Published:Updated:

தரை லோக்கல் தனுஷ் ...

ம.கா.செந்தில்குமார்

''மூணு கதைகளின் ஃபைல்களை, தனுஷ் சார்கிட்ட கொடுத்துட்டு வந்தேன். அதுல ரெண்டு கதைகள் பொதுவானது. ஒரு கதை அவரை மட்டுமே மனசுலவெச்சு எழுதினது. அது எதுனு

தரை லோக்கல் தனுஷ் ...

அவர்கிட்ட நான் சொல்லலை. ஆனா, அவரை மனசுல வெச்சு எழுதின கதையைத்தான் தேர்ந்தெடுத்தார் தனுஷ். 'எப்படிக் கச்சிதமா கணிச்சீங்க?’னு அவர்கிட்ட கேட்டதுக்கு, சிரிப்பை மட்டுமே பதிலா கொடுத்தார். 

பட வேலைகள் ஆரம்பிச்ச பிறகு, இந்தி, தமிழ்ல மாறி மாறி ஹிட்னு தனுஷ் சார் ரேஞ்ச் எங்கேயோ போயிருச்சு. அது என் பொறுப்பை இன்னும் அதிகமாக்கியது. 'எப்படி என்னை நம்பி படம் பண்ணச் சம்மதிச்சீங்க?’னு கேட்டப்போ,  'சிலர்கிட்ட வைப்ரேஷன் கரெக்ட்டா இருக்கும்; நம்பிக்கை வரும். உங்ககிட்ட அது இருந்துச்சு’னு சொன்னார்.  

இப்போ எடிட் முடிஞ்சு முழுப் படத்தையும் பார்த்த பிறகு, 'பரவாயில்லைங்க... நிஜமாவே நல்லாவே எடுத்திருக்கீங்க’னு சொன்னார். 'ஐயோ... கடைசி வரைக்கும் என்னை நம்பாம எப்படிப் படம் கொடுத்தீங்க?’னு அதே ஆச்சர்யத்தோட கேக்கிறேன்... இப்பவும் அதே மாதிரி சிரிக்கிறார்'' - நினைத்து நினைத்துச் சிரிக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். 'மாரி’ படத்தில் தனுஷை தரை டிக்கெட் லெவலுக்கு வேற 'மாரி’யாகக் காட்டியிருக்கும் உற்சாகத்தில் திளைக்கிறார்.

''படத்துல புறா ரேஸ் கதை, அது இதுனு ஏகப்பட்ட யூகங்கள்... எங்களுக்கே தெரியாத வியூகங்கள் உலவுது. ஆனா, படத்துல புறா ரேஸ், ஒரு சின்ன போர்ஷன்தான். டைட்டில்லகூட ரெண்டு றெக்கைகள் செருகினது அதுக்குத்தான். மத்தபடி படம் செம ஃப்ரெஷ்; சூப்பர் மாஸா இருக்கும்.

தரை லோக்கல் தனுஷ் ...

'காதல் கொண்டேன்’ படம் சமயத்துல இருந்தே நான் தனுஷ் சாரின் தீவிர ரசிகன். அவரை படம் முழுக்க லோக்கலா பார்க்கணும்னு ஒரு ரசிகனா நான் ஆசைப்பட்டேன். நான் எப்படி எல்லாம் ஆசைப்பட்டேனோ, அதை 'மாரி’ மூலமா நிறைவேத்திக்கிட்டேன். நாம சில ஆக்ஷன், ரியாக்ஷன்ஸ் யோசிச்சு சில சீன்ஸ் எழுதியிருப்போம். 'வசனத்துல இதெல்லாம் பேசினாத்தான் ரசிகர்களுக்குப் புரியும்’னு சில சங்கதிகள் சேர்த்திருப்போம். ஆனா, தனுஷ் சார் ஃப்ரேம்ல வந்து நின்னார்னா,  அதெல்லாம் தேவையே இல்லைனு ஆகிடுது. 'ஆக்ஷன்’னு சொன்னதும் ஒரு லுக், ஒரு அதட்டல், சின்ன முறைப்புலயே எல்லாத்தையும் பாஸ் பண்ணிடுறார். 'ஆஹா... இப்படி எல்லாம் நடிச்சுட்டா வசனமே தேவைப்படாம காட்சியின் நீளம் குறையுமே... படத்துல இன்னும் விஷயங்கள் சேர்க்கலாமே’னு புரிஞ்சது. தனுஷ்... தனுஷ்தான்.''

தரை லோக்கல் தனுஷ் ...

''தனுஷூக்கு 'டங்காமாரி’ பாடல் ஹிட் ஆனதுனால, 'மாரி’னு தலைப்பு பிடிச்சுட்டீங்களா?''

''நம்புங்க... அப்படி எதுவும் இல்லை. 'ஹீரோ பேர்தான் டைட்டில்’னு ஃபிக்ஸ் பண்ணிட்டு நிறையப் பெயர்களை சாய்ஸ்ல சேர்த்தோம். அப்படி பேர் யோசிக்கும்போதுதான், 'மாரியப்பன், மாரியம்மாள்’னு நிறைய 'மாரி’கள் இங்க இருக்காங்கனு தெரிஞ்சுது. 'மாரி’னு சொல்லும்போது தமிழ்நாட்டு நேட்டிவிட்டியோடு இருந்தது.

