ம.கா.செந்தில்குமார்
##~## |
சரவணன்... ஃபாக்ஸ் ஸ்டுடியோஸுடன் இணைஞ்சு நாம தயாரிக்கிற முதல் படம். ஹிட் மட்டும் பத்தாது. 'இப்படி ஒரு படம் வந்துச்சுடா’னு மக்கள் மரியாதையா ஞாபகம் வெச்சுக்கிற மாதிரி மெரிட்டாவும் இருக்கணும்!’ - இது ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி முருகதாஸ் சார் சொன்னது. 'நான் எதிர்பார்த்ததைவிட நல்லாவே பண்ணி இருக்கீங்க. ரசிகர்களுக்கு கண்டிப்பா இந்தப் படம் புதுசா இருக்கும். கங்கிராட்ஸ்!’ - முழு படத்தையும் பார்த்த பிறகு அவரே சொன்னது இது. பப்ளிக் பல்ஸை அவ்வளவு அழகா கணிக்கிற என் குருவின் வார்த்தைகள்தான் இப்போ எனக்கான எனர்ஜி டானிக்!''- உற்சாகம் பூரிக்கிறது சரவணனின் வார்த்தைகளில். 'எங்கேயும் எப்போதும்’ பட இயக்குநர். ஏ.ஆர்.முருகதாஸின் மாணவர்.

''அப்படி என்ன பண்ணி முருகதாஸை மயக்குனீங்க?''
''இப்போலாம் தியேட்டர்ல படம் பார்க்கவே பயமா இருக்கு. படம் பார்க்கிறவங்களைத் தவிர, திரை யில எல்லாரும் கெட்டவங்களாவே இருக்காங்க. ஆனா, இந்தப் படத்தில் எல்லாருமே பாசிட்டிவ் கேரக்டர்கள். பயணம்தான் படம். ஜெய்-அஞ்சலி, சர்வானந்த் - அனன்யானு ரெண்டு ஜோடி கள். இந்த ரெண்டு ஜோடிகளும் கடைசி வரை சந்திக்கவே மாட்டாங்க. அவர் களுக்கும் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் நபர்களுக்குமான மெல்லிய பிணைப்புதான் கதை!''

''மெல்லிய கதை, வல்லிய க்ளைமாக்ஸ் கொண்ட இன்னொரு யதார்த்த சினிமாவா இது?''
''இந்த சினிமாவில் யதார்த்தம் நிரம்பி வழியும். ஆனா, யதார்த்த சினிமாவானு கேட்டா, சொல்லத் தெரியலை. எந்த அளவுக்கு யதார்த்தம் இருக்கும்னா, படத் தில் லொகேஷன்களும் முக்கியமான கேரக்டர்கள். அதனால ஒரு சின்ன காட்சி யைக்கூட ஸ்டுடியோவில் எடுக்கலை. கதை எங்கே நடக்குதோ அங்கேயே போய் எடுத்துட்டு வந்தோம். திருச்சி பஸ் ஸ்டாண்ட்ல ஷூட்டிங் நடத்த முடியாத அளவுக்குக் கூட்டம் கூடிருச்சு. உடனே, கொஞ்சம் தள்ளி ஒரு இடத்தில் கேமரா, கிரேன், துணை நடிகர்கள்னு செட் பண்ணி, டம்மி ஷூட்டிங் நடத்தி கூட்டத்தை அங்கே திசை திருப்பிட்டு, எங்களுக்குத் தேவையான இடத்தில் ஷூட்டிங் நடத்தினோம்!''