Published:Updated:

போர்... போர்... போர் !

பா.ஜான்ஸன்படம்: கே.ராஜசேகரன்

போர்... போர்... போர் !

பா.ஜான்ஸன்படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:

ந்தியத் திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்திருக்கும் சினிமா... 'பாகுபலி’! 

ஸ்டைல், ஃபேன்டசி, கமர்ஷியல்... என அனைத்தும் கலந்துக்கட்டிய பேக்கேஜில் படம் எடுக்கும் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'ட்ரீம் புராஜெக்ட்’ இது! இவர் இயக்கும் ஒவ்வொரு படமும், பல மொழிகளில் டப்பிங், ரீமேக் செய்யப்பட்டு பம்பர் ஹிட்டடிக்கும். இந்த முறை தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் 'பாகுபலி’ படத்தை ஒரே நேரத்தில் படமாக்கியிருக்கிறார். '250 கோடி பட்ஜெட்’ என, செய்திகள் படபடக்கும் சினிமா பற்றி சில டிட்பிட்ஸ்..!

போர்... போர்... போர் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சகோதரர்களான பிரபாஸ்- ராணா இருவரும் தத்தமது நாட்டை இரும்புக் கோட்டையாக ஆள்கிறார்கள். அவர்களுக்குள் மூளும் பகையும் அதற்கான தீர்வும்தான் படத்தின் கதை. படம் இரண்டு பாகங்களாகத் தயாராகியிருக்கிறது.

போர்... போர்... போர் !

 ஆந்திர சினிமாவில் பவன் கல்யாண், மகேஷ் பாபு... ஆகியோரைப்போல தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்டவர் பிரபாஸ். பல பட கால்ஷீட்களை ஒதுக்கி, இந்தப் படத்துக்காக வருடக்கணக்கில் நடித்திருக்கிறார்.

போர்... போர்... போர் !
போர்... போர்... போர் !

 'ஹீரோவாக நடிக்கத் தொடங்கி சில வருடங்கள்தான் ஆகின்றன. அதற்குள் நெகட்டிவ் வேடமா?’ என முதலில் தயங்கியிருக்கிறார் ராணா. ஆனால், முழுக் கதையையும் கேட்ட பின்னர் மிரண்டுபோய், 'இந்தப் படத்தில் நடித்தால் அந்த கேரக்டரில்தான் நடிப்பேன்’ என அழுத்தமாகச் சொல்லிவிட்டாராம்.

போர்... போர்... போர் !

 'பாகுபலி’ என்றால் 'பலமான, தினவெடுத்த கைகள்’ என அர்த்தமாம். படத்தின் தலைப்புக்கு நியாயம் செய்வதற்காக பிரபாஸ், ராணா இருவரும் ஒவ்வொரு ஷாட்டின் இடைவெளியிலும் தம்ப்ள்ஸ், புல்-அப்ஸ் எடுத்து, கைகளை இறுக்கி முறுக்கிய பிறகே நடிப்பார்களாம்.

போர்... போர்... போர் !

 படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் செட் தயாரானதில் இருந்து நடிகர்களின் பயிற்சியும் ஆரம்பமாகிவிடுமாம். இரண்டு நாட்களுக்குப் பின்னர் எடுக்கவிருக்கும் காட்சிகளுக்கு, செட்டுக்குள்ளேயே அத்தனை நடிகர்களும் நடித்து பயிற்சி எடுத்திருக்கிறார்கள். ரிகர்ஸலில் முழுத் திருப்தி உண்டான பிறகே, ஷூட்டிங் தொடங்குமாம்!

போர்... போர்... போர் !
போர்... போர்... போர் !

 பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர்... என, படத்தின் பிரதான நட்சத்திரங்கள் அனைவரும் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் இந்தப் படத்துக்காக ரிகர்ஸல், நடிப்பு, டப்பிங்... என உழைத்திருக்கிறார்கள்.

போர்... போர்... போர் !

 'தாடி, மீசை ஒட்டிக்கொண்டு நடிக்க மாட்டேன்’ என்ற முடிவில் இருந்த சத்யராஜ், இந்தப் படத்துக்காக அந்த வைராக்கியத்தைக் கைவிட்டிருக்கிறார்.

போர்... போர்... போர் !

 படத்தில் பல சமயம் போர் நடக்கும். அது நடக்காதபோது வார்த்தைப் போர் நடக்குமாம். அப்படியான சூழ்நிலைகளுக்கான வசனங்களை, மதன் கார்க்கி நான்கு விதங்களில் எழுதிக் கொடுப்பாராம். அது ஒவ்வொன்றையும் பேசிப் பார்த்து, உச்சரிக்கும்போது எது நச்செனப் பொருந்தியதோ, அதை ஃபைனல் ஸ்க்ரிப்ட்டில் சேர்த்திருக்கிறார்கள்.

போர்... போர்... போர் !

 ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தன் படத்தின் படப்பிடிப்புக்காகப் போன சூர்யா, அங்கு இருந்த 'பாகுபலி’ படத்தின் செட்டைப் பார்த்து அசந்துவிட்டாராம். அந்த செட் மற்றும் போர் வீரர்கள் கெட்டப்பில் இருந்த ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளுடன் படம் எடுத்துக்கொள்ள சூர்யா விரும்பியிருக்கிறார். படக் குழுவினரே அந்தப் பின்னணியில் சூர்யாவைப் படம் எடுத்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் படங்களை இன்னும் சூர்யாவுக்குத் தரவில்லையாம் ராஜமௌலி. 'ஒரு டிஸ்னி லேண்டுக்குள்ள போயிட்டு வந்த மாதிரி இருந்தது. அநேகமா 'பாகுபலி மிமி’-வும் வெளியான பிறகுதான் ராஜமௌலி அந்தப் படங்களைத் தருவார்னு நினைக்கிறேன்’ என சூர்யா சொல்ல, அப்போதும் 'ஆமாம்... இல்லை...’ என எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார் ராஜமௌலி!