Published:Updated:

அரசியலில் நானும் இருக்கேன்!

கார்த்தியின் புதுக் கணக்குநா.கதிர்வேலன்

அரசியலில் நானும் இருக்கேன்!

கார்த்தியின் புதுக் கணக்குநா.கதிர்வேலன்

Published:Updated:
##~##

டுத்தவனுக்குத் தேவைப்படுறதைக் கொடுத்தா, உனக்குத் தேவையானது தானா கிடைக்கும். இதுதான் 'சகுனி’ பாலிஸி!'' புது மாப்பிள்ளைக் களை இன்னமும் மிச்சம் இருக்கிறது கார்த்தியிடம். லவ்வர் பாய், முரட்டு கிரிமினலாக இல்லாமல் பாலீஷ் சிரிப்பு சிரிக்கிறார் 'சகுனி’ புரமோக்களில்!    

''என்ன மேஜிக்னு தெரியலை. குழந்தைகளுக்கு என்னை ரொம்பப் பிடிச்சிருக்குபோல! ஏர்போர்ட்ல வேகமா ஃப்ளைட் பிடிக்கப் போனா, விரட்டி வந்து முத்தம் கொடுக்குறாங்க. குழந்தைகளுக்கு ஏன் என்னைப் பிடிக்குதுனு எனக்கே ஆச்சர்யமா இருக்கு. அதனால, இப்போலாம் கதை கேட்கும்போதே, குழந்தைகளுக்குப் பிடிக்கிற மாதிரி இருக்கணுமேனு யோசிக்க வேண்டியிருக்கு! 'சகுனி’ கதையை ஷங்கர்தயாள் சொன்னபோதே, என் கேரக்டர் பிடிச்சது. இப்போலாம் படங்களில் ஹீரோக்கள் வில்லாதி வில்லன்களாக இருக்காங்க. ஆனா, இதில் நான் நல்லவன். ரொம்ப வெகுளி!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசியலில் நானும் இருக்கேன்!

''ஆனா, 'சகுனி’யாக இருந்துகொண்டு அப்படி இருக்க முடியாதே?''

''அதுதான் கதை. இது பக்கா அரசியல் சினிமா. இன்னிக்கு அரசியல் இல்லாத இடம் ஏது? படத்தில் நம் எல்லாருக்கு மான அரசியல் இருக்கு. சகுனித்தனமும் சாணக்கியத்தனமும் கலந்ததுதான் அரசியல். அந்த அரசியலில் நானும் இருக்கேன். நீங்களும் இருக்கீங்க. கிராமத்தில் இருந்து வர்ற ஒருத்தன் அதிகபட்சம் என்னலாம் சாதிக்க முடியும்னு சொல்லியிருக்கோம். படம் முழுக்க சந்தானம் வர்றார். கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோனு சொல்லலாம். நிஜ அரசியலை மிஞ்சும் காமெடிகளுக்கு அவர் கியாரன்ட்டி!''

அரசியலில் நானும் இருக்கேன்!

''தொடர்ந்து வெற்றி கொடுத்துட்டே இருந்தால், அது இன்னும் பயமா இருக்குமே?''

''பயம் இல்லாமல் இருக்குமா? அதுவும் ஓரத்தில் இருக்குதான். ஆனா, என் லிமிட் எனக்குத் தெரியும். அஞ்சு வருஷத்தில் அஞ்சு படம்தான் பண்ணி இருக்கேன். எப்பவும் அவசரப்படுறதே கிடையாது. அட்வான்ஸ் வாங்கி பேங்க் பேலன்ஸ் ஏத்திக்கும் வேலையும்  கிடையாது. ஃபேமிலி ஆடியன்ஸுக்குப் பிடிக்கிற மாதிரியான படங்களில்தான் நடிக்குறேன். எங்கெல்லாமோ இருந்து போன் வருது. யார் யாரோ பேசுறாங்க. 'நீங்க ஒரு வார்த்தை பேசுங்க... அப்போதான் குழந்தை சாப்பிடும்’னுலாம் சொல்றாங்க. இதுக்குலாம் என்ன செய்யப்போறோம்னு யோசனையாவே இருக்கு. அவங்க சந்தோஷப்படுற மாதிரி நல்ல படம் கொடுக்குறதைவிட வேற என்ன செய்ய முடியும்னு சொல்லுங்க?''

''கல்யாண வாழ்க்கைலாம் எப்படிப் போய்க்கிட்டு இருக்கு? என்ன சொல்றாங்க திருமதி.ரஞ்சனி?''

''எப்பவும் எதையும் பாசிட்டிவ்வா எடுத்துக் குறாங்க. அண்ணன் பசங்க தியா, தேவ் ரெண்டு பேருக்கும் ரஞ்சனியை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. திடீர்னு பார்த்தா வீட்ல மூணு குழந்தைங்க இருக்காங்களோனு தோணுது. முன்னாடி தேவுக்கு நிலவைக் காட்டி சோறு ஊட்டுவோம். இப்போ ரஞ்சனியைக் காட்டி ஊட்டுறோம்!''

அரசியலில் நானும் இருக்கேன்!

''இனிமே தமன்னா, காஜல் அகர்வால்னு இஷ்டத்துக்கு ஆட்டம் போட முடியாதே... டூயட் ஷ§ட்டிங்ல சொல்றோம்...''

''என்ன சார் இது... இப்படி மாட்டிவிடுறீங்க. இப்போ ஹீரோயினைக் கட்டிப்பிடிச்சா  கொஞ்சம் ரஞ்சனியையும் நினைச்சுக்க வேண்டி யிருக்கு. அன்னிக்கு ஃபைட் ஸீன் ஷூட்டிங் குக்கு ரஞ்சனியைக் கூட்டிட்டுப் போனேன். பார்த்துட்டு இவ்வளவா கஷ்டப்படுறீங்கனு அவங்களுக்கு கண்ல தண்ணி வந்திருச்சு. ஆனால், எக்கச்சக்கமா லவ் ஸீன் படமாகும் போது கூட்டிட்டுப் போறதில்லை, எப்புடி?!''