸ். இந்த யூனிவெர்ஸின் இரண்டாவது படமான 'மோர்பியஸ்' அடுத்த ஆண்டு ஜூலை மாதம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.