Published:Updated:

அடி தூள் பறக்குது... கவலை கண்ணை மறைக்குது !

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

அடி தூள் பறக்குது... கவலை கண்ணை மறைக்குது !

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:

''தமிழ்நாடுனாலே வீரம்னு சொல்றோம். ஆனால், அந்த வீரத்தை திரையில் பதியும் எங்களுக்கு 'ஆனந்த விகடன் விருது’, 'விஜய் அவார்ட்ஸ்’ ரெண்டு மட்டும்தான் இங்கே அங்கீகாரம். தேசிய விருதில் எங்களுக்கு ஒரு பாராட்டுப் பத்திரம்கூட கிடையாது. தமிழ்நாடு அரசின் சார்பா

அடி தூள் பறக்குது... கவலை கண்ணை மறைக்குது !

கொடுத்துட்டு இருந்த திரை விருதும் இப்ப நின்னுடுச்சு. உயிரைக் கொடுத்து உழைக்கும் எங்களை உற்சாகப்படுத்த, இங்கே வேறு யாரும் இல்லை என்பதுதான் வருத்தமான உண்மை'' - உருக்கமாகப் பேசுகிறார் ஸ்டன்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன். சூப்பர் சுப்பராயனின் மகன். 19 வயதில் மாஸ்டரானவருக்கு, இப்போது வயது 29. இந்த 10 வருடங்களில் இவர் ஸ்டன்ட் அமைத்த படங்களின் எண்ணிக்கை 130. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உண்மையைச் சொல்லணும்னா, நான் சினிமாவுக்கு வர்றதை அப்பா விரும்பலை. காரணம், 'கரணம் தப்பினால் மரணம்’கிற ரிஸ்க். பிறகு, 'டைரக்டர் ஆகப்போறேன்’னு சொன்னதும் சந்தோஷமா சம்மதிச்சார். அப்படித்தான் 'ஓரம்போ’வில் புஷ்கர்-காயத்ரியிடம் உதவி இயக்குநரா சேர்ந்தேன். அதில் சண்டைக் காட்சிகளில் உதவி பண்ணினேன். பிறகுதான் டைரக்டர் தியாகராஜன் குமாரராஜா ஃப்ரெண்ட் ஆனார். அவர் 'ஆரண்யகாண்டம்’ தொடங்கினப்ப, 'இதில் நீதான் ஃபைட் மாஸ்டர்’னு சொன்னார். அப்போ எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆனா, படம் ரிலீஸாகி க்ளைமாக்ஸ் சண்டைக்குப் பாராட்டுக்கள் குவிஞ்ச பிறகுதான், எனக்கே என் மேல நம்பிக்கை வந்தது. அப்பாவும் என்கிட்ட ஏதோ இருக்குனு நம்பினார். 'இந்தப் பாதையில நிறைய பஸ் வரும். வர்ற பஸ்ஸை விடாம பிடிச்சு கரை சேர்ந்துக்கோ’னு சொன்னார். கரை சேர்ந்துட்டேன்னு நினைக்கிறேன்.''

"''' 'கொம்பன்’'ல உங்க அப்பாவுக்கு ஸ்டன்ட் சீன் பண்ணின அனுபவம் எப்படி இருந்துச்சு?"''

''அது என் பாக்கியம். அவரை நான் 'அப்பா’னு கூப்பிட்டதைவிட, 'மாஸ்டர்’னு கூப்பிட்டதுதான் அதிகம். 'கொம்பன்’ல முதல் ஷாட். என்கிட்ட வந்து, 'சொல்லுப்பா, எப்படிப் பண்ணணும்?’னு கேட்டார். ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன். சீன் சொல்லி முதல் ஷாட் ஓ.கே சொல்ற வரை பதற்றமாவே இருந்தேன். அப்பா 60 வயசை நெருங்கிட்டார். க்ளைமாக்ஸ் ஃபைட்ல அப்பா பல்டி அடிச்சு விழுற மாதிரி காட்சி. சேஃப்ட்டிக்காக தரையில பெட் போட்டேன். 'இதெல்லாம் எதுக்குப்பா... நான் தரையிலேயே அடிப்பேன்’னு சொல்லி அசால்ட்டா பல்டி அடிச்சார். மொத்த டீமும் அசந்துடுச்சு. அப்பாகிட்ட கத்துக்கவேண்டியது இன்னும் நிறைய இருக்கு.''

''ஸ்டன்ட் மாஸ்டரா இருந்துட்டே ஒரு படத்தைத் தயாரிக்கிறீங்களே?''

''ஆமாங்க..! நல்ல கதை அமைஞ்சா தயாரிக்கலாம்னு நினைச்சேன். அப்பதான் 'அஞ்சல’ வந்துச்சு. கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. நாலு சாலைகள் சந்திக்கிற பொட்டல் காட்டுல ஒரு டீக்கடை. அந்த டீக்கடையை மையமா வெச்சுத்தான் ஒரு கிராமமே உருவாகியிருக்கும். நம்ம ஒவ்வொருத்தர் லைஃப்லயும் டீக்கடைகளுக்கு முக்கியப் பங்கு இருக்கும். நாம ரிலாக்ஸ் பண்றதுக்கான ஜங்ஷன் பாயின்ட், பிரச்னைகளைப் பேசித் தீர்க்கிற பஞ்சாயத்து பிளேஸ்னு, அதுக்கு எவ்வளவோ ரோல்கள் உண்டு.

