Published:Updated:

பிட்ஸ் பிரேக்

நா.சிபிச்சக்கரவர்த்தி

பிட்ஸ் பிரேக்

நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:
பிட்ஸ் பிரேக்

ஜோதிகாவின் செல்லங்கள் தியா, தேவ் இருவரும் இப்போது அம்மாவை 'வாடி ராசாத்தி’, 'வசந்திம்மா’ என்றுதான் குறும்பாக அழைக்கிறார்கள். பின்னே, அம்மா நடித்து அவர்கள் பார்த்த முதல் சினிமா '36 வயதினிலே’தானே! படத்துக்குக் கிடைத்த வரவேற்பு, வெற்றியைத் தொடர்ந்து 'ஜோ’விடம் கதை சொல்லவும், அதில் அவரை நடிக்கச் சொல்லி சிபாரிசு செய்ய சூர்யாவிடமும் அன்புக் கோரிக்கைகள் குவிகின்றனவாம். 'எதுவும் வேண்டாம். இந்தச் சந்தோஷத்தை இன்னும் ஆசைதீர என்ஜாய் பண்ணிக்கிறேன்!’ எனச் சொல்லிவிட்டாராம் ஜோ!   

பிட்ஸ் பிரேக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிட்ஸ் பிரேக்

 'லாஸ்ட் பால் சிக்ஸர்’ போல தமன்னாவுக்குச் சிக்கியிருக்கிறது 'பாகுபலி’ வாய்ப்பு. 'சினிமாவுக்கு வந்து 10 வருஷமாச்சு. எந்த உற்சாகமும் இல்லாம விளம்பரம், நகைக் கடைத் திறப்பு விழானு போயிட்டு இருந்தேன். ஆனா, ஒரு கனவு புராஜெக்ட் மாதிரி அமைஞ்சது 'பாகுபலி’. ஒரு கேரக்டரா கேமராவுக்குப் பின்னாடியும் வாழ்றதுனா என்னன்னு, இப்போதான் புரியுது. முன்னைவிட இப்போ சினிமாவை ரொம்பக் காதலிக்கிறேன்’ என செம ஸ்மைலி காட்டுகிறார்!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

 சமந்தாவுக்கு வயசு 28. 'சினிமானா என்ன, அதுல ஹீரோயின் ரோல்னா என்ன... அது புரியவே எனக்கு இத்தனை வயசாயிருக்கு. அதனால இப்பத்தான் என் சினிமா கேரியர் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு. காதல் கிசுகிசு, கல்யாணப் பொருத்தம்... இதுக்கெல்லாம் இன்னும் சில வருஷங்களுக்கு நேரமே இல்லை’ என அதட்டுகிறார் அழகாக!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

 மோகன்லாலின் இரண்டாவது வீடு... துபாய்! உலகிலேயே மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் சில வருடங்களுக்கு முன்னர், ஒரு அப்பார்ட்மென்ட் வாங்கியிருக்கிறார் மோகன்லால். படிப்படியாக படப்பிடிப்புகளைக் குறைத்துக்கொண்டு, அந்த அபார உயர வீட்டில் இருந்து உலகத்தை ரசிப்பதுதான் லாலேட்டனின் ரிலாக்ஸ் திட்டம். அதோடு துபாயில் இருக்கும்போது கார் ஓட்டுவதற்காக 'ஓட்டுநர் உரிமம்’ பெற, கடுமையான 20 விதமான ஓட்டுநர் தேர்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார். முடிவு..? வேறென்ன.. பாஸ்தான்!  

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

 தெலுங்கு ஜில்லாவில் சார்மி இன்னும் டாப் ஸ்டார் டார்லிங்தான். அக்கட பூமியின் ராக் ஸ்டார் இயக்குநர் பூரி ஜெகந்நாத்துடன் சார்மியை இணைத்துக் கிளம்பியது கிசுகிசு. 'ஓர் இயக்குநருக்கும் நடிகைக்கும் நல்ல வேவ்லெங்த் இருக்கணும். அப்போதான் படத்துல நல்ல ரிசல்ட் இருக்கும்’ என்றெல்லாம் பூரி சமாளித்துக்கொண்டிருக்க, 'பூரி என் பெஸ்ட் பாய் ஃப்ரெண்ட்தான். இப்போ அதுக்கு என்னாங்குறீங்க..?!’ என அதிரடித்திருக்கிறார் சார்மி!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

 'புலி’ படத்தில் விஜய்யின் ஆக்ஷன் 'அதுக்கும் மேல’ இருக்குமாம். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் கதாபாத்திரங்களுக்கு என பிரத்யேக காஸ்ட்யூம் இருப்பதுபோல, இந்தப் படத்தில் வேட்டைக்குச் செல்லும் போர் வீரன் போன்ற உடையை வடிவமைத்திருக்கிறார்களாம். ஒரு காட்சிக்காக விஜய் 60 அடி உயரத்தில் இருந்து குதிக்க வேண்டுமாம். டூப் இல்லாமல் குதித்து ஷாட் ஓ.கே செய்தவர், 'இது வீட்ல யாருக்கும் தெரிய வேண்டாம்’ என யூனிட்டில் சொல்லியிருக்கிறார். அவங்க வீட்ல யார்கிட்டயும் சொல்லலை விஜய்!