' 'மாரி’ எப்படி இருக்கு?’னு தனுஷ் சார்கிட்ட கேஷூவலா கேட்டேன். அப்போ 'டங்காமாரி’ பாட்டு பத்தி யாருக்கும் தெரியாது. ஆனா, நான் அதைப் பத்தி

தெரிஞ்சுக்கிட்டுத்தான் இந்தப் பேரைச் சொல்றேன்னு நினைச்சுட்டு, 'இந்தப் பேர் யாரோட சாய்ஸ்?’னு கேட்டார். 'நிறைய ஆப்ஷன்ல இதுவும் ஒண்ணு’னு சொன்னேன். 'எனக்கும் ஓ.கே’னு சொன்னார். அப்புறம்தான் 'டங்காமாரி’ வந்து ஹிட் அடிச்சது. 'நாம வேணும்னா பேர் மாத்திரலாமா?’னு கேட்டேன். 'பரவாயில்ல... நம்ம தலைப்பு தனியா நிக்கும்’னு சொன்னார்... நின்னுருச்சு!''

தரை லோக்கல் தனுஷ் ...

''ஷூட்டிங் ஸ்பாட் காமெடி ஏதாவது..?''

''பொதுவா ஸ்பாட்ல 'டேக் ஓ.கே’னு சொன்னதும், 'சூப்பர் சார்... பின்னிட்டீங்க’னு நான் ஆர்ட்டிஸ்டோட நடிப்பைப் பாராட்டினது இல்லை; அடுத்த சீன் என்னன்னு ஓட ஆரம்பிச்சுடுவேன். எடிட்டிங்லதான் நிதானமா பெர்ஃபார்மன்ஸை ரசிப்பேன். ஸ்பாட்ல இதைக் கவனிச்சுட்டே இருந்த தனுஷ் சார், 'ஏங்க நான் நல்லா பண்ணியிருக்கேனா... இல்லையா? எதுவுமே சொல்லவே மாட்டேங்கிறீங்க. அப்படி ஏதாவது சொன்னாதானே ஒரு நடிகனுக்கு உற்சாகமா இருக்கும்?’னு வாரிட்டே இருந்தார். அதனால அப்பப்ப ஞாபகப்படுத்தி, 'நல்லா இருந்துச்சு சார்’னு நான் சொல்ல, 'நான் சொன்னதுக்காக, சும்மா ஃபார்மாலிட்டிக்குத்தானே சொல்றீங்க?’னு அதுக்கும் கிண்டலடிப்பார். இப்படி ஏதாவது கேலி ஜாலி பண்ணிட்டே இருப்பார்.

ஏ.டி.எம் மாதிரி காஜல் அகர்வால் ஒரு 'எனிடைம் எனர்ஜி மெஷின்’. ஒவ்வொரு நாளும் முந்தைய நாளைவிட உற்சாகமா வருவாங்க. படத்துல அவங்க புறாக்களைத் தொட்டுத் தூக்கி கொஞ்சுற காட்சிகள் இருக்கு. ஆனா, அவங்களுக்குப் புறாக்களைத் தொடவே பயம். அப்புறம் ஒருமாதிரி சமாளிச்சு, திக்திக் மனசோடு புறாவை கையில பிடிக்கக் கத்துக்கிட்டாங்க. 'ஆக்ஷன்’ சொன்னதும் புறாவை கையிலவெச்சுட்டு வழக்கமான சேட்டை பண்ணி நடிச்சிருவாங்க. 'கட்’ சொன்ன அடுத்த நொடியே, டக்குனு புறாவை கை மாத்திருவாங்க. 'இதுவரைக்கும் நாமதான் இந்தப் புறாவை கையில வெச்சிருந்தோமா?’ங்கிற மாதிரி ஒரு மெர்சல் லுக் கொடுப்பாங்க... பாருங்க. 'புறாவுக்கே புறமுதுகு காமிச்சுட்டீங்களே...’னு செம்ம்ம்ம கலாய்!''

தரை லோக்கல் தனுஷ் ...

''ஏற்கெனவே தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு நடுவுல 'சம்திங் ராங்’னு சொல்லிட்டிருக்காங்க. இதுல 'மாரி’ ரிலீஸ் அன்னைக்குத்தான் சிவகார்த்திகேயன் நடிச்ச 'ரஜினி முருகன்’ படமும் ரிலீஸ். இது என்ன ப்ளான்?''

''ஜூலை மாசம் 17-ம் தேதி படம் ரிலீஸ்னு ஃபிக்ஸ் பண்ணக் காரணம், 'வேலையில்லா பட்டதாரி’ போன வருஷம் ஜூலை 18-ம் தேதி ரிலீஸ் ஆச்சு. சென்டிமென்டா அந்தத் தேதியை ஒட்டின வெள்ளிக்கிழமை படம் ரிலீஸானா நல்லா இருக்கும்னு பண்றோம். மத்தபடி வேற எதுவும் கிடையாது!''