Published:Updated:

"சிவகார்த்திகேயனுக்கு தெரியும்னு எனக்குத் தெரியாது !”

பா.ஜான்ஸன்

"சிவகார்த்திகேயனுக்கு தெரியும்னு எனக்குத் தெரியாது !”

பா.ஜான்ஸன்

Published:Updated:

'பெங்களூரு டேஸ்’ தமிழ் ரீமேக், கார்த்தியுடன் 'காஷிமோரா’ என அடுத்த லெவலுக்குப் பாய்ந்துவிட்டார் 'ஊதா கலரு ரிப்பன்’ பொண்ணு ஸ்ரீதிவ்யா! 

''தெலுங்கு... அப்புறம் தமிழ்னு ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சு அஞ்சு வருஷம்தான் ஆகியிருக்கு. அதுக்குள்ள நிறைய நல்ல விஷயங்கள் கத்துக்கிட்டேன். நடிப்புல கத்துக்கிட்டதைவிட, பிரபு சார், சத்யராஜ் சார், சிவகார்த்திகேயன்னு சக நடிகர்கள்கிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான் அதிகம். டான்ஸ்ல நிறைய முன்னேறியிருக்கேன். அதுவும் 'காக்கி சட்டை’ படத்துல 'கட்டிக்கிடும் முன்னே நாம...’னு செம குத்துப் பாட்டு. 'பாட்டு முழுக்க நீங்கதான் கெட்ட ஆட்டம் போடணும்’னு பிருந்தா மாஸ்டர் சொன்னதும் பயந்துட்டேன். ஏன்னா, அவ்வளவும் ஹெவி ஸ்டெப்ஸ். அப்புறம் பொறுமையா ஒவ்வொரு ஸ்டெப்பா கத்துக்கிட்டு ஆடினேன். இப்போ டி.வி-யில அடிக்கடி அந்தப் பாட்டைப் பார்க்கிறப்ப பிருந்தா மாஸ்டருக்கு மனசுக்குள்ளயே நன்றி சொல்லிப்பேன். அப்படியே சினிமாவுக்கும்.''

'' 'பெங்களூரூ டேஸ்’ படத்துல நஸ்ரியா கலக்கியிருப்பாங்க. ரீ-மேக்ல அதே ஃபீலைக் கொண்டுவந்துருவீங்களா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எனக்கும் அதே பயம்; தயக்கம்தான்.  ஒவ்வொரு சீன்லயும் நஸ்ரியா அவ்ளோ ஸ்கோர் பண்ணியிருப்பாங்க. அவங்க கேரக்டரைச் சுத்தித்தான் மொத்தப் படமும் நகரும். 'இதை ரீ-மேக்னு நினைக்காதீங்க. புதுப் படம்னு நினைச்சுட்டு உங்க ஸ்டைல்ல பண்ணுங்க’னு உற்சாகப்படுத்தினார் இயக்குநர் பாஸ்கர். அப்புறம் ஜாலியா நடிக்க ஆரம்பிச்சுட்டேன். அதுக்கு ஏத்த செட்டும் ஸ்பாட்ல அமைஞ்சிருச்சு. படத்துலதான் நான் முக்கியமான கேரக்டர். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல என்னை காமெடி பீஸாக்கி ஆர்யா, ராணா, பாபினு எல்லாரும் மாத்தி மாத்திக் கலாய்க்கிறாங்க.''

   "சிவகார்த்திகேயனுக்கு தெரியும்னு எனக்குத் தெரியாது !”

''உங்களுக்குப் பிடிச்ச ஹீரோயின்ஸ்கிட்ட பிடிச்ச விஷயங்கள் என்ன?''

''ஒவ்வொரு ஹீரோயின்கிட்டயும் ஒவ்வொரு விஷயம் பிடிக்கும். சமீபத்தில் ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணது, 'தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்’ கங்கணா. நான் ஹீரோயினா நடிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இருந்தே அவங்க ஃபேன். நடிக்கிற ஒவ்வொரு படத்துலயும் அசத்திருவாங்க. 'தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்’ படத்துல கங்கணாவுக்கு டபுள் ரோல். க்ளைமாக்ஸ்ல ஒரு கங்கணா இன்னொரு கங்கணாவுக்கு ஆதரவாப் பேசுற மாதிரி ஒரு காட்சி. அந்த ரெண்டு கேரக்டரையும் வித்தியாசப்படுத்த அவங்க கொடுத்த எக்ஸ்பிரஷன், ரியாக்ஷன், கெட்டப் எல்லாம்... சான்ஸே இல்லை... மிரட்டிட்டாங்க.''

''உங்க ரோல்மாடல் கங்கணா, கிளாமர் பெர்ஃபாமன்ஸ்னு கலக்குவாங்க. ஆனா, நீங்க ஹோம்லி ஹீரோயினா செட்டில் ஆகிட்டீங்களே?''

''கிளாமர் ரோல் பண்ணக் கூடாதுனு இல்லை. 'டர்ட்டி பிக்சர்’ல வித்யா பாலன் கிளாமரா நடிக்க ஒரு தேவை இருந்தது. அதே வித்யா பாலன் 'கஹானி’யில் கர்ப்பிணியா அசத்தியிருப்பாங்க. அப்படித் தேவைப்பட்டா, நானும் எந்த ரோலிலும் நடிப்பேன்.''

''சமீபத்தில் யார் மேல் கோபப்பட்டீங்க?''

''சிவகார்த்திகேயன்கூட ரெண்டு படங்கள் நடிச்சுட்டேன். ஆனா, ஒரு விஷயத்தை அவர் எனக்குத் தெரியாமலே மறைச்சுட்டார். இப்போ ஒரு நிகழ்ச்சியில் நான் மேடையில நின்னுட்டு இருந்தப்ப திடீர்னு ஸ்பீக்கர்ல ரஜினி சார் குரல் கேட்டது. 'அட... அவர் வந்திருக்காரா?!’னு அதிர்ச்சியும் ஆச்சர்யமுமா திரும்பிப் பார்த்தா, சிவகார்த்திகேயன் ரஜினி சார் குரல்ல மிமிக்ரி பண்ணிட்டிருக்கார். சத்தியமா அவர் இவ்ளோ நல்லா மிமிக்ரி பண்ணுவார்னு எனக்குத் தெரியாது. முதல்ல ஆச்சர்யமா இருந்தாலும், அப்புறம் சின்ன கோபம் வந்தது. எவ்ளோ நல்ல ஃப்ரெண்ட்... இதைச் சொல்லாமலே இருந்திருக்காரேனு. இப்படி சின்னச் சின்னதாதான் எனக்குக் கோபம் வரும். அதுவும் சீக்கிரம் மறைஞ்சிரும்.''

''முன்னாடிலாம் ஒரு ஹீரோயின் பல வருஷம் ஃபீல்டுல ஸ்ட்ராங்க இருப்பாங்க. ஆனா, இப்போலாம் அப்படி இருக்க முடியிறதில்லையே..! நீங்க எத்தனை வருஷம் ஃபீல்டுல இருப்பீங்கனு நினைக்கிறீங்க?''

''அப்படிலாம் நான் எந்தக் கணக்கும் வைச்சுக்கலை. இன்னிக்கு ஷூட்டிங்ல நல்லா நடிச்சுக் கொடுக்கணும். அவ்ளோதான் எனக்கு!''

''கொடுத்த/வாங்கிய பரிசுகளில் மறக்க முடியாதது?''

''அம்மாவோட பிறந்த நாளுக்கு ஒரு சேலை வாங்கிக் கொடுத்தேன். சந்தோஷத்துல பூரிச்சுப்போயிட்டாங்க. நான் வாங்கின பரிசுன்னா... ம்ம்... அம்மா கொடுத்த மோதிரம். அது எனக்கு ரொம்ப சென்டிமென்ட். ஆனா, எங்கேயோ காணாமப்போச்சு. ப்ச்!''

''சமீபத்தில் என்ன கத்துக்கிட்டீங்க?''

''கத்துட்டே இருக்கேன்... கார் டிரைவிங்.''

''நடிப்பு தவிர, கைவந்த கலை?''

''ஆந்திரா ஸ்பெஷல் 'சிக்கன் கறி’ சூப்பரா சமைப்பேன்.''

''இப்போதைய உங்க மனநிலைக்கு ஃபேஸ்புக்ல என்ன ஸ்டேட்டஸ் போடுவீங்க?''

''கீப் ஸ்மைலிங்!''