நீங்க பார்க்கலாம், கிராமத்து டீக்கடைகளுக்கு விதவிதமான ஆட்கள் வருவாங்க, போவாங்க. ஆனா, அந்தக் கடையும் ஓனரும் மட்டும் ஊரோட அடையாளமா, அதே சிரிச்ச முகத்தோடு இருப்பாங்க. தலைமுறைகளைத் தாண்டி நிக்கும் அப்படியான ஒரு டீக்கடையைத் தேடி, அதோட பழைய கஸ்டமர்கள் கிளம்பி வர்றாங்க. அது ஏன் என்பதுதான் கதை.

அடி தூள் பறக்குது... கவலை கண்ணை மறைக்குது !

இயக்குநர் தங்கம் சரவணன், விமல், பசுபதி, நந்திதானு நல்ல டீம். ஒரு படம் பண்ணினால் பணத்தையும் தாண்டிய திருப்தி இருக்கணும். இதுல அந்தத் திருப்தி கிடைச்சிருக்கு. 'அஞ்சல’ கண்டிப்பா உங்க எல்லாருக்கும் பிடிக்கும்.''

''மறுபடியும் ஃபைட்டுக்கே வருவோம். எந்தப் படங்கள் பார்த்தாலும் ரோப் கட்டி தூக்கி பறந்தடிச்சுப் பந்தாடுற ஃபைட்டுகளாவே இருக்கே... எப்போதான் சார் இதெல்லாம் மாறும்?''''

''படத்துக்கு என்ன தேவையோ அதைத்தான் பண்ண முடியும். ஆனா, இப்ப மெள்ள மெள்ள இந்த ஸ்டன்ட் கலாசாரம் மாறிட்டுத்தான் இருக்கு. நான் வந்த இந்த 10 வருஷத்துலயே கிட்டத்தட்ட                  40 சதவிகிதம் மாறிடுச்சு. பத்தாது, இன்னமும் மாறணும். இங்கேயும் 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ மாதிரி அனல் பறக்கும் ஸ்டன்ட்டுகளை வடிவமைக்க முடியும். அந்தத் திறமையும் உழைப்பும் நம்மகிட்ட இருக்கு.

அடி தூள் பறக்குது... கவலை கண்ணை மறைக்குது !

ஆனால், அவங்களுக்கு உலகளாவிய வியாபாரம் இருக்கு. நமக்கோ அந்த வியாபார ஏரியா சின்னது. தவிர, நாம எந்தக் கலாசாரத்துல இருக்கோமோ, அதைத்தான் சண்டைகள்ல காட்ட முடியும். என்னைப் பொறுத்தவரை கதையை மீறி வேலை செய்யக் கூடாதுங்கிறதுல தெளிவா இருக்கேன். இப்ப அப்படி கதையையும் தாண்டாம ஃபைட்ல எகிறி அடிச்சிருக்கோம்னா அது 'புலி’. இதுல சண்டைக் காட்சிகளை மட்டும் 84 நாட்கள் எடுத்திருக்கோம். நீங்க கேட்ட அதே சேஞ்ச், ஹாலிவுட் ரேஞ்ச் எல்லாம் இதுல இருக்கும்.''

"''மறக்க முடியாத சண்டைக் காட்சினா எதைச் சொல்வீங்க?''

''எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் பண்ணிருப்போம். ஆனாலும், சமயங்கள்ல கண்ணு முன்ன ஆக்ஸிடென்ட் நடக்கபோவுது, அடிபடப்போகுதுனு தெரியும். ஆனாலும் தவிர்க்க முடியாதே. ஏன்னா, ஸ்டன்ட் கலைஞர்களைப் பொறுத்தவரை ஆக்ஸிடென்ட் எல்லாம் வெறும் இன்ஸிடென்ட்தான். ஒரு குண்டூசி அளவு மாறினாலும் விபத்து நடக்க இங்க வாய்ப்புகள் அதிகம்.

அடி தூள் பறக்குது... கவலை கண்ணை மறைக்குது !

'ஐ’ படத்துல விக்ரமும் ஏமி ஜாக்சனும் வளைவான மலைப்பகுதியில் கார் ஓட்டிட்டு வர்ற மாதிரியான ஒரு காட்சி. சேஸிங்கோ, அடிதடி சீனோ கிடையாது. கார் ஓட்டிட்டு வந்து வளைவுல திரும்பணும் அவ்வளவுதான். கொடைக்கானல் வளைவுகள் ஒண்ணுல அந்த ஷாட்டை எடுத்துட்டிருந்தோம். விக்ரமுக்கு என் தம்பி தினேஷ் சுப்பராயனும், ஏமிக்கு கிஷோர்னு ஒரு பையனும் டூப். வந்த காரை காணலை. கண் இமைக்கும் நேரத்துல 'டம்... டம்... டம்...’ எனச் சத்தம் மட்டும் கேட்குது. வளைவுல எட்டிப் பார்த்தா, கார் வேகமாக அந்தப் பள்ளத்தில் பெல்டி அடிச்சுப் புரண்டுட்டு இருக்கு. கிட்டத்தட்ட 200 மீட்டர் உருண்டுருச்சு. கார்ல ஃபுல்லா பெட்ரோல் வேற. எங்க வெடிச்சிருமோனு பயம். என்ன பண்றதுன்னே தெரியலை. அடிச்சுப்பிடிச்சு ஓடிப்போய் பார்த்தா கார் நசுங்கிய நிலையில அப்படியே ஒரு மேடுல தொத்திக்கிட்டுக் கிடக்கு. ரெண்டு பேரும் அடியில மாட்டிக்கிட்£ங்க. அவங்களை மேல ஏத்திவிட்டுட்டு அந்தப் பள்ளத்தை எட்டிப் பார்த்தப்பதான் தெரிஞ்சது, இன்னொரு முறை உருண்டிருந்தா 2,000 அடி செங்குத்தான பெரிய பள்ளத்தாக்கு. ரெண்டு பேரும் இப்ப உயிரோடு இருந்திருக்க மாட்டாங்க'' (பேசும்போதே கண்கள் கலங்குகின்றன) ''கடவுள் அருளால் ரெண்டு பேருக்கும் அன்னைக்கு ஒண்ணும் ஆகலை. 'என்ன ஆச்சு?’னு கிஷோர்கிட்ட கேட்டேன், 'கொஞ்ச நேரத்துல அப்பா கண்ணு முன்னாடி வந்துட்டுப்போயிட்டாங்க மாஸ்டர்’னு சிரிச்சுட்டே சொன்னான். ஏன்னா இதே கிஷோரின் அப்பா லோகுவும் ஒரு ஃபைட்டர்தான். 'வேட்டையாடு விளையாடு’ க்ளைமாக்ஸ் கார் ஸ்டன்ட் பண்ணும்போது, முதுகெலும்பு உடைஞ்சு இறந்துட்டார். ஆனா, கிஷோரும் இன்னைக்கு ஃபைட்டர். இதுதான் பைட்டர்களின் ரியல் லைஃப்.''

''''ஃபைட்டர்களோட பொருளாதாரச் சூழல் எப்படி இருக்கு?''''

''போராட்டம்தான். ஒரு ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட் ஒரு நாளைக்கு 3,500 ரூபாய் வாங்குறார். முதல் டேக்லயே ஓ.கே பண்ணாலும் அதே காசுதான். 50-வது டேக்ல ஓ.கே பண்ணாலும் அதே காசுதான். ஆனா, பாலிவுட் உள்பட மற்ற வுட்களில் ஒவ்வொரு முறை ஸ்டன்ட் பண்ணுறதுக்கும் தனி பைசா. முன்னாடி ஃபைட்டர்ஸ் கிடைக்காம அல்லாடுவோம். ஹீரோ கால்ஷீட் வாங்கிறது மாதிரியே ஃபைட்டர்களிடமும் வாங்கிருவோம். ஆனா, இப்ப நிலைமை தலைகீழ். சில பிரச்னைகளால வெளிமாநிலப் படங்கள் பண்றது குறைஞ்சிருச்சு. 'எங்களைக் கூப்பிடுங்க மாஸ்டர்’னு ஃபைட்டர்கள் வாய்ப்புக்குப் போட்டி போடுறாங்க. படத்தைப் பொறுத்து 15-ல் இருந்து 80 நாட்கள் வரை வேலை இருக்கும். தொடர்ந்து படங்களும் கிடைக்கணும். அப்படியே கிடைச்சாலும், அடிபடாமல் ஆரோக்கியமா இருக்கணும். எல்லாமே நல்லபடியா இருந்தா, எந்தப் பிரச்னையும் இல்லை. ஒரு சின்ன விபத்து, அவங்களை மட்டும் இல்லாம அவங்களை நம்பி இருக்கும் குடும்பத்தையும் புரட்டிப்போட்ரும். அந்தச் சூழலைத்தான் மாத்தணும்; மாறும்னு நம்பிக்கை இருக்கு!''

''"உங்க வேலைக்கு, மனைவிகிட்ட என்ன ரியாக்ஷன்?''

''என் மனைவி கார்த்திகா. ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ஃப்ரெண்ட்ஸ். காதல் கல்யாணம். அஞ்சு வயசுப் பொண்ணு நட்சத்திரா. பையன் ஆரவ்க்கு ரெண்டு வயசு. இப்பவே டிஷ்யூம் டிஷ்யூம்னு என்னை பன்ச் பண்றார். தம்பி தினேஷ் சுப்பராயன், எனக்கு உதவியா இருக்கார். அவருக்கும் இயக்குநர் ஆகணும்னு ஆசை. எங்க குடும்பமே சினிமாவில் இருப்பதால், ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கவே நேரம் கிடைக்கிறது இல்லை. வீட்டுல எல்லாரும் ஒண்ணு சேர்ந்தால், அன்னைக்குத் திருவிழாதான்!''