Published:Updated:

சைஸ் ஃபோர் அழகு போதும் எனக்கு!

இர.ப்ரீத்தி

சைஸ் ஃபோர் அழகு போதும் எனக்கு!

இர.ப்ரீத்தி

Published:Updated:
##~##

''வாவ்! நிச்சயம் சொல்லியே ஆகணும் ஸ்ருதி... முன்னைவிட இப்போ ரொம்ப அழகா இருக்கீங்க!''  

''ஹேய்ய்ய்ய்... அப்போ இதுக்கு முன்னாடி நான் அழகா இல்லையா?'' - அதட்டல் குரலில் மிரட்டிவிட்டு, சட்டெனக் குறும்பாகச் சிரிக்கிறார் ஸ்ருதி ஹாசன். சர்வதேச கலர் கொண்ட அக்மார்க் தமிழ் ஹீரோயின்!      

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'' 'ஏழாம் அறிவு’க்கு இப்பவே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு போல...''

''சும்மாவா? ஹீரோ, ஹீரோயின்ல ஆரம்பிச்சு லைட்பாய் வரை யார்கிட்ட என்ன பெஸ்ட்டோ அதைக் கொண்டுவந்திருக்கார் முருகதாஸ் சார். சும்மா பாட்டுக்கு மட்டும் வந்துட்டுப் போகாம, படம் முழுக்க நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். ஒவ்வொரு ஷாட்டும் சவால்தான்!

சூர்யா ஸோ ஸ்வீட். ஆரம்பத்தில் ரொம்ப நடுங்கிட்டேன். 'முகத்தில் நடுக்கத்தைக் காட்டக் கூடாது’னு அட்வைஸ் மட்டும் பண்ணாம, ஒவ்வொரு ஷாட்லயும் எனக்காகப் பொறுமையாக் காத் திருந்து, சமயங்களில் விட்டுக்கொடுத்து என் பயத்தைப் போக்கினார்!''

சைஸ் ஃபோர் அழகு போதும் எனக்கு!

''ரஜினி பொண்ணு - கமல் பொண்ணு சேர்ந்து '3’ படம் பண்றீங்க! ஃப்ரெண்ட்லி பழக்கம் தாண்டி ஈகோ மோதல் எதுவும்?''

''உண்மை சொல்லவா... இதுக்கு முன்னாடிலாம் ஐஸ்வர்யாவை எங்கேயாவது நிகழ்ச்சிகளில் சந்திக்கிறதோடு சரி. சும்மா 'ஹாய்... ஹவ் ஆர் யூ’னு விசாரிச்சுட்டு 'பை பை’ சொல்லிருவோம். ஆனா, இப்போ அவங்ககூட நிறைய நேரம் செலவழிக்கிறேன். சொல்லப்போனா, இப்பதான் நாங்க ரொம்ப ஃப்ரெண்ட்ஸ். ஒரு இயக்குநராக எந்தச்  சூழ்நிலையையும் அழகா சமாளிக்குறாங்க ஐஸ்வர்யா. ஸ்பாட்ல நான் ஒரு நடிகை, தனுஷ் நடிகர், ஐஸ்வர்யா இயக்குநர்... இவ்வளவுதான் மனசுல இருக்கும். வேலை மட்டும் மனசில் இருந்தா ஈகோவுக்கு அங்கே என்ன வேலை?''

''உங்க தங்கச்சி அக்ஷராவும் நடிக்கப்போறதா ஒரு தகவல். உண்மையா?''

''எனக்குத் தெரிஞ்சு அக்ஷரா இப்போதைக்கு அப்படி எந்த முடிவும் எடுக்கலை. டான்ஸில் மட்டும்தான் அவங்க முழுக் கவனமும் இருக்கு. அப்பாவைப் பொறுத்தவரை எங்களுக்கு அட்வைஸ் கொடுப்பார். நாங்க என்ன முடிவு எடுத்தாலும் அதுக்குக் குறுக்கே நிற்க மாட்டார். ஒரு அக்காவா என் தங்கச்சிக்கு

சைஸ் ஃபோர் அழகு போதும் எனக்கு!

ப்ளஸ், மைனஸ் சொல்வேன்!''

''ஏற்கெனவே நீங்க ரொம்ப ஸ்லிம். இப்போ 'சைஸ் ஜீரோ’ வேற ட்ரை பண்றீங் களாமே?''

''இது என்ன புதுக் கதை? நான் இப்பவே சைஸ் ஃபோர். இதுக்கு மேல நானே நினைச்சாலும் வெயிட் குறைக்க முடியாது. என் உடம்பு மேல மத்தவங் களைவிட எனக்கு அக்கறை அதிகம். சாப்பாட்டின் அருமை தெரியாதவங்க தான் டயட் அது இதுனு உடம்பைக் கெடுத்துக்குவாங்க. அதுவும் நம்ம ஊர் சாப்பாட்டின் அருமை கொஞ்ச நாளா வது வெளிநாட்டில் தங்கி இருந் தாத்தான் தெரியும். அங்கேலாம் நம்ம சாப்பாட்டை நாமதான் சமைக்கணும். அதனால, உங்க அடுத்த கேள்விக்கு இப்பவே நான் பதில் சொல்லிடுறேன்... ஸ்ருதிக்கு நல்லாவே சமைக்கத் தெரியும்!''