Published:Updated:

Thor: Love and Thunder - கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்கும் கடைசி MCU படமா? மார்வெல்லின் திட்டம் என்ன?

Thor: Love and Thunder

கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட கேள்விகளுக்குத் பதிலளிக்கும் ரவுண்டில் 'கிறிஸ்ஸின் கடைசி மார்வெல் படம் எது?' என்கிற கேள்விக்கு அவர் அளித்த பதில் இதோ.

Published:Updated:

Thor: Love and Thunder - கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்கும் கடைசி MCU படமா? மார்வெல்லின் திட்டம் என்ன?

கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட கேள்விகளுக்குத் பதிலளிக்கும் ரவுண்டில் 'கிறிஸ்ஸின் கடைசி மார்வெல் படம் எது?' என்கிற கேள்விக்கு அவர் அளித்த பதில் இதோ.

Thor: Love and Thunder
அடுத்த மாதம் வெளியாகும் படம்தான் கிறிஸ் ஹெம்ஸ்வர்த் தோன்றும் கடைசி `Thor' படமாகக் கூட இருக்கலாம் என்கிற தகவலை வேறு யாரும் சொல்லியிருந்தால் பரவாயில்லை. நேர்காணல் ஒன்றில் கிறிஸ்ஸே இதனைச் சொல்லியிருக்கிறார்.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்சில் இருந்து 'Thor: Love and Thunder' திரைப்படம் இந்தியாவில் ஜூலை 7 அன்று திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. 'Thor' பட வரிசையில் இது நான்காவது படம். எந்த மார்வெல் சூப்பர் ஹீரோவுக்கும் அமையாதது இதுவென 'தோர்' ரசிகர்கள் கொண்டாடிய வேளையில் இந்த அதிர்ச்சிகர தகவல் தரையிறங்கியிருக்கிறது.

Thor: Love and Thunder
Thor: Love and Thunder

கிறிஸ், மார்வெல் உலகத்துக்குள் தோர் என்னும் சூப்பர்ஹீரோவாக வந்த ஆண்டு 2011. இந்த 11 ஆண்டுகளில் 8 மார்வெல் படங்களில் நடித்துள்ளார். அதில் 'இடிகளின் அரசன்' (God of Thunder) தோரை மையப்படுத்தி மட்டும் நான்கு தனிப்படங்கள் வந்துள்ளன. 2019-ல் வெளியான Taika Waititi இயக்கிய 'Thor: Ragnarok' படத்திற்கு பிறகு இப்போது வரவிருக்கும் 'Love and Thunder' இந்த வரிசையில் நான்காவது படம். இதனையும் Taika-வே இயக்கியுள்ளார்.

கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ரவுண்டில் 'கிறிஸ்ஸின் கடைசி மார்வெல் படம் எது?' என்கிற கேள்விக்கு அவரே அளித்த பதில் இதோ. "இதுவே கடைசி படமாகக் கூட இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. டைகா வெயிட்டிட்டியின் முந்தைய படங்களைப் போலவே இந்தப் பட அனுபவமும் ஜாலியாக இருந்தது" என்று பதிலளித்துள்ளார்.

Thor: Love and Thunde
Thor: Love and Thunde

கிறிஸ் திட்டவட்டமாகச் சொல்லவில்லை. ஆனால், அதே சமயம், டிரெய்லரில் Thor பற்றி 'கடந்த காலத்தில்' என்கிற டோனில் பேசுவதால் இந்தத் தகவல் உண்மையாகவும் இருக்கலாம். அவரின் முன்னாள் காதலியான ஜேன் கதாபாத்திரம் வேறு சுத்தியலைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டதால் 'ஒரு தோர்தான் இருக்க முடியும் ப்ரோ' என ஒரு சாராரும், 'அப்படியெல்லாம் கிடையாது, மார்வெல் ஒருபோதும் டிரெய்லரில் ஸ்பாய்லரை அனுமதிப்பதில்லை. மார்வெல் திட்டம் என்னவென்பது கிறிஸ்ஸுக்கே கூட தெரியாமல் இருக்கலாம்' என வேறு சிலரும் சொல்கின்றனர்.

இது மட்டுமல்லாது, படம் குறித்து பல்வேறு ஃபேன் தியரிகளும் உலவுகின்றன. பழைய அவெஞ்சர்ஸ் ஹீரோக்கள் பலர் ரிட்டையர்டாகி, மிஸ் மார்வெல், மோனிகா ரேம்ப்யூ என அடுத்தத் தலைமுறை ஹீரோக்கள் வந்துவிட்ட நிலையில் `Thor' இனி என்ன ஆவார் என்பது படம் வந்த பிறகே தெரியும்.