Published:Updated:

"இது காமெடி வெடி !”

ம.கா.செந்தில்குமார்

"இது காமெடி வெடி !”

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:

''நீங்க வாழ்க்கையில என்ன வேணும்னாலும் ஆகணும்னு கனவு காணுங்க. ஆனா, இருக்கிறதை விட்டுட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்படாதீங்க. இருக்கிறதை வெச்சு சந்தோஷமா இருந்துட்டே, அடுத்த உயரம் தொட படிப்படியா உழைப்பைக் கொட்டுங்க. இதான் மெசேஜ்'' எனச் சொல்லிவிட்டு முகம் பார்க்கிறார் சந்தானம். 

''ஓ.கே... இது உங்க பாலிசி. படத்தோட லைன் என்ன?'' எனக் கேட்டால், ''படத்தோட மெசேஜ்தான் இது. எப்படி... ரீலையும் ரியலையும் மேட்ச் பண்ணோமா?'' எனச் சிரிக்கிறார். ஸ்கின் டோனிங், பாடி டியூனிங் என ஆளே அலேக்காக மாறியிருக்கிறார் 'இனிமே இப்படித்தான்’ படத்துக்காக!

''சார்லி சாப்ளின் படங்களில் அவர் என்னதான் செமத்தியா டான்ஸ் பண்ணாலும், நாம காமெடியாத்தான் பார்ப்போம். அப்படி இல்லாம ஒட்டுமொத்தமா 'சேஞ்ச்-ஓவர்’ காட்டணும்னு ஆசை. அதான் டான்ஸ், ஃபைட்னு ஒண்ணுவிடாம இஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டேன். ஜிம், சைக்கிளிங், டயட்... செம கன்ட்ரோல் பாஸ்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

   "இது காமெடி வெடி !”

''உங்களுக்கு காமெடி ஸ்க்ரிப்ட் எழுதிட்டு இருந்தவங்களையே டைரக்டர் ஆக்கிட்டீங்களா?''

''நான் இன்னைக்கு இந்த அளவுக்கு நல்லா இருக்கேன்னா அதுக்குக் காரணம், 'சந்தானம் நல்லா இருக்கணும்’னு நினைக்கிற நண்பர்கள், அவங்க குடும்பங்கள், என் உறவினர்கள், ஊர்க்காரர்கள்தான். அப்படி என் டீம்ல இருக்கிற முருகன், ஆனந்த் ரெண்டு பேரையும் 'முருகானந்த்’ங்கிற பேர்ல இந்தப் படத்துல இயக்குநர்களா அறிமுகப்படுத்துறேன். என் அடுத்த படத்தை இயக்கப்போறவர் என் டீம் நண்பர் சேது. நம்மளைச் சுத்தி கரிச்சுக்கொட்டாத நல்ல மனசுக்காரங்க இருந்தாலே, நாம தன்னால நல்லா வருவோம்.''

''சிம்பு, ஆர்யா, உதயநிதினு உங்ககூட காமெடி பண்ணக் காத்திருக்கும் ஹீரோக்கள் என்ன சொல்றாங்க?''

'' 'நீங்க காமெடி ஹீரோ கிடையாது; ஹீரோ. காஸ்ட்யூம்ஸ் இப்படித்தான் இருக்கணும்’னு சிம்பு வழக்கம்போல வழிகாட்டுவார். ஆர்யா மாதிரி ஒரு நண்பனைப் பார்க்க முடியாது. ட்விட்டர்ல, 'சந்தானம் ஹீரோவாகிட்டார். அப்ப 'வாசுவும் சரவணன்...’ படத்துல நீங்க யாரு?’னு ஆர்யாகிட்ட கேட்டிருக்காங்க.

கொஞ்சமும் யோசிக்காம, 'நான் காமெடியன்’னு பதில் சொல்லியிருக்கான். அதுபோக அந்த அயர்ன் மேன்தான் என் ஃபிட்னஸ் குரு.

பட ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடந்தப்ப, சென்னையில் இருந்து பாண்டிக்கு சைக்கிள்லயே வந்திருவான். அவனைப் பார்த்துதான் நானும் சைக்கிளிங் ஆரம்பிச்சேன். இந்தந்த நேரம் இந்தந்த வேலை செய்யணும்னு, படத் தயாரிப்பில் நமக்கு உதயநிதிதான் எப்பவும் வாத்தியார். இப்படியான நண்பர்கள் இருந்தா போதும் பிரதர்... சினிமாவுல யாரும் ஹீரோ ஆகிடலாம்.''

   "இது காமெடி வெடி !”

''நீங்க ஹீரோ ஆகிட்டதால, தம்பி ராமையா, வி.டி.வி கணேஷ், மனோகர்னு படத்துல ஏக காமெடி பட்டாளம்போல!''

''பின்னே... ஒவ்வொரு சீனும் தெறிக்கணும்ல! தம்பி ராமையா அண்ணன் செம ரகளை. பேசிட்டு இருக்கும்போதே குதிரை கனைக்கிற மாதிரி திடீர்னு ஒரு பாடிலாங்வேஜ் பிடிச்சார். அட்டூழியம்! கணேஷ§க்கு இதுல டெய்லர் கேரக்டர். 'டேய் தம்பி... நான்லாம் ஒரு காலத்துல உண்மையிலேயே டெய்லரா இருந்தவன்டா’னு சொன்னார். தத்ரூபமா இருக்கட்டும்னு ஒரிஜினல் டெய்லர் கடையிலேயே அவரை உட்காரவெச்சு ஷூட் பண்ணோம். மனுஷன் சுழியை அடக்கிட்டு சும்மா இருக்கணும்ல. அந்தக் கடையில இருந்த துணிகள்ல தாறுமாறா கத்தரி போட்டுட்டார். அதுல தன் கல்யாணத்துக்கு கோட்சூட் தைக்கக் கொடுத்திருந்த ஒருத்தரோட துணி சல்லிசல்லியா ஆகிருச்சு. வெட்டிப்போட்ட பிட்டுல ஒண்ணை சென்னைக்கு எடுத்துட்டு வந்து, கடைகடையா ஏறி இறங்கி, அதே கலர்ல துணி வாங்கி அனுப்பி, கடைக்காரரைச் சமாதானப்படுத்தினார். இவங்களைத் தவிர 'சமையல் மந்திரம்’ டாக்டரை வெச்சு ஒரு சூப் போர்ஷன் பண்ணியிருக்கோம். இப்படி படத்துல அத்தனை சீன்லயும் கதையும் இருக்கும்... காமெடியும் இருக்கும்... நம்ம டீமும் இருக்கும்